நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையில் ஒருதலைபட்சமாக செயற்படாது ரணில் விக்ரமசிங்க தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மொஹான் பீரிஸ்சை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கியமை சம்பந்தமான சபை ஒத்திவைப்பு விவாததிற்கு இடையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறினார்.
இந்த விடயம் தொடர்பான விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு ஒன்று செல்ல வேண்டும் எனவும் அதில் தோல்வியடைந்தால், விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.