2/02/2015

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கமிடையே விசேட கலந்துரையாடல்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கமிடையே விசேட கலந்துரையாடல்  இன்று 02.02.2014 கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவின் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  பங்காளிக் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்தவுக்குமிடையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பல விடயங்கள் ஆராயப்பட்டதாக அறிய முடிகின்றது.

இழுபறி நிலையில் இருக்கின்ற கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சுப்பதவிகள் தொடர்பிலும் மாகாணசபை ஆட்சி அமைப்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும்  எதிர்வரும் காலங்களில் இரு கட்சிகளும் இணக்கப்பாட்டுடன் எவ்வாறு இணைந்து செயற்படுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டதாகவும்  இவ்விடயங்கள் தொடர்பில்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் முக்கியஸ்தர்களுக்கமிடையிலான விசேட சந்திப்பொன்று மிக விரைவில் இடம்பெறவுள்ளதாகவும் இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணசபையின் இழுபறி நிலை தொடர்பாகவும் கிழக்கு மாகாணசபை விடயத்தில் கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித்தலைவர் யோகவேள் செயலாளர் பூ.பிரசாந்தன் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆஷாத் மௌலான ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது