கிழக்கு பல்கலைக்கழக சுவாமிவிபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் உயர்கல்வி அமைச்சினால் 186 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டமாணவர் விடுதி வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. பிரின்ஸி ஜீ.காசிநாதர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகபணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றவைபவத்தில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கே.கிட்ணன் கோபிந்தராஜா மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி வைத்திய கலாநிதி எஸ்.சுந்தரேசன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்துகொண்டனர்.