இஸ்லாமிய தீவிரவாதிகளால் 17 பேர் கொல்லப்பட்டதை எதிர்த்து இன்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் பல நகரங்களிலும் இடம்பெற்ற ஊர்வலங்களில் லட்சோபலட்சம் மக்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். வரலாறு காணாத இன்றைய பேரணியில் நாற்பதுக்கும் அதிகமான நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.