மாற்றத்தை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு மத்தியில் எம் கட்சிக்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு எமக்காக வாக்களித்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 35,000 ஆயிரம் தமிழ் வாக்காளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், அவர்களின் தலைமையின்கீழ் தேசிய அரசாங்கத்தின் பிரதமராக பதவிவகிக்க இருக்கின்ற ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அமைய இருக்கின்ற தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அமைச்சுப் பதவிகளை ஏற்று இணக்கப்பாட்டு அரசியலினூடாக தமிழ் மக்களுக்கு காத்திரமான சேவையை ஆற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.
-நன்றி-
பூ.பிரசாந்தன்
பொதுச் செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி