தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்குமிடையே சந்திப்பு
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்குமான விசேட கலந்துரையாடல் இன்று 06.02.2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு விஜயராம வாசஸ்த்தலத்தில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணசபை ஆட்சி தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் தற்கால, எதிர் காலங்களில் அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை விடயத்தில் கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன்,பிரதித்தலைவர் யோகவேள் செயலாளர் பூ.பிரசாந்தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆஷாத் மௌலான கிழக்குமாகானசபை உறுப்பினர் புஸ்பகுமார் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது