விமானப்போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பைஸர் முஸ்தபா இன்று தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது சட்டத் தொழிலை மேற்கொள்வதற்காக இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக பைஸர் முஸ்தபா கூறியுள்ளார். தனது அமைச்சர் பதவியின் கீழ் வழங்கப்பட்ட பொறுப்புக்கள் தொடர்பில் இவா் அதிருத்தியுற்றிருந்ததாக செய்திகள் முன்னர் தெரிவித்திருந்தன.