இன்றைய இணைய உலகில் சில இணையத்தளங்கள் தாம் நினைத்த எதனையும் எழுதலாம். மக்கள் தாம்
எழுதும் எதனையும் நம்பிவிடுவார்கள் என்று தாம் நினைத்தவைகளையும் கட்டுக்கதைகளையும் எழுதி மக்களை குழப்படையச் செய்து வயிறு வளர்த்துக் கொண்டிருக்கின்றன.
வாசகர்களைக் கவரவேண்டும் அதன் மூலம் தாம் வயிறு வளர்க்க வேண்டும் என்பதற்காக அப்பட்டமான பொய்களையும் மக்கள் மத்தியிலே குழப்பங்களை ஏற்படுத்தும் செய்திகளையும் சில இணையத்தளங்கள் வெளியிட்டு வருவதனை நாம் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றோம்.
அந்த வகையில்தான் தமிழீம் என்றும் புலிகள் என்றும் தாமே தமிழினத்தின் விடிவிற்காக குரல்கொடுப்பதாக காட்டிக்கொண்ட சில இணையத்தளங்களும் இவ்வாறான கைங்கரியங்களை செய்து வருவதுடன் திரை மறைவில் பல கலாசார சீர்கேடுகளையும் தமிழ் மக்கள் மத்தியில் செய்து வருகின்றனர்.
லங்கா ஶ்ரீ இணையத்தளமும் அதனோடு சேர்ந்த இணையத்தளங்களும் தாம் உழைப்பதற்காக எதனையும் செய்யலாம் என்ற நிலைக்கு வந்திருக்கின்றன.
சிறந்த ஒரு ஊடகமானது பக்கச் சார்பற்று மக்களை குழப்பமடையச் செய்யாது உண்மையான செய்திகளை நேர்மையான முறையில் மக்களுக்கு வழங்க வேண்டும்.
ஆனால் லங்கா ஶ்ரீ இணையத்தளமும் அதனோடு சேர்ந்த இணையத்தளமும் பல பொய்யான செய்திகளை மக்களுக்கு வழங்கி வயிறு வளர்த்து வரகின்றனர்.
லங்கா ஶ்ரீ இணையத்தள உரிமையாளர் பல சுத்துமாத்துக்களை செய்து வருகின்றார். நேர்மையாக செயற்படுவதாக பீத்திக்கொள்ளும் இவர்கள் எங்கே நேர்மையாக செயற்படுகின்றனர். கட்சிகளின் பெயரில் இணையத்தளங்களை உருவாக்கி கட்சியின் இணையத்தளம்போல் செய்திகளை வெளியிட்டு கட்சிக்கும் கட்சி சார்ந்தவர்களுக்கும் அவப்பெயரினை உருவாக்கி வருகின்றனர்.
இவர்களால் நடாத்தப்படுகின்ற JVP NEWS இணையத்தளம் ஒரு கட்சியின் பெயரை வைத்துக்கொண்டு கட்சி அந்த இணையத்தளத்தினை நடாத்துவது போன்று காட்டிக்கொண்டு பொய்களை மக்கள் மத்தியில் விதைத்து கட்சியின் பெயரை கெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான சுத்து மாத்துக்களை ஒரு ஊடகம் செய்யலாமா? இதுதான் ஊடக தர்மமா?
JVP NEWS ல இணையத்தளம் தொடர்ந்தும் பல பொய்களை எழுதி வருகின்றது. இல்லாத பொல்லாத பொய் புழுகு மூட்டைகளை அவ்வப்போது அவிழ்த்துவிடுகிறது இந்த இணையத்தளம். இதற்கு இவர்கள் பிரசுரித்திருந்த ” பெண்ணை பலாத்காரம் செய்தாரா பிள்ளையான்..?? அதிர்ச்சித் தகவல்கள்” என்ற செய்தி யை பிரசுரித்து இருக்கின்றது. இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.
இதே போன்றொரு செய்தியினை 18 July 2013 அன்று இதே புகைப்படத்துடன் வேறு ஒரு தலைப்பில் பிரசுரித்திருந்தனர்.
அன்றைய செய்தி
இதே போன்றொரு செய்தியினை 18 July 2013 அன்று இதே புகைப்படத்துடன் வேறு ஒரு தலைப்பில் பிரசுரித்திருந்தனர்.
அன்றைய செய்தி