இதுவரை காலமும் எதிர்ப்பரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் எதிர்காலத்தில் இணக்க அரசியலில் ஈடுபடப் போகின்றோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண உள்ளுராட்சி மீளாய்வுக் கூட்டம் யாழ். பொதுநூலகத்தில் இன்றைய தினம் அமைச்சர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை காலமும் எதிர்ப்பரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் இனிவருங்காலங்களில் இணக்க அரசியலில் ஈடுபடப் போவதாகவும், புதிய ஜனாதிபதியின் அரசாங்கம் எமது அரசாங்கம் என்பதுடன், இந்த அரசாங்கத்திடம் நாம் கோரவுள்ள கோரிக்கைகளை வழங்க இனி எந்தத் தடையும் இருக்காது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.