2/11/2015

| |

அமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரைரெட்னம்

Résultat de recherche d'images pour "ஈ.பி.ஆர்.எல்.எப் துரை"கிழக்கு மாகாணத்தில் அமைச்சு பதவி ஒன்றினை பெறுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பெரும் இழுபறி நிலை ஏற்பட்டடுள்ளது. கடந்த இரு தினங்களாக கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களிடையே குழுத் தலைவர் சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.
எந்தப் பதவிகளையும் பெறுவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட முற்றட்ட வேளையில் அதற்கு எதிர்ப்பு தெருவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு பிரதி நிதிகள் எந்த அமைச்சு வந்தாலும் பரவாயில்லை முஸ்லீம் காங்கிரஸ் முதலமைச்சராக இருக்கட்டும் நாம் அமைச்சராக இருப்போம் என கூச்சலிட்டனர். வடக்கை மாத்திரம் சிந்திக்கும் நீங்கள் ஏன் கிழக்கைப் பார்ப்பதில்லை எனவும் ஆக்ரோசமாக கேள்வி எழுப்பினர் நிலமையினைக் கட்டுப்படுத்த முனைந்த சம்பந்தன் மீது நீங்கள் கதைக்க தகுதியற்றவர் மேதினத்தில் சிங்கக் கொடியை ஏந்தியதும் பின் காளியின் வாகனம் என்று கூறுவதும் சுதந்திர தினத்தில் எந்த வித கட்சித் தீர்மானமும் இன்றி கலந்து கொள்வதும் போன்ற வேடிக்கை காட்டும் தலைவர் நீங்கள் மக்களை ஏமாற்றுகின்றீர்கள் இம்முறை  மட்டக்களப்புக்கு அதிக வாக்குப் பெற்ற துரைரெட்ணத்திற்கு அமைச்சு வேண்டும் இல்லையேல் தமிழரசுக் கட்சியை மாத்திரம் நீங்கள் நடத்துங்கள் நாங்கள் விலகி தனியான கூட்டமைப்பு அமைப்போம் என ரெலோ,ப்ளோட்,தமிழர் விடுதலைக் கூட்டணி,ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர் பின்னர் கூட்டம் முடிவின்றி ஒத்திவைக்கப்பட்டது