2/12/2015

| |

ஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான ஐ.நாவின் சர்வதேச விசாரணை அறிக்கையை சில மாதகாலம் தாமதப்படுத்துமாறு கோரவிருக்கின்றேன் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறி நாட்களே ஆகின்றன. இந்த விவகாரம் தொடர்பில் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கு காலஅவகாசம் தேவைப்படுகின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
வொசிங்டனில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக இக்  குற்றச்சாட்டுகளை கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் இந்த கால அவகாசம் கோரப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சமாதான அறக்கொடையில் உரை

இதேவேளை, சர்வதேச சமாதான அறக்கொடையில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற வைபத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுகையில்,

பின்நோக்கிய ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கொண்ட எமது நாட்டின் வரலாற்றில் இருந்து இலங்கையின் மக்கள் வெளியுலகத்தின் செயல் விளைவுகளின் தொடர்ச்சியான உள் உறிஞ்சலை வரவேற்றுள்ளதுடன் எமது நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் உள்ள நாடுகளுடனான தொடர்புகளை பேணி வைத்திருந்துள்ளனர்.

1948ஆம் ஆண்டில் சுதந்திரத்தை பெற்றதன் பின்னர் இலங்கையானது உலகத்துடன் தனது தொடர்பை முன் எடுத்து சென்றுள்ளதுடன் 'யாபேருடனும் நட்புறவை பேணுதலும் எவருடனும் பகைமை பாராட்டாமல் இருத்தலும்' என்ற அடிப்படையிலான வெளிநாட்டுக் கொள்கை ஒன்றை பின்பற்றுவதில் பெருமை அடைந்துள்ளது.

கடல் சட்டம் பற்றிய மாநாடு, ஆயுதக்களைவு மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கி விதிமுறைகள் வகுத்தல் நடைமுறைகளில் முன்னணியை வகுத்து பல்வேறு திறன்களில் ஐக்கிய நாடுகள் சபை முறைமைக்கு தொடர்ச்சியான பங்களிப்பை செய்துள்ளதுடன் இற்றை வரைக்கும் சமாதானத்தைப் பேணும் செயற்பாடுகளுக்கான  பங்களிப்பை தொடர்ந்தும் செய்து கொண்டுடிருக்கின்றது.

எனவே சிறப்பாக விபரிக்குமிடத்து இந்த சரியான பாதையில் இருந்தான விலகல் விடயமாக விபரிக்கத்தக்கதும் சில ஆண்டுகளாக பாரம்பரிய வெளிநாட்டுக் கொள்கையிலிருந்து இலங்கையின் குணவியல்பிற்கு மாறான விடயமாகலிருந்தது. தற்போது இலங்கை உலக சமூகத்துடன் தனது ஈடுபாட்டை புதுப்பிப்பதற்கு நாட்டம் கொண்டுள்ளது.

நாளைக்கு இராஐங்க செயலாளரை நான் சந்திக்கும் போது அவரை இலங்கைக்கு விஜயம் புரியுமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன்.
எனவே சனாதிபதி சிறிசேன அவர்களினதும் பிரதம அமைச்சர் விக்கிரமசிங்க அவர்களினதும் அரசாங்கமானது சர்வதேச சமூகத்துடன் புதுப்பி;க்கப்பட்ட ஈடுபாட்டுக் கொள்கை ஒன்றை பின்பற்றுகின்றது. உலகை ஓர் அச்சுறுத்தலாக கருதாமல் ஓர் வாய்ப்பாகவே நோக்குகின்றதும்  நாம் இலங்கை மக்களின் மேம்பாட்டிற்கு உலகம் வழங்க கூடிய அதிசிறந்த நலங்களை பெற்று கொள்வதன் பொருட்டு உலகத்தை அரவணைத்து எமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம். இலட்சியத்;தை அடிப்படையாக கொள்ளாமல் எமது மக்களின் தேவைகளின் மீதான அடிப்படையில் எமது வெளிநாட்டுக் கொள்கையானது ஓர் பகுத்தறிவுக்கு ஏற்ற வெளிநாட்டு கொள்கையாக இருக்கும்.

 

-