எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவலான 'மாதொருபாகன் 'பிரதிமீது இந்துத்துவ - சாதிய சக்திகள் கோரும் தடையையும், அவர்கள் கொடுக்கும் நெருக்கடியிலிருந்து பெருமாள் முருகனைக் காப்பாற்றத் தவறியிருக்கும் தமிழக அரசையும் புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர்களான நாங்கள் எங்களது இந்தக் கூட்டறிக்கை வழியே வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லைகள் கிடையாது. அவ்வாறு எல்லைகள் இருப்பின் அவை உண்மையில் ஒழுங்கமைக்கப்பட்ட மறைமுகத் தடைகளே. மதம் அல்லது சாதி போன்ற சமூக பிற்போக்கு அமைப்புகளால் கருத்துச் சுதந்திரத்தின் மீது வைக்கப்படும் தடைகள் மட்டுமல்லாது; அரசு இறைமை, இன விடுதலை, புரட்சி, சமத்துவம் போன்ற முற்போக்கு முழக்கங்களுடன் வைக்கப்படும் கருத்துச் சுதந்திரம் மீதான தடைகளும் முழுமையாகக் கண்டிக்கப்படவேண்டியவை என்பதை நாங்கள் அனுபவபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் நன்கறிவோம்.
மதவாத - சாதிய சக்திகளின் நெருக்குவாரங்களை எதிர்கொள்ள முடியாத நிலையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முழு இலக்கிய எழுத்துகளையும் மீளப்பெற்றுக்கொள்வதாகவும் இனிமேல் தான் இலக்கியம் எழுதமாட்டேன் எனவும் அறிவித்திருப்பது சமூகத்தின் கூட்டு அவமானமும் துயருமாகும்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது முடிவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கும் அனைத்துச் சக்திகளிடமிருந்தும் கருத்துச் சுதந்திரத்தைக் காப்பாற்றும் பொறுப்பைத் தமிழக அரசு உணர்ந்து செயற்படவேண்டுமெனவும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.
மு.நித்தியானந்தன் (இங்கிலாந்து)
எஸ். ரஞ்சகுமார் (அவுஸ்திரேலியா )
இளவாலை விஜேந்திரன் (நோர்வே)
நிர்மலா ராஜசிங்கம் (இங்கிலாந்து)
ஷோபாசக்தி (பிரான்ஸ் )
நட்சத்திரன் செவ்விந்தியன் (அவுஸ்திரேலியா )
புஷ்பராணி (பிரான்ஸ் )
மெலிஞ்சிமுத்தன் (கனடா)
உமா (ஜேர்மனி)
ஹரி ராஜலட்சுமி (இங்கிலாந்து)
சயந்தன் (சுவிற்ஸர்லாந்து)
கவிதா (நோர்வே)
சுமதி ரூபன் (கனடா)
தர்மு பிரசாத் (பிரான்ஸ் )
தேவன் (சுவிற்ஸர்லாந்து )
ஏ.ஜி. யோகராஜா (சுவிற்ஸர்லாந்து)
நெற்கொழுதாசன் (பிரான்ஸ் )
கற்சுறா (கனடா)
தர்மினி (பிரான்ஸ் )
பதீக் அபூபக்கர் (இங்கிலாந்து)
விஜி (பிரான்ஸ் )
கரவைதாசன் (டென்மார்க்)
தமயந்தி (நோர்வே)
சுரதா யாழ்வாணன் (ஜேர்மனி)
எம்.ஆர். ஸ்டாலின் (பிரான்ஸ் )
புதியவன் இராசையா (இங்கிலாந்து)
ராகவன் (இங்கிலாந்து)
க. சுதாகரன் (சுவிற்ஸர்லாந்து)
ச.தில்லைநடேசன் (பிரான்ஸ் )
பானுபாரதி (நோர்வே)
ஜீவமுரளி (ஜேர்மனி)
அதீதா (கனடா)
தேவிகா கெங்காதரன் (ஜேர்மனி)
விஜயன் (சுவிற்ஸர்லாந்து)
கோமகன் (பிரான்ஸ் )
சஞ்சயன் (நோர்வே)
அசுரா (பிரான்ஸ் )
பத்மநாதன் நல்லையா (நோர்வே)
இளங்கோ (கனடா)
காருண்யா கருணாகரமூர்த்தி (ஜேர்மனி)
சரவணன் நடராசா (நோர்வே)
கலையரசன் (நெதர்லாந்து)
திருமாவளவன் (கனடா)------------------