3/31/2015

| |

07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 உறுப்பினர்களுக்கு 500 மில்லியனும் என்றால் எப்படி கிழக்கு மாகான சபையில் சமத்துவம்?

நாளை நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை அமர்வில் எதிர்க்கட்சியாக தாம் செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எதிர்க்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் எந்த வித ஊழல்களும் இல்லாமல் சிறந்த முறையில் ஆட்சியை கொண்டுசெல்லும் வகையில் செயற்படுவதற்காக கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சியில் அமர தீர்மானித்ததாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தம்முடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதனால் நாளை நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 11 மாகாணசபை உறுப்பினர்கள் செயற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியை பிடிக்கவேண்டும் எண்ணத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உரமூட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழர்களின் விடுதலைஇ காணிப் பிரச்சினை பற்றி பேசுபவர்கள்இ மூன்று இனங்களையும் சேர்ந்தவர்கள் இணைந்து ஆட்சியமைப்பதற்கான சந்தர்ப்பத்தினை நழுவவிட்டுள்ளனர். இதனை தமிழ் மக்கள் இன்று
இவர்களின் ஆட்சி தொடர்பில் நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றோம். கிழக்கு மாகாணசபையில் அபிவிருத்தி நிதி 1600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டு அமைச்சுகளை கொண்டுள்ள முதலமைச்சருக்கும் சுகாதார அமைச்சருக்கும் 800 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை சேர்ந்த ஒருவருக்கு நூறு மில்லியனும்  மாகாண சபை உறுப்பினரக்கு 260 மில்லியனும்  11 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு 500 மில்லியநும் ஏனைய செலவுகளுக்கு 40 மில்லியன் ரூபாய்களுமாக  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 07 உறுப்பினர்களுக்கு 800 மில்லியனும் 11 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு 500 மில்லியநும் என்றால் எப்படி கிழக்கு மாகான சபையில் சமத்துவம் நிலவுகின்றது என்பதற்கு இதுவே உதாரணம்
நல்லாட்சி சமத்துவமான நிதிப் பங்கீடு என்கிறார்கள். 2015ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அனுமதியெடுத்ததை தாண்டி பிழையான முறையில் பங்கிட்டுள்ளதை நாங்கள் காண்கின்றோம்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர்களான உதுமாலெப்பை, விமலவீர திசாநாயக்க, பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் உட்பட 10மாகாணசபை உறுப்பினர்கள் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
»»  (மேலும்)

3/30/2015

| |

கிழக்கு மாகாண ஆட்சிக்கு வழங்கிய ஆதரவை பலர் வாபஸ்

இலங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களில் பலர் ஆளும் தரப்புக்கு வழங்கியுள்ள ஆதரவை விலக்கிக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்கா, எம். எஸ். உதுமான்லெப்பை மற்றும் தற்போதைய துணை அவைத் தலைவர் எம். எஸ். சுபைர் ஆகியோரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தேசிய காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீறும் வகையில் கிழக்கு மாகாணசபையின் தற்போதைய ஆட்சி அமைந்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மாகாணசபை உறுப்பினர்கள் கூறினார்கள்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 15 பேரில் 11 பேர் நாளை செவ்வாய்கிழமை மாகாணசபை கூடும்போது எதிர்கட்சியாக செயற்படுவார்கள் என்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறினார்.
இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரான தற்போதைய ஜனாதிபதிக்கு தான் ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
37 உறுப்பினர்களை கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 36 பேர் ஆளும் தரப்பு உறுப்பினர்களாக உள்ளனர்.
குறித்த 11 உறுப்பினர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைந்துவிடும்.
அது தற்போதைய மாகாண ஆட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தினாலும் மற்றுமோர் ஆட்சி மாற்றத்திற்கு அது வாய்ப்பாக அமையமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

MY DAUGHTER’S GRADUATION CEREMONY FOR A MASTER OF SCIENCE / THE MASTER OF BUSINESS ADMINISTRATION

051_n27.03.2015 அன்று பாரீஸிலுள்ள யுனஸ்கோ மண்டபத்தில் நடைபெற்ற INSEEC  PARIS  Business  School பட்டமளிப்பு விழாவில் எமது மகள் லூர்த்தமி MSC & MBA பட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இப்பட்டமளிப்பு விழாவில் 47 நாடுகளைச் சேர்ந்த 1500 மாணவர்கள் தமது பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் பட்டங்களைப் பெற்றுக் கொண்டவர்களில் இவர் ஒருவரே தமிழ்ப் பெண் என்பது அந் நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த போது எமக்குப் பெருமையளித்தது !
A Master of Science (Latin: Magister Scientiae; abbreviated MSc, M.Sc., M.Sci., M.Si., Sc.M., M.S., MS) is a postgraduate academic master’s degree awarded by universities in many countries. The degree is typically granted for studies in the sciences or engineering or medicine, and is usually for programs that are more focused on scientific and mathematical subjects. While it ultimately depends upon the specific program, individuals that pursue a Master’s of Science degree typically require a thesis.
The Master of Business Administration (MBA or M.B.A.) is a master’s degree in business administration (management). The MBA degree originated in the United States in the late 19th century when the country industrialized and companies sought scientific approaches to management. The core courses in an MBA program cover various areas of business such as accounting, finance, marketing, human resources, and operations in a manner most relevant to management analysis and strategy. Most programs also include elective courses.
The MBA is a terminal degree and a professional degree.[1] Accreditation bodies specifically for MBA programs ensure consistency and quality of education. Business schools in many countries offer programs tailored to full-time, part-time, executive, and distance learning students, many with specialized concentrations.
“MBA” redirects here. For other uses, see MBA (disambiguation).
Raman Yogaratnam
»»  (மேலும்)

| |

கோர விபத்து - மட்டக்களப்பு

சற்று நேரத்திற்கு முன் மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில் கிரான் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 தமிழ் சகோதரர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகியதில் 2 பேரும் கடும் காயங்களுக்கு உள்ளாகி மிகவும் கவலைக்கிடமான நிலையில் உயிருக்கு போராடுவதாக தெரிவிக்கப்படுகிறது -
பிந்திய இணைப்பு-
விபத்தில் காயமுற்ற இருவரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர் -
குறித்த 2 பேரும் கிரான் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும்
ஒருவர் செங்கலடி- நீர்ப்பாசன திணைக்களத்தில் பணி புரியும் ஆதித்தன் (34வயது ) ,மற்றவர் விநாயகம் ஜெயபிரதாப் எனும் 24 வயது நபர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது - உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது 
»»  (மேலும்)

3/29/2015

| |

ராஜன் சத்தியமூர்த்தி நினைவு தினம் மார்ச் 30


Résultat de recherche d'images pour "ராஜன் சத்தியமூர்த்தி"2004 ஆம் ஆண்டு இதே மார்ச் - மாதம்தான் கிழக்கு மாகாணத்தின் தனித்துவக் குரல்கள் ஓங்கி ஒலித்த மாதமாகும். சுமார் 6 ஆயிரம் போராளிகள் ஆயுத வன்முறையைக் கைவிட்டு ஜனநாயகப் பாதையில் பயணிக்க வரலாறு அவர்களை நிர்ப்பந்தித்தது. இந்த தனித்துவக் குரல்களை பூண்டோடு அழித்துவிட்ட  பாசிசப் புலிகள் தங்கள் கொலைவெறியை கட்டவிழ்த்து விட்டனர். தமிழ்த்தேசியமா? கிழக்கின் தனித்துவமா? என்ற கன்னை பிரிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் நின்ற போது எங்கள் ராஜன் சத்தியமூர்த்தி கிழக்கின் தனித்துவத்திற்காக நிமிர்ந்து நின்று தன்னுயிரை ஈந்தார். 

கிழக்கு மாகாண மக்களின் தனித்துவ அரசியலுக்காக உறுதுணையாக நின்ற சத்தியமூர்த்தி அவர்கள் சிந்திய உதிரத்தில் இருந்துதான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்கின்ற தனித்துவக் கட்சி உதயமானது. ஒருசில  வருட காலத்தினுள் இலங்கை அரசியலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த புதிய வரலாற்றை ரி.எம்.வி.பி. படைக்க சத்தியமூர்த்தி போன்றவர்களின் தொடர்ச்சியாக வந்த சிந்தனையே காரணமாகும். ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை புலிகள் கொலைசெய்ததின் ஊடாக எதை சாதிக்க நினைத்தார்களோ அது கிழக்கு மண்ணில் வேகவில்லை. அவரைக் கொன்றது மட்டுமன்றி புதைக்கப்பட்ட அவரது உடலை தோண்டி எடுத்து சன்னதமாடினர் புலிகள். 

பிணந்தின்னிப் பிரபாகரனின் அந்த வெறியாட்டம் இன்று முடித்துவைக்கப்பட்டமைக்கும்  கிழக்கு பிளவை அணுகுவதில் யாழ்ப்பாண மேலாதிக்கம் காட்டிய சண்டித்தனமே அத்திவாரமிட்டது  . ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை இழந்த அவரது குடும்பம் புலிகளின் கொலைக்கரத்தில் இருந்து தப்பிக்க மாதக்கணக்கில் வீடுவாசல்களை விட்டு காடுமேடுகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ நேரிட்டது. காடு மேடு மட்டும் அல்ல கடல்கடந்தும் கூட அவர்களது அலைச்சல்கள் தொடர்ந்தது. 

 வரலாறு விழித்துக்கொண்டபோது மட்டக்களப்பு மக்கள் அன்னாரது கனவை நனவாக்கியுள்ளனர். கிழக்கின் தனித்துவத்தின் அடையாளமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் களமிறங்கிய போது அன்னாரது மகளான சிவகீதா அவர்களை மட்டக்களப்பு மாநகர மேயராக்கி மகிழ்ந்தனர்; தொடர்ந்து வந்த கிழக்கு மாகாண சபைதேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சந்திரகாந்தனை கிழக்குமக்கள் முதலமைச்சராக்கி மகிழ்ந்தனர்.  மக்கள். தமிழ் முஸ்லிம் உறவின் நாயகனாகச் செயற்பட்ட ராஜன் சத்தியமூர்த்தி அவர்களை இன்று இனமத வேறுபாடுகளைக் கடந்து கிழக்கு மாகாண மக்கள் நினைவு கூருகின்றார்கள்.

»»  (மேலும்)

3/28/2015

| |

வெடிக்குமா வெடிக்காதா?

Résultat de recherche d'images pour "தமிழ்"நாட்டின் எந்தவொரு இடத்திலும் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க தற்போதுள்ள அரசாங்கம், ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. அவசரகாலச் சட்டத்தை மீண்டும் பலப்படுத்தி நபர்களைக் கைது செய்வதற்கோ அல்லது தடுத்து வைப்பதற்கோ இந்த அரசாங்கத்துக்கு எந்தவொரு தேவையும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்”.

நேற்றைய பத்திரிகைச் செய்திகளில் மேலுள்ள செய்தியும் ஒன்று. அவசரகாலச் சட்டத்தைப் பலப்படுத்தி யாரையும் கைது செய்வதற்கோ தடுத்து வைப்பதற்கோ இப்போது எந்தத் தேவையுமில்லை என்று அலங்காரமாகக் கூறியிருக்கும் பிரதமர், அவசர காலச் சட்டத்தை நீக்குவதாக ஏன் கூறவில்லை?

நடைபெறுவது நல்லாட்சி என்றால், “மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை” என்ற வீர வசனமும் இப்போது எதற்காக?
பிரதமர் ரணிலின் மேற்கண்ட வீரவசனங்களுக்கு பிரதிபலிப்புக் காட்டாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களிடம் வந்து நின்று, “வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தை முற்றாகத் திரும்ப அழைக்க வேண்டும்” என்று மக்களை உணர்ச்சிவசப்படுத்த சும்மா முழங்குவது ஏன்?

நீங்கள் கொண்டுவந்த அரசாங்கத்தினது பாராளுமன்றத்தை யும் அதற்கும் மேலுள்ள - நீங்களும் அங்கம் வகிக்கும் - தேசிய நிறைவேற்றுச் சபையையும் பயன்படுத்தி, அவசரகாலச் சட் டத்தை நீக்குவதற்கு முயற்சிப்பதை விட்டுவிட்டு, மக்களிடம் வந்து கூக்குரலிட்டால் இராணுவத்தை அகற்றிவிடலாம் என்று யாரை நம்பச்சொல்கிறீர்கள்?
பயங்கரவாதம் தலைதூக்கும் ஆபத்து இருக்கிறது என்றும், அவசரகாலச் சட்டத்தை நீக்க முடியாது என்றும் சொல்லிக்கொண்டிருக்கும்.... நீங்கள் கொண்டுவந்த அரசுத் தலைவரிடம் விளக் கம் கேட்பதை விட்டுவிட்டு, இராணுவத்தை அகற்றப் போராட்டம் நடத்தப்போவதாகச் சொல்லி யாரை ஏமாற்றுகிறீர்கள்?�

பாராளுமன்றத்திலோ தேசிய நிறைவேற்றுச் சபையிலோ பேசிச் செய்யக்கூடிய அலுவல்களைச் செய்வதை விட்டுவிட்டு, உங்களது ராஜதந்திர அணுகுமுறைகளால் சாதிக்க முடிந்த ஏதொரு விஷயத்தைத்தன்னும் காட்டி மக்களை ஆறுதலடைய வைக்காமல், உங்களால் ஆற்றவே மாட்டாத விஷயங்களுக்கு வெறுமனே முழங்கிக் கொண்டிருப்பது ஏன்?

முகாம்களை மூடிவிட்டு இராணுவம் திரும்பிச் செல்லாவிட் டால் போராட்டம் வெடிக்கும் என்று கடந்த ஐந்து வருடங்களாக அறைகூவி வந்திருக்கிறீர்கள். 2015-ல் தீர்வே வந்துவிடும் நல் லாட்சியைக் கொண்டுவருகிறோம் என்று நம்பிக்கையுடன் தமிழ் மக்களை வாக்களிக்கச் சொல்லி, நீங்கள் விரும்பிய ஆட்சியையும் கொண்டுவந்திருக்கிறீர்கள்.

நாட்டில் மாற்றம் வந்தபிறகும், உங்களால் மக்களுக்கு வாக்களித்தபடி எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியவில்லை என்றால், வாய் ஓயாமல் முழங்கிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, இத்தறுதிக்கு அந்த அகிம்சைப் போராட்டத்தையாவது வெடிக்க வைத்திருக்க வேண்டுமல்லவா?

தெற்கில் உள்ளோரிடம் பயங்கரவாத அச்சம் நீங்காமல், அவசரகாலச் சட்டம் நீக்கப்படாமல், இராணுவப் பிரசன்னமும் முற்றாக நீக்கப்படாது என்பதைத் தெரிந்துவைத்திருக்கும் நீங்கள் ஒன்றில் உங்கள் அரச சபைகளில் பேசவேண்டும்.

இல்லை, நீங்கள் கொண்டுவந்த அரசிடமும் பேசி உங்களால் எந்தக் காரியத்தையும் ஆற்றமுடியவில்லை என்றால், ஐந்து வருடங்களாகச் சொல்லிவரும், அந்தத் தீர்வு காணும்வரையான அகிம்சைப் போராட்டத்தையாவது முன்னெடுத்திருக்க வேண்டும்....

அதுவுமில்லை, தொடர் உண்ணாவிரதங்களை நடத்த வேண்டிய அளவுக்கு அப்படியொன்றும் உடனே தீர்வு எடுக்கவேண்டிய அவசரத்தேவை இப்ப இல்லையென்றால், “போராட்டம் வெடிக்கும்” என்ற முழக்கங்களை ஏன் விடாமல் தொடர்கிறீர்கள்?

NANRI* THINA MURASU
»»  (மேலும்)

3/26/2015

| |

பிரான்ஸ் பகிரதி சிறிதரன் எம்பியால் கட்டிக்கொடுக்கப்பட்டார்

Résultat de recherche d'images pour "பிரான்ஸ் பகிரதி"பிரான்ஸ் பகிரதி சிறிதரன் எம்பியால் கட்டிக்கொடுக்கப்பட்டார் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் அடையாளம் ஊர் மக்களால் அடையாளம் காணப்பட்டார்
T.N.A யிரனால் செல்லமாக கிளிநொச்சியின் "மேர்வின் சில்வா "என்று அழைக்கப்படும் M.Pயின் ரவுடிக்கும்பலால் ,பிணையில் விடுதலை செய்யப்பட்ட முருகேசு பகீரதி (தளபதி நிலா) மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்ட முருகேசு பகீரதி மீது கொலை முயற்சி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
முல்லைத்தீவு கண்டாவளையில் இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
மோட்டர் சைக்களில் வந்த இனந்தெரியாத இருவர் பகீரதி மீது மோதி தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான பகீரதி துாக்கி வீசப்பட்ட நிலையில் அபாய குரல் எழுப்பியுள்ளனார். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது பகீரதி காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதியையும் அவரது எட்டு வயது மகளும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என குற்றம் சாட்டப்பட்டு முருகேசு பகீரதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் அவர்கள் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் விசாரணை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டருந்தது. எனினும் கடந்த வாரம் நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
பகீரதியை 2 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டார். எனினும் விடுக்கப்பட்ட நிபந்தனையின்படி அவருக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது. மேலும் பகீரதி வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை சென்று கையொப்பம் இடுமாறும் நீதவான் பணித்திருந்தார்.
இந்நிலையில் கிளிநொச்சி கண்டாவளையில் தற்காலிகமாக தங்கியிருக்கும் பகீரதி மீது இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிளால் மோதி காயத்திற்குள்ளாக்கியுள்ளனர்.
இவரது தந்தையார் .முருகேசு இவர் கிளிநொச்சி மாவட்ட சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் ,இவர் தான் sritharan M.P யிற்கு ஆனந்தசங்கரியுடன் கதைத்து J.P பட்டம்
வாங்கி கொடுத்தவர்.விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்களுக்கு தெரியாமல் ,கொழும்பு சென்று பட்டத்தை வாங்கி வந்தார், புலிகளால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டார்.
முருகேசு என்பவரின் மகன் வல்லவன்(பகிரதின் அண்ணன்) sritharan m.pயின் தங்கையை
தான். திருமணம் முடித்துள்ளார் . இவர்களுக்குள்ள பிரச்சனையால் தான் .sritharan ஆல்
அவர் காட்டிக்கொடுக்கப்ப்டடார் என்று வல்லவன் எமக்கு தெரிவித்தார் .
»»  (மேலும்)

| |

பண மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்ககோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு நகரில் பெண்களிடம் மோசடிகளில் ஈடுபட்ட கிறடிட் நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின் சில ஊழியர்கள் மற்றும் மோசடிகளில் மேற்கொண்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்ககோரி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் பிரதேச பெண்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கல்லடி,வேலூரில் உள்ள பெண்னொருவரும்  நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின் சில ஊழியர்களும் இணைந்து பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் பல முறைப்பாடுகளை குறித்த நிறுவனத்திடம் தெரிவித்தபோதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

இன்று காலை கொமர்சியல் கிறடிட் நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின் முன்பாக இதுதொடர்பில்ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கையெடுத்தபோது குறித்த பெண் தான் பணத்தினை தருவதாகவும் வீட்டுக்கு வருமர்றும் அழைத்த நிலையில் வீட்டுக்கு சென்றபோது பெண்கள் மீது குறித்த பெண் தாக்குதல் நடத்தியதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

இதற்கு எதிராக மட்டக்களப்பில் உள்ள வேலூரில் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் பெணின் வீட்டுக்கு முன்பாக கூடிய பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தங்களது பணங்களைகொள்ளையடித்துக்கொண்டு தங்களை தாக்கிய பெண்ணை கைதுசெய்யும் வரையில் தாங்கள் போராட்டங்களை மேற்கொள்ளப்போவதாக பெண்கள் தெரிவித்தனர்.

மிகவும் கஸ்டங்களுக்கு மத்தியில் கடன்களைப்பெற்று அவற்றின் மூலம் மாதம் மாதம் பெறும் பணத்தினை குறித்த நிறுவனத்துக்கு செலுத்திவந்தபோதும் அந்த பணத்தினை குறித்த பெண்ணும் சில  கிறடிட் நுண்கடன் வழங்கும் நிறுவகத்தின் ஊழியர்கள் சிலரும் இணைந்து மோசடி செய்துள்ளதாகவும் அதன் காரணமாக தாங்கள் கட்டிய பணம் குறித்த நிறுவனத்தில் செலுத்தப்படவில்லையெனவும் இதன்போது கருத்து தெரிவித்த பெண்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கல்லடி,வேலூர் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களின் பணம் இவ்வாறு சூறையாடப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான சம்பவங்கள் இனி இந்த மாவட்டத்தில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புபட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணைசெய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்களையும் பொலிஸ் நிலையம் வருமாறு கோரிய நிலையில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
»»  (மேலும்)

| |

'ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இலங்கை'

BBCஇலங்கையில் தேசிய அரசாங்கம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள ''எதிர்க்கட்சித் தலைவர் யார்'' என்ற பிரச்சினையானது இலங்கை ஜனநாயக கேலிக்கூத்தின் உச்சத்தில் இருப்பதை காண்பிக்கிறது என்று மூத்த ஊடகவியலாளரான என். வித்தியாதரன் விமர்சித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு, ''ஆட்சியமைப்பதற்கான அருகதை யாருக்கு உள்ளது'' என்பதை உறுதிப்படுத்துமாறு கோராது, ஜனாதிபதி, குறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை அரசமைக்க அழைத்ததே காரணம் என்றும் அவர் கூறுகிறார்.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களில், அமைச்சரவையில் இணைந்துள்ளவர்கள் போக ஏனையோரை எதிர்க்கட்சியாக செயற்பட அனுமதித்தால், அது நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒரு நிலையை ஏற்படுத்திவிடக் கூடும் என்ற அச்சமும் அவர்களை அவ்வாறு செயற்பட அனுமதிக்காமல், ஜனாதிபதி தவிர்ப்பதற்கு ஒரு காரணம் என்றும் வித்தியாதரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற சிறுபான்மைக் கட்சிகள் எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு என்றும் அவர் கூறுகிறார்.
»»  (மேலும்)

| |

மகிந்த ஆதரவு அலை அஞ்சுகிறது புதிய அரசு

வங்குரோத்தடைந்துள்ள ரணில் - மைத்திரி அரசு நாடு முழுவதும் பெருகிவரும் மகிந்த அலையைக் கட்டுப்படுத்தவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி தேசிய அரசை ஸ்தாபித்துள்ளது - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் தெரிவித்தன.

மேலும் தமது அனுமதி இன்றியும், தீர்மா னம் எடுக்காமலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைந்ததனூடாக மக்கள் ஆணையை காட்டிக்கொடுத்துள்ளது என்றும் அவை தெரிவித்தன.

100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டதன்படி ஏப் ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைக்க அரசு ஏன் அஞ்சுகின்றது எனக் கேள்வி எழுப்பியதுடன், அடுத்த பொதுத் தேர் தலில் மஹிந்த ராஜபக்ஷ‌வின் தலைமைத்துவத்துடன் வெற்றி பெற்று புதிய அரசை உரு வாக்கு வோம் என்றும் சூளுரைத்தன.

கொழும்பிலுள்ள தேசிய நூல கத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப் பின்போதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மேற்கண்டவாறு தெரிவித்தன.

இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார � தெரிவித்தவை வருமாறு:- ஐக்கிய தேசியக் கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து புதிய அரசொன்றை உருவாக்கிவிட்டு தேசிய அரசு என்று பெயர் சூட்டியுள்ளன.

மக்கள் தமக்கு வழங் கிய ஆணையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். இதை எதிர்த்து நாம் செயற்படுவோம். அடுத்து இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வின் தலை மையின் கீழ் வெற்றிபெற்று ஜனநாயக �இடதுசாரி சக்தி களின் அரசொன்றை உருவாக் குவோம் �என்றார். இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் தினேஷ்; குணவர்தன எம்.பி. தெரிவிக்கையில்: ரணில் �மைத்திரி அரசு வங்குரோத்தடைந்துள்ளது.�

அதனால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி லுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி தேசிய அரசொன்றை ஸ்தாபித்துள்ளது. அரசு வங்குரோத்தடைந்துள்ளமை இதனூடாகத் தெளிவாகியுள்ளது என்றார். இதையடுத்து, கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சரான விமல் வீரவன்ஸ நாட்டில் தற்போது கலப்புக் குழந்தையொன்று பிறந்துள்ளது.

இதுதான் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் 100 நாள் திட்டம் என்றனர். ஆனால், 60 நாட்களுக்குள்ளேயே ஐஸ் கரைவது போல இந்த அரசு கரைந்து வரு கின்றது. �மகிந்த ராஜபக்ஷ‌வுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் பெருகிவரும் மக்கள் அலைக்கு அஞ்சியே இந்தத் தேசிய அரசு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் உறுதியளித்ததுபோல 100 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கலையுங்கள். ஏன் அஞ்சுகின்றீர்கள்?- என்றார்.
»»  (மேலும்)

3/25/2015

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்க விஷேட கலந்துரையாடல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்க அங்கத்துவர்களுடனான விஷேட கலந்துரையாடல் தொழிற்சங்கத் தலைவர் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 29.03.2015ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு வாவிக்கரை விதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அபிவிருத்தி தொடர்பாகவும், தொழிற் சங்கத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் இங்கு விஷேடமாக கலந்துரையாடப்படவுள்ளது.

இக் கலந்தரையாடலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களும், கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
»»  (மேலும்)

| |

மாகாணசபையின் நிபுணர் குழுவின் மக்கள் விரோத முடிவினை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது

Résultat de recherche d'images pour "சி.கா.செந்திவேல்"சுன்னாகம் மின்நிலையத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் அண்மைய ஆண்டுகளாக நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்து நன்னீர் மாசடைந்து வந்துள்ளது. இதனால் பாதிப்படைந்த மக்களும், பொதுஅமைப்புகளும், சமூக ஆர்வலர்களும், இதனை வெளிக்கொணர்ந்து வெகுஜன செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.
அதன் காரணமாக வடக்கு மாகாணசபை தூய நீருக்கான விசேட செயலணியை உருவாக்கி நன்னீரில் கழிவு எண்ணெய் கலந்து மாசடைவு ஏற்பட்டுள்ளதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நிபுணர்குழு ஒன்றினை நியமித்தது. அந் நிபுணர் குழு நேற்று முன்தினம் முதற்கட்ட ஆய்வறிக்கையெனக் கூறி தமது முடிவை வெளியிட்டிருந்தது. அதில் மாசடைந்துள்ளதாக மக்களால் அடையாளம் காணப்பட்ட நீரில் ஆபத்தான நச்சு இரசாயன மூலகங்கள் எதுவும் இல்லையெனவும் குறிப்பிட்டிருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட நானூறு வரையான நன்னீர் கிணறுகளைப் பயன்படுத்தி வரும் சுமார் இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நிபுணர் குழுவின் முதல் அறிக்கை இவ்வாறெனில் அடுத்த கட்ட அறிக்கைகள் எவ்வாறு அமையும் என்பதை சொல்லத் தேவையில்லை. மக்களால் நன்கு உணரப்பட்ட நிலத்தடி நன்னீர் மாசடைந்துள்ள அபாயத்தினை மூடி மறைக்கும் உள்நோக்கத்துடன் இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளதா எனும் நியாயமான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாகாணசபையின் நிபுணர்குழு  இதன்மூலம் தனது நம்பகத்தன்மையை இழந்து நிற்பதையே காணமுடிகிறது. இவ்வாறான நிபுணர் குழுவின் மக்கள் விரோத முடிவினை எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அதே வேளை கழிவு எண்ணெய்க் கலப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் 23.03.2015ல் வெளியிட்டுள்ள சந்தேகங்களும் எழுப்பியுள்ள கேள்விகளும் முற்றிலும் நியாயமானவை என்பதை எமது கட்சி மக்களோடு இணைந்து ஆதரிக்கிறது.
இவ்வாறு புதிய ஜனநாயக  மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில் நிபுணர் குழுவானது 40 கிணறுகளின் நீர் மாதிரிகளை ஆய்வு செய்தே மேற்படி முடிவிற்கு வந்துள்ளதாகக்  கூறுகிறது.
ஆனால் வடக்கே தெல்லிப்பளை வரையும் மேற்கே சங்கானை வரையும் கிழக்கே நீர்வேலி வரையும் தெற்கே கொக்குவில் வரையும் “கிறீஸ் பூதம்”; போன்று கழிவு எண்ணெய்ப் படிவுகள் பரவிவந்துள்ளன. எனவே மக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை அவலத்திற்கு உள்ளாக்கி நிற்கும் நன்னீர் மாசடைதலுக்கு மாகாணசபையும் முதலமைச்சரும் உரிய பதிலை தாமதமின்றி முன்வைக்க வேண்டும் என வற்புறுத்துகின்றோம். அத்துடன் மின்நிலைய வளாகத்தில் எவ்வாறு கழிவு எண்ணெய் தேக்கப்பட்டு வந்தது என்பதையும் நிலத்தடிக்குள் அவை செல்வதற்கு எவ்வாறான வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது பற்றியும் உரிய விசாரனைகள் மூலம் கண்டறியப்பட வேண்டும். அதனை மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவும்  வேண்டும். இவ்விடயத்தில் நொதேன் பவர் கம்பனியின் லாபத்தையோ அதன் பங்காளர்களையோ சில பெரும் புள்ளிகளின் நலன்களையோ பாதுகாத்து மக்களுக்கு துரோகம் செய்வது மன்னிக்க முடியாத  குற்றம் என்பதை எமது கட்சி மக்கள் சார்பாக சுட்டிக்காட்டுகிறது எனவும் மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர்.
»»  (மேலும்)

3/24/2015

| |

வெறும் குட்டித்தீவை உலகின் உச்சத்துக்கு உயர்த்திய சிற்பி

நவீன சிங்கப்பு+ரை உருவாக்கி, அதனை பொருளாதார ரீதி யாக வளர்ச்சி பெற்ற நாடாக வளர்ச்சி பெற செய்த சிங்கப்பு+ரின் முதல் பிரதமரான லீ குவான் யு+ நேற்;று அதிகாலை காலமானார். நவீன சிங்கப்பு+ரின் தந்தை என அனைவராலும் போற்றப்படும் இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த சில மாதங்களாகவே நி;மோனியா காய்ச்சலால் பாதிக்கப் பட்ட அவர் சிங்கப்பு+ரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகி ச்சை பெற்று வந்தார்.
அவர் உயிரிழந்து விட்டதாக கடந்த சில நாட்களாகவே வதந்தி கள் பரவினாலும் நேற்;று அதிகா லையில் அவர் மரணமடைந்த தக வலை அந்நாட்டு பிரதமர் அலுவல கம் அதிகாரபு+ர்வமாக வெளியிட்டு ள்ளது.
கடந்த 1923 ஆம் ஆண்டு சிங்கப் பு+ரில் பிறந்தவரான லீ குவான் யு+, நவீன சிங்கப்பு+ரின் சிற்பி என்றும், சிங்கப்பு+ரின் தந்தை என்றும் அந் நாட்டு மக்களால் கொண்டாடப்படு கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக் கத்தில் அவர் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.
இருபதாம் நூற்றாண்டின் சுதந்திர சிங்கப்பு+ரின் வரலாற்றைத் தொட ங்கி வைத்தவர் லீ குவான் யு+. ஆங் கி லேய அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பு+ர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ குவான் யு+, பின்னர் மலேசியாவி டமிருந்து சிங்க ப்பு+ர் பிரிந்து வருவ தற்கும் நடவடிக்கை எடுத்தார்.
தனது தோழர்களுடன் சேர்ந்து தொடங்கிய மக்கள் செயல் கட்சி யின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு சுதந்திர சிங்கப்பு+ர் உருவாவதற்கு ஒரு காரணியாகவும் இருந்த அவர், சுதந்திரம் பெற்ற சிங்கப்பு+ரின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார்.
கடந்த 1959 ம் ஆண்டு, சிங்கப் பு+ரின் முதல் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட லீ குவான், தனது 31 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் தற்போதைய நவீன சிங்கப்பு+ருக் கான கட்டமைப்பு வசதிகளை ஏற்ப டுத்த வித்திட்டார். இவரது ஆட்சிக் காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பு+ர் பிரமிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.
மிக நீண்ட காலத்திற்கு சிங்கப் பு+ரின் பிரதமராக இருந்த பெருமை மட்டுமல்ல, அந்த காலத்தில் ஒரு நாட்டை ஒன்றுமில்லா நிலையிலி ருந்து மிக மேன்மட்டத்திற்கு உயர் த்திய பெருமையும் அவருக்குண்டு. சிங்கப்பு+ரை செல்வந்த மையமாக மாற்றியதற்காக அவர் பரவலாக பாராட்டப்பட்டாலும் அவரது சர்வாதி கார ஆட்சிமுறை மீது விமர்சனங் களும் வைக்கப்பட்டன.
அரசியல்வாதிகள் முறையற்ற வகையில் சொத்துக்குவிப்பதை தடு க்க புலனாய்வு விசாரணை மையம் (Corrupt Practices Investigation Bureau)CPIB ஒன்றை ஏற்படுத்தி னார்.
அரசை ஏமாற்றிய அரசியல்வாதி கள் தண்டிக்கப்பட்டனர். அவர்களின் சொத்தும் அவர்களைச் சார்ந்தோரின் சொத்துகளும் கண்காணிக்கப்பட்டன.
எல்லா மக்களும் தங்கள் சொத் துக் கணக்கை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
மூன்று மாதத்தில் எல்லோருக்கும் ஒரு ஐ.டி எண் வழங்கப்பட்டது. உங்கள் கார்டின் வண்ணம் கூட உங்களின் சமூக நிலையைக் கூறி விடும்; அரசியல்வாதிகளின் வழக்க மான 'பினாமி' இல்லாது ஒழியும்.
அரசின் கட்டளைகளை மீறும் அரசியல்வாதிகள், அவர்களது ஒட் டிய உறவினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இரு குழந் தைகள் போதும்; அதற்கு மேல் மக்கள் குடும்பக் கட்டுப்பாடு அறு வைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். மூன்று நான்கு குழந் தைகள் உள்ளோருக்கு அரசியல் சலுகைகள் குறைக்கப்படும்.
இரண்டாவது குழந்தைப்பேறுக்கு தனி விடுமுறை கிடையாது. இரண் டாவது குழந்தைக்கு மேல் குழந்தை பெறுவோரின் சம்பளத்தில் ஓராண்டி ற்குரிய ஊக்கப் பணம் குறைக்கப் படும். இரு குழந்தைகளுக்கு மேல் பிள்ளை பெற்றோர் பெரிய சமுதாயப் பொறுப்புள்ள பதவிகளைப் பெற முடியாது என்பன உள்ளிட்ட பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
லீ குவான் யு+ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப் பு+ரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக திகழ்ந்தார். 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமை ச்சர் பதவியில் பணியாற்றினார்.
இந்த ஆண்டு 50வது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று தன் நாட்டு மக்க ளுக்கு உத்தரவிட்டிருந்தார் லீ. ஆனால் லீ மரணத்திற்கு சிங்கப் பு+ர்வாசிகள் தற்போது கண்ணீர் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின் றனர்.
சிங்கப்பூரின் மீதும் அதனை வழி நடத்திய லீ மீதும் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். லீயின் ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் பிரமிக்க த்தக்க வளர்ச்சி கண்டது.
இன்று சிங்கப்பூரில் தமிழ் மொழி செழித்திருப்பதற்கும் மூல காரணம் லீயின் இரு மொழிக் கொள்கைதான். அந்தக் கொள்கையால்தான் தமிழ் இங்கு இவ்வளவு முக்கியத்துவம் பெற் றுள்ளது. அதற்குத் தமிழர்கள் அனை வரும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள் ளனர்.
அவருக்கு வரலாற்றில் அழியா இடம் உண்டு. மக்கள் இதயத்திலும் இடம் உண்டு. வாழ்வில் முன்மாதிரி யாகக் கொள்ள வேண்டிய மனிதர் லீ குவான் யூ.
லீ எதையுமே கடமைக்காகச் செய்ய வில்லை. நாட்டு நிர்மாணத்தில் அவர் ஆற்றியிருக்கும் அளப்பரிய பங்கை யாராலும் மறுக்க முடியாது.
சிங்கப்பூர் மலேசியாவை விட்டுப் பிரிந்தபோது அப்போதைய பிரதமர் லீ குவான் யூ மிகவும் வருத்தமடைந்தார். பிரிவுக்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானவர் லீ.
மலேசியா மலேசியர்களுக்கே என்ற கொள்கையின் படி அனைத்து இன மக்களும் ஒரே மாதிரியாக சமமாக நடத்தப்பட வேண்டும் என்று அந்நாடு விரும்பியது.
சிங்கப்பூர் சுந்திரமடைந்த பின்னர் சீன இனத்தவர்கள் பெரும்பான்மையில் இருக்கும் நாடு என்பதால் சிறுபான் மையினர் ஒதுக்கப்படுவர் என்ற அச்சம் இருந்தது. ஆனால் லீ சிறுபான் மையினரின் உரிமைகளைப் பாதுகாக் கும் விதமாக சிறுபான்மையினர் உரி மைகளைக் காப்பதற்காக ஒரு மன்றத் தை அமைத்தார்.
1954 ல் மக்கள் செயல் கட்சி தொட ங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல இன, பல கலாசார, பல சமயங்கள் கொண்ட நாடாக இருப்பதை லீ உறுதி செய்தார்.
சிங்கப்பூரில் அரசாங்கத்திலும் தனி யார் துறையிலும் பல உயர் பதவி களில் இந்தியர்கள் இருந்து வருகின்ற னர். இந்நாட்டில் தமிழ் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக உள்ளது.
பாடசாலைகளிலும் ஊடகங்களிலும் தமிழ் புழக்கத்தில் உள்ளது. தைப்பூச மும் தீபாவளியும் அரசாங்கத்தின் பேராதரவுடன் கொண்டாடப்படுகின் றன. சுதந்திர சிங்கப்பூர் எப்படி இருக்க வேண்டும் என்ற லீயின் கனவை இவை பிரதிபலிக்கின்றன.
லீ குவான் யூ ஒரு மாபெரும் தாக் கத்தின் அடையாளச் சின்னம். ஆசியப் பண்புகள் மேற்கத்திய பண்புகளைவிட வேறுபட்டவை என்று ஜனநாயக ஆட்சியின் வரைவிலக்கணத்தை மாற் றியெழுதிய பொழுதிலோ, மானுடப் பரிமாணங்கள் மரபணுக்களில் அடங்கி யிருப்பதால் அறிவில் சிறந்தவர்களை ஈன்றெடுப்பதற்குப் பட்டதாரிகள் பட்ட தாரிகளையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற சர்ச் சைக்கு ரிய கொள்கையை முன்னிறு த்திய பொழுதிலோ லீ குவான் யூவின் துணிவு தெரிந்தது.
அடக்குமுறை ஆட்சியோ ஜன நாயகமோ... முப்பது ஆண்டுகளில் இவரது தலைமைத்துவம் சிங்கப்பூர் என்னும் பிரிட்ஷாரும் மலேசியர்களும் விட்டுச் சென்ற எள்ளி நகையாடப் படக்கூடிய சின்னஞ்சிறு தீவை உல கமே எட்டிப் பார்த்துப் பிரமிக்கும் தன கென்ற உரத்த குரல் கொண்ட நாடாக மாற்றியமைத்தார் என்பதே மிகையற்ற உண்மை. சிங்கப்பூரின் வளர்ச்சிக்கும் மேம் பாட்டுக்கும் வாழ்நாள் முழுவதும் உழைத்த ஒப்பற்ற மாமனிதர் அவர்.
சிங்கப்பூர் என்ற தேசத்தை செதுக் கிய சிற்பியான ‘லீ குவான் யூ’, பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும் பத்தில் பிறந்தவர். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை லீயின் அம்மாதான் தூக்கி நிறுத்தினார்.
‘சிறு வயதில் லீ குவான் யூவுக்கு இங்கிலாந்து மீது ஈர்ப்பு அதிகம். முதல் உலகப் போரில் ஜப்பான், இங்கி லாந்தை பந்தாடியபோது அந்த ஈர்ப்பு அவருக்குப் போய்விட்டது. அதுவே பின்னாளில் அவரது இங்கிலாந்து எதிர்ப்புக் கொள்கையாக மாறியது.
உலகில் அதிக ஆண்டு காலம் ஜன நாயக அரசு ஒன்றின் பிரதமராக இருந் தவர் லீ டொயின் பீயின் சிந்தனை களால் கவரப்பட்டவர். ‘கற்பனைத் திறன் கொண்ட சிறுபான்மையினரே நாட்டைச் செதுக்குவார்கள்’ என்ற அவரது கருத்தில் நம்பிக்கை கொண்ட வர்.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காந்திக்கு எவ்வளவு வருத்தத்தைக் கொடுத்ததோ லீக்கு அந்த அளவு வருத்தம் கொடுத்தது மலேசியா, சிங்கப்பூர் பிரிவினை. இயற்கை வளங் கள் இல்லாத சிங்கப்பூரை மலேசி யர்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அந்த கோபமே லீயின் வைராக்கி யமாக மாறி சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்தது.
‘அடியாத மாடு படியாது’ என்பதில் நம்பிக்கை கொண்டவர் லீ. பாட சாலையில் படிக்கும் போது நான் தவறு செய்தால் ஆசிரியர்கள் பிரம்பால் விளாசுவார்கள். அதுவே என்னை ஒழுக்கமாக மாற்றியது. அதனால்தான் தவறு செய்வோருக்கு பிரம்படி கொடுக் கும் தண்டனை அமுல்படுத்தினேன்” என்றார்.
விளையாட்டு, பொழுது போக்கு பிரியர் லீ. கோல்ப், நடனம். நீச்சல் அவருக்கு பிடித்தமானவை,
லீயை பொறுத்தவரை புனைவு நூல்கள் குப்பை. அவரே பல நூல் கள் எழுதியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் டாம் கிளான்சி.
இன்றைய அரசியல்வாதிகள் லீயி டம் கற்க வேண்டியதில் முக்கிய மானது மதச் சார்பின்மை. அரசியல். பொருளாதாரம் பற்றி ஏதேனும் சொல்ல வேண்டுமானால் உங்கள் மத அங்கிகளை கழற்றிவிட்டு வாருங்கள்” என்பார் லீ.
அவரது ஆட்சியில் கேள்விகள் கேட்ட எதிர்க் கட்சியினர், பத்திரி கையாளர்கள். மனித உரிமையாளர் கள் சிறையில் தள்ளப்பட்டனர். ஊழல், வறுமை, உள்நாட்டு குழப்பம் என்று சிக்கலாக இருந்த சூழலில் நாட்டை முன்னேற்ற தனக்கு வேறு வழி இல்லை என்றார் லீ.
தன்னைப் பற்றிய சர்ச்சைகளை பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட் டார். படித்தவர்கள், படித்தவர்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற அவரது கொள்கை மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது.
மனித அறிவு வளர்ச்சிக்கும் மரபணு க்களுக் கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதிய லீ அவ்வாறு அறி வித்தார்.
»»  (மேலும்)

| |

ஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதிகளை மீறிவிட்டனர்-ஏப்ரல் 23ல் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராகச் செயற்பட்டிருப்பதாக ஜே.வி.பி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அமைச்சுக்கள் மற்றும் பதவிகளைப் பெற்றுக் கொடுத்ததன் மூலம் ஜனாதி பதியும், பிரதமரும் மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுத்துள் ளனர் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஜே.வி.பி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் புதிய அமைச்சரவை பதவியேற்றமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் மக்கள் நிராகரிக்கவில்லை. அவருடைய நிர்வாகம் மற்றும் அவருடைய அமைச்சரவையில் அங்கம் வகித்த அனைவரையுமே நிராகரித்தனர்.
இவ்வாறு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியிருப்பது மக்களின் ஆணையை முழுமையாக மீறும் செயற்பாடு என்பதுடன், வாக்களித்த மக்களைக் காட்டிக்கொடுக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் சிறைக்குச் செல்வதற்குக் காரணமாகவிருந்த, உயர்கல்வியை தனியாருக்கு விற்க முயற்சித்த எஸ்.பி.திசாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி, பவித்திரா வன்னியாராச்சி, எஸ்.பி.நாவின்ன, டிலான் பெரேரா போன்றவர்கள் கடந்த தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள். இவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருப்பது பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள், ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கே மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இச்செயல் ஊழல்மோசடி விசாரணைகளை கைவிட்டு, குற்றவாளிகள் தப்பிப்பதற்கு இடமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சுக்கள் உடைக்கப்பட்டு பலருக்கு வழங்கப்பட்டது. அதைப்போலவே இந்த அரசாங்கமும் அமைச்சுக்களைப் பிரித்து ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளது.
தேசிய அரசுக்கு மக்கள் ஆணை இல்லை
கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் சரி, நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலும் சரி ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைப்பதற்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. ஆளும் கட்சியாக சுதந் திரக் கட்சி இருப்பதற்கும், எதிர்க்கட்சியாக ஐ.தே.க இருப்பதற்குமே பாராளுமன்ற தேர்தலில் மக்கள் ஆணை வழங்கப்பட்டது.
அதேபோல, ஜனாதிபதித் தேர்தலின் போது குறுகிய காலத்தில் பொதுத் தேர்தலொன்றை நடத்தி அதன் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கே மக்கள் ஆணை வழங்கினர். தேர்தலை நடத்துவதற்கு முன்னர் பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்து அரசாங்கம் அமைப்பதற்கு மக்கள் வாக்களித் திருக்கவில்லை. மக்களின் ஆணையை மீறும் வகையிலான ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டவேண்டும்.
30 நாட்கள் பொறுத்திருக்க முடியாதவர்கள்
100 நாள் வேலைத்திட்டத்தில் இன்னமும் 30 நாட்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. இந்த முப்பது நாட்களுக்கு தமது சொந்த வாகனங்களுக்கு பெற்றோல் அடிக்க முடியாத, வாகனத்தை சொந்தமாக செலுத்த முடியாத, சொந்த வீட்டில் இருக்க முடியாத, சலுகைகள் இல்லாமல் வாழ முடியாத நிலையிலேயே அமைச்சுப் பொறுப்புக்களை சிலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அரசாங்கம் நாடகம் ஆடுவதற்கு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தேசிய அரசாங்கத்தை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ மாட்டார்கள்.
ஏப்ரல் 23ல் பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்
அதேநேரம், 100 நாள் வேலைத்திட்டத்தில் உறுதி வழங்கியதற்கமைய ஏப்ரல் 23ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்ல வேண்டும். மக்களுக்கு வழங்கிய ஆணையை அரசாங்கம் மீற முடியாது. தேர்தலை நடத்தி புதிய அரசாங்கம் அமைப்பதற்கும், புதிய பாராளுமன்றத்துக்கும் மக்களின் ஆணையைக் கோரவேண்டும் என்றார்.
»»  (மேலும்)

| |

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு எமது பதவிக் காலத்துக்குள் தீர்வு

அரசியல் மேடைகளில் பேசுவதோடு மாத்திரம் நின்றுவிடாது வடக்கு மக்களின் பிரச்சினைகளையும் எமது பதவிக் காலத்திற்குள் தீர்த்து வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார் பலாலி பிரதேசத்தில் உள்ள வளலாய் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த யுத்த காலத்தில் வசாவிளான் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட காணிகளில் ஆயிரம் ஏக்கர்களை ஆரம்ப கட்டமாக உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடி க்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நானூறு ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. இவ்வைபவத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர்கள் டி. எம். சுவாமிநாதன், எம். கே. டி. எஸ். குணவர்தன, வட மாகாண ஆளுநர் பலிகக்கார, பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் முருகேசு சந்திரகுமார், மாவை சேனாதிராஜா,
சுரேஷ் பிரேமச்சந்திரன், டக்ளஸ் தேவானந்தா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இவ்வைப வத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் உரையாற்று கையில், நான் கடந்த மூன்று மாதகாலப் பகுதியில் மூன்று தடவைகள் யாழ். குடா நாட்டுக்கு வருகை தந்துள்ளேன். முதலில் உங்களது வாக்குகளை கேட்டு ஜனாதிபதி அபேட்சகராக இங்கு வந்தேன். அதன் பின் வட மாகாண அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்திற்கு வருகை தந்தேன். இப்போது உங்களுக்குக் காணிகளை கையளிப் பதற்கு வருகை தந்துள்ளேன்.
யுத்தமும், அதன் பின்னரான நிகழ்வுகளும் இப்பிரதேசங்களில் காணிகள் தொடர்பான பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன. ஆனால் காணிப் பிரச்சினை என்பது நேற்று, இன்று உருவானதல்ல. உலகில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கும், அரசியல் புட்சிகளுக்கும் காணிப் பிரச்சினையே அடிப்படை. ஏழை-பணக்காரன் பிரச்சினைகளுக்கும் காணியே முக்கிய காரணம் என கார்ள்ஸ்மாக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகள் என்றவகையில் இவற்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வடக்கு, கிழக்கில் மாத்திரமல்லாமல் கொழும்பிலும் கூட காணிப்பிரச்சினை உள்ளது. இப்பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இப்பணியை நாம் இப்போது ஆரம்பித்துள்ளோம். இவற்றைத் தொடங்கும்போது சில குறைபாடுகள் இருக்கலாம். அவற்றைப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே தீர்த்து விடமுடியும். நீங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை உங்களது தலைவர்கள் எமது கவனத் திற்குக் கொண்டு வருகின்றார்கள். உங்களுக்குப் பலவிதமான பிரச்சினைகள் உள்ளன. எம்மீது நீங்கள் நம்பிக்கை வைத்துள்Zர்கள். உங்களது பிரச்சினைகளை நாம் தீர்த்து வைப்போம்.
அரசியல் மேடைகளில் பேசுவதோடு நின்று விடாது உங்களது இல்லங்களுக்கு நேரில் வருகை தந்து உங்களோடு கலந்துரையாடி உங்கள் தேவைகளையும், எதிர்பார்ப்புக்களையும் எதிர்பார்த்துள்ளோம். இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரதும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், இனங்களுக்கிடையிலான சந்தேகமும், நம்பிக்கையீனமும், ஐயமும் களையப்பட வேண்டும். இதற்கென விஷேட ஜனாதிபதி செயலணியொன்றை நாம் அமைத்துள்ளோம். இதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வழிகாட்டுகிறார்.
நாம் உங்களது காணிகளை மாத்திரம் மீளளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக யுத்தம் காரணமாக அழிவுற்ற வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களையும் மீளமைக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இங்கு வாழும் மக்களின் வாழ்வு நிலையைப் பார்க்கும்போது எமக்கு மனவேதனை ஏற்படுகின்றது. நீங்கள் பலவிதமான அசெளகரியங்களுக்கு மத்தியில் உயிர் வாழுகின்aர்கள். உங்களுக்கு குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றை நாமறிவோம். அதனால் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இப்பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வட மாகாண சபைக்கு நாம் வழங்குவோம். நீங்கள் முகம் கொடுத்துள்ள காணிப் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேநேரம் நீங்கள் முகம் கொடுத் துள்ள மீன்பிடிப் பிரச்சினையை தீர்த்து வைக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
»»  (மேலும்)

| |

வரலாற்றைத் திரிப்பதே இவர்களின் வரலாறு!

Résultat de recherche d'images pour "மோடி"சில நாள்களுக்கு முன் தில்லியில் கூடிய ‘இந்திய வரலாற்றுப் பேராயம்‘ மிகுந்த வேதனையுடன், ‘ஏற்கனவே மெய்ப்பிக்கப்பட்டுள்ள வரலாற்று உண்மைகளைத் திரிக்கும் நோக்கில் யாரும் பேசவோ, செயல்படவோ வேண்டாம்‘ என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தியா முழுவதிலுமிருந்து அங்கு வந்து கூடிய 300க்கும் மேற்பட்ட  வரலாற்றுப் பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் நிறைந்திருந்த ஒரு பொதுக்குழுக் கூட்டத்தில் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களின் வேதனைக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரும், முதன்மையானவரும், நம் இந்தியப் பிரதமர் மோடி என்பதே மேலும் கவலைக்குரியதாய் உள்ளது. 25.10.2014 அன்று மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, அறிவியலுக்கு முரணான, நகைப்புக்குரிய சில செய்திகளைப் பேசியுள்ளார்.
மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் பாத்திரம், அன்றே ஜெனடிக் அறிவியல் வளர்ந்துள்ளது என்பதற்கான சாட்சி என்றும்.
இந்துக்கள் வணங்கும் விநாயகர் உருவம், அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இந்தியாவில் இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது என்றும் அவர் உரையாற்றி உள்ளார். யாரோ ஒரு மருத்துவர் யானையின் தலையையும், மனித உடலையும் ஒன்று சேர்த்து விநாயகர் உருவத்தை ஒட்டு அறுவை சிகிச்சை முறையில் உருவாக்கி உள்ளார் என்னும்  ‘தன் அரிய கண்டுபிடிப்பினை’ அவர் அங்கு வெளியிட்டுள்ளார்.
எதிரில் அவர் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த திறன் வாய்ந்த மருத்துவர்கள் எவரும் இன்றுவரை வாயைத் திறக்கவே இல்லை. அதிகாரத்திற்கு முன் அறிவு எவ்வளவு பணிந்து செல்கிறது என்பதற்கு இதனைத் தாண்டிய எடுத்துக்காட்டு வேறு எதுவும் தேவை இல்லை.
மோடியின் கூற்று, அறிவியலை மட்டும் இழிவு படுத்தவில்லை. அவர் நம்புகிற இந்து மதத்தையும் சேர்த்தே இழிவு படுத்தியுள்ளது. எது எதற்கோ ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் நடத்தும், சங் பரிவாரங்கள் இதற்குத்தான் முதலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்க  வேண்டும். விநாயகர்தான்(கடவுள்) உலகைப்  படைத்தார் என்று நம்பும் இந்துக்களின் நம்பிக்கையை எல்லாம் தகர்த்துத் தவிடு பொடியாக்கி, விநாயகரையே ஒரு மருத்துவர்தான் படைத்தார் என்று சொல்ல எவ்வளவு துணிச்சல் வேண்டும்!  விநாயகரின் உருவத்தை, ஒரு கடவுள் மறுப்பாளர் கூட இப்படிக் கேலி செய்ததில்லை.  
மோடியின் உரையை 01.11.2014 ஆம் நாள் தி இந்து ஆங்கில நாளேட்டில் கரன் தாப்பர் கண்டித்து எழுதியிருந்தார். மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை (சயிண்டிபிக் டெம்பர்) வளர்க்க வேண்டும் என்று கூறும் இந்திய அரசமைப்புச் சட்ட விதிக்கே பிரதமர் எதிராக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாற்றியிருந்தார்.
பிரதமர் மோடி அது குறித்தெல்லாம் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. ஏற்கனவே பல வரலாற்றுப் பிழையான செய்திகளை பல மேடைகளில் அவர் கூறியுள்ளார். தேர்தலுக்கு முன்பு, 2013 நவம்பரில் பாட்னாவில் பேசும்போது, அலெக்சாண்டர் பீகாரில், கங்கைக் கரையோரத்தில்தான் இறுதியாக மாண்டு போனார் என்று ஒரு செய்தியைக் கூறினார்.
மாசிடோனியாவின் மாமன்னன் அலெக்சாண்டர்   கி.மு.323இல், பாபிலோனில் இறந்தார் என்றுதான் உலகம் இதுவரையில் படித்திருக்கிறது. புதிய சரித்திரத்தை மோடி இப்போது எழுதுகின்றார். ஒரு வேளை ,அவர் அன்று  கேரளாவில் பேசியிருந்தால், அலெக்சாண்டர் ஆலப்புழையில் செத்துப் போயிருப்பார்.
நேருவை எப்போதும் குறை கூறிக் கொண்டிருக்கும் அவர், பட்டேலின் இறுதி ஊர்வலத்தில் கூட நேரு கலந்து கொள்ளவில்லை என்று ஒரு நேர்காணலில் கூறினார். அது உண்மைக்கு மாறானது என்பதை எடுத்துக் காட்டிய பிறகு, தன் பிழையை ஏற்றுக் கொண்டார். அண்மையில்,  தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டவர் வ.உ.சி. என்று கூறித் தமிழக மக்களையே வியப்பில் ஆழ்த்தினார்.
‘தவறுதலாகச் சொல்லிவிட்டார். ஆனைக்கும் அடி சறுக்குவதில்லையா?’ என்று அவர் கட்சியினர் கேட்டனர். ஆனைக்கு அடி சறுக்கலாம்தான்,. ஆனாலும் அடிக்கடி சறுக்கக் கூடாது. அப்படிச் சறுக்கினால் அது ஆனையாக இருக்க முடியாது!
மோடி என்பவர் ஒரு குறியீடுதான்.  அந்தக் கட்சியில் உள்ள பலரும் பலவாராகப் பேசுகின்றனர். மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது அரசின் கொள்கையாக இருக்கிறது. ஆனால், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சாக்ஷி மகராஜ், ஒவ்வொரு இந்துப் பெண்ணும் நான்கு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். முதலில் சாமியாராக இருக்கும் அவர், முறைப்படி திருமணம் செய்து கொண்டு, அந்த முயற்சியில் ஏன் ஈடுபடக்கூடாது?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்படி ஆட்டுவிக்கிறதோ அப்படி ஆடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்பதே உண்மை. இப்போதும் ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த தலைவர்களில் ஒருவரான தீன நாத் பத்ராவின் குரலைத்தான் மோடி எதிரொலிக்கிறார் என்பது உலகறிந்த செய்தி.
vinayagar 350தீன நாத் பத்ரா, சர்வ சிக்ஷ பச்சோவா அந்தோலன் சமிதி என்னும் அமைப்பின் நிறுவனர். இந்துத்துவா சார்பில் அடிக்கடி நீதிமன்றம் சென்று கருத்துரிமைக்கு எதிராக வாதிடுபவர். வைணவ ஆய்வாளர் ஏ .கே. ராமானுஜம் எழுதிய ‘பல ராமாயணங்கள்’ என்னும் ஆய்வு நூலைத் தில்லிப் பலகலைக் கழகத்தில்  பாடமாக வைக்கக் கூடாது என்று கூறித் தடுத்தவர்.
பென்குவின்  நிறுவனம் வெளியிட்ட, அமெரிக்கப் பேராசிரியர் வெண்டி டோனிகர்  எழுதிய,’இந்துக்கள் - ஒரு மாற்று வரலாறு” என்னும் நூலைத் தடை செய்யக் கோரியவர். எல்லாவற்றையும் தாண்டி, குஜராத் பள்ளிகளில் பாட நூல்களில், விநாயகரின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பற்றி எழுதியுள்ளவரும் இவரே. 
அந்த நூலுக்கு, அன்று குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி ஒரு சிறிய அணிந்துரையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. ஆகவே, உள்ளே இருப்பவர் தீன நாத் பத்ரா. வெளியில் தெரிபவர் மோடி. இதுவும் ஒருவிதமான பிளாஸ்டிக் சர்ஜரிதானோ என்னவோ!
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும்  இந்த முயற்சிகளை இந்துத்துவ பாசிச சக்தியினர் மேற்கொண்டனர். ரிக் வேதத்தின் காலம் கி.மு.1500 என்னும் உண்மையை மாற்றி, கி.மு.5000 என்று எழுத முயன்றனர்.
புகழ் பெற்ற ஹரப்பா நகரத்தின் பெயரை சரஸ்வதி சிந்து என மாற்ற முயன்றனர். சிந்துவெளி நாகரிகத்தையே மறைத்து, சரஸ்வதி நாகரிகம் என்று இல்லாத ஒன்றைக் கொண்டுவர முயன்றனர். ஆரியர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள்தான் என்று புதிய பொய்யைப் பாட நூல்களில் சேர்க்க விரும்பினர்.
இந்திய விடுதலைப் போரில், சாவர்க்கரைத் தவிர ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த எவரும் பங்கு கொள்ளவில்லை என்பதே வரலாறு. ஆனால் விடுதலை இயக்கங்களில் ஆர்.எஸ்.எஸ்.சும்  ஒன்று என்பது போன்ற ஒரு படிமத்தை ஏற்படுத்த எண்ணினர்.
1947ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான சுவதேஷ் ஏட்டில் முக்கியப் பங்காற்றிய, பா.ஜ.க.வின் சார்பில் மாநிலங்களவை உறுபினராக 1999 இல் நியமிக்கப்பட்ட நானாஜி தேஷ்முக்கே இதனை மறுக்கின்றார். ஆர்.எஸ்.எஸ் விடுதலைப் போரில் பங்கேற்கவில்லை என்று அவர் குறிப்பிடுகின்றார். ஆனாலும் வரலாற்றுத் திரிபுகளை அவர்கள் கை விடுவதாக இல்லை.
காந்தியாரைப் போலக் கோட்சேயும் தேசபக்தர் என்று கூறத் தொடங்கியிருக்கும் இந்துத்துவாவினர், காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட அதே ஜனவரி 30அன்று, நாடெங்கும் கோட்சேக்குச் சிலைகளை  வைக்கும் முயற்சியில் இறங்கி  உள்ளனர்.
அந்தச் சிலைகளைத்  திறந்துவைக்க, சென்ற  தேர்தலில் பா.ஜ.க.வை ஆதரித்த, காந்திய மக்கள் இயக்கத் தலைவர்  தமிழருவி மனியனைக் கூட அவர்கள் அழைக்க வாய்ப்புண்டு!
அடடே...பாருக்குள்ளே நல்ல நாடு நம்  பாரத நாடு!   
நன்றி கீற்று 
»»  (மேலும்)