1/10/2015

| |

நான் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல மாட்டேன்: கே.பி.

தான் நாட்டைவிட்டு தப்பிச்சென்று விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்த கருத்து தவறானது எனவும் நாட்டைவிட்டு செல்வதற்கான எண்ணம் தனக்கு இல்லை எனவும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி., தமிழ் மிரருக்கு தெரிவித்தார். தான் கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சிறுவர்களை பராமரிக்கும் தன்னுடைய பணியினை செய்து வருவதாகவும் தான் நாட்டை விட்டு ஒருபோது தப்பிச்செல்ல மாட்டேன் எனவும் கே.பி. தமிழ்மிரரிடம் பிரத்தியேகமாக தெரிவித்தார். முன்னதாக, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரான குமரன் பத்மநாதன் என்றழைக்கப்படும் கே.பி, அதிவிசேட பிரமுகர்கள் பயணிக்கும் நுழைவாயின் ஊடாக நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.