முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்தின் மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளதால் அவர் நாடுகடத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா விசாவில் 2015ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி இலங்கைக்கு வந்து அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதால் குமார் குணரத்னத்தை கைது செய்யுமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.