டெலிகொம் தலைவராக ஜனாதிபதியின் சகோதரர் நியமனம்
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். தகுதி அடிப்படையில் மிகமூத்த அதிகாரியான குமாரசிங்க சிறிசேன, டெலிகொம் நிறுவனத்தின் தலைமைக்கு பொருத்தமானவர் என்ற காரணத்தினாலேயே இப்பதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை அரச நியமனங்களுக்கு பயன்படுத்தமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன - தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்த நிலையில், அவரது சகோதரருக்கு ஸ்ரீ லங்கா டெலிக்கொம் தலைவர் பதவி வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 2006ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருடம் டிசெம்பர் வரை, அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பொது முகாமையாளராகவும் குமாரசிங்க சிறிசேன கடமையாற்றியிருந்தார். அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கியதன் பின்னர் குமாரசிங்க சிறிசேனவின் பதவி பறிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/138269#sthash.0XxVyfVi.dpuf