கிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சை கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
கிழக்கு மாகாணசபையில் 11 ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு 07 ஆசனங்களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிடம் அமைச்சுப் பதவிகள் கேட்டு சண்டை பிடிக்கின்றது.
தமிழர்களின் தனித்துவம்,சமவுரிமை என்ற கோசத்துடன் மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான ஆணையினை ஜனாதிபதி தேர்தலில் கோரிய தமிழ் தேசிய கூட்டரைமப்பு தமக்கு முதலமைச்சர் பதவியைக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை ஆட்சி அமைக்க அழைத்த போது ஆதரவு தரமறுத்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்புடன் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆயினும் தம்மை வேண்டாம் என்று உதறித் தள்ளிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கரங்களைப் பற்றி பிடித்துக் கொண்டு அமைச்சு பதவிகளுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடிபட்டுக் கொண்டிருப்பது கிழக்கு தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
11 ஆசனங்களை வைத்துள்ள தமிழ் தேசிய கூட்மைப்பிற்கு 07 ஆசனங்களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சு பதவிகளை ஈந்து கொடுக்கும் நிலை எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை கிழக்கு தமிழர் மத்தியில் ஏற்படுத்தவுள்ளது.