1/09/2015

| |

பொறுத்திருந்து பார்ப்போம்: டக்ளஸ்

தேசிய அரசை அமைக்கப்போவதாக மைத்திரி கூறியுள்ளார். அதன் சாதக பாதகங்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை தெரியப்படுத்தியுள்ளார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். ஆட்சி மாற்றத்தை  மக்கள் விரும்புகிறார்கள். அதன் மூலம் எதையோ எதிர்பார்க்கிறார்கள்.

அந்த எதிர்பார்ப்புகள் இந்த அரசில் சாத்தியமாகவும் இருக்கும். சாத்தியமற்றதாகவும் இருக்கும். இராணுவத்தை அகற்ற மாட்டோம், நாட்டை பிரிக்க மாட்டோம் என்றுதான் இவர்களும் கூறுகிறார்கள்.