12/30/2015

ஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்னார்கள் கூட்டமைப்பினர் -நல்லாட்சி ஜனாதிபதி


Afficher l'image d'origineகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 13ஆம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி ஏ.எம்.றியாழ் முன்னிலையில் இன்று புதன்கிழமை இந்த மூவரையும்  ஆஜர்படுத்தியபோது, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 


 இந்த யுத்தத்தில் நமது நாட்டில் சுமார் இரண்டு  லட்சம் பேருக்கு மேல் கொல்லப்பட்டிருப்பார்கள்.இதில் யுத்தத்தில் இடம்பெற்ற சண்டைகளில் அரச இராணுவம்,புலிகள் இருதரப்பிலும் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பர்.அதேவேளை புலிகளாலும் இராணுவத்தாலும் கொல்லப்பட்ட பொதுமக்கள் ஒரு லட்சம் இருக்கலாம்.அதில்அப்பாவிசாமானியர்கள்,எழுத்தாளார்கள்,ஊடகவியலாளர்கள்,மதகுருக்கள்,அரசியல்வாதிகள் என்று பலதரப்பினரும் அடக்கம்.

இந்த அரசியல்வாதிகளிலும் கூட ஜனாதிபதிகள்,முக்கிய அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் நகரபிதாக்கள்,மேயர்கள்,மற்றும் தேர்தல்வேட்பாளர்கள் என்று   சுமார் இருநூறு  பேருக்குமேல் பட்டியலிடலாம்.

யுத்தத்தில் இழைக்கப்பட்ட யுத்த குற்றங்களுக்கு  சர்வதேச விசாரணையா? உள் நா ட்டு விசாரணையா? தேவை என்று சூடு பறந்த விவாதங்கள் எல்லாம் இப்போது முற்றுபெற்றுவிட்டன.காணியதிகாரமா போலிஸ் அதிகாரமா? அதிகார பரவலாக்கம் 13வது சட்டத்திருத்தத்துக்கு உட்பட்டதா? அதற்கு மேலான 13+ஆக இருக்குமா? என்றெல்லாம் மகிந்த காலஅரசாங்கத்துக்கு இருந்த நெருக்குவாரங்கள் எல்லாம் இப்போது பறந்தோடி விட்டது.நல்லாட்சி அரசாங்கம் வந்தவுடன் முப்பது வருட உள்நாட்டு யுத்தம் நடந்தநாடா நமது என்று எண்ணத்தோன்றுகின்றது. காரணம்  நல்லாட்சி அரசு வந்தவுடன் தமிழர்களுக்கு சொர்க்கம் கிடைத்துவிட்டதுபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வளர்த்த நாய் போல ரணிலின் காலடியில் தங்களுக்கு கிடைக்கும் எலும்பு துண்டுகளை நக்கிகொண்டு வலைசுருட்டிகொண்டு கிடக்கின்றனர். 

ஆனால் நாட்டில் ஒரே ஒரு அதிசயம் மட்டும் நடக்கின்றது.ஜோசேப் பரராச சிங்கம் என்று   ஒரு மாமனிதர் கொள்ளப்பட்டாராம், ஒரு கட்டை  பெடியன் சுட்டுவிட்டுபோனதை அல்போன்ஸ் மேரி பாதர் பார்த்தாராம்,  இலங்கையில் அப்போது பிள்ளையான் கையில் மட்டும்தான் ஆயுதம் இருந்ததாம்,பிள்ளையான் கட்டை என்பதால்  அவரது கொலைக்கு பிள்ளையான்தான்  பொறுப்பாம், ஆகவே அதை விசாரித்தே தீர வேண்டுமாம்.

எனவே ஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிப்பேன் என்று நல்லாட்சி ஜனாதிபதி பிள்ளையானை பிடித்து அடைத்துவிட்டதுடன் எல்லாவித யுத்தகுற்றங்களும் முடிந்துவிட்டன. மக்களுக்கு நீதி கிடைத்துவிட்டது. மக்கள் மட்டற்ற மகிழ்சியில் திகழ்கின்றார்கள்.நல்லாட்சி நன்றே மலர்ந்திருக்கின்றது.வாழ்க தமிழ் வளர்க தமிழீழம்.

மீன்பாடும் தேனாடான்  













»»  (மேலும்)

12/29/2015

பிரசாந்தனின் விளக்கமறியல்நீடிப்பு

Afficher l'image d'origine  செயலாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரரான ஹரனுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம்  திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு  நீதவான்; நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இவர்கள் இருவரையும்  ஆஜர்படுத்தியபோது, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி எம்.றியாழ் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி பூ.பிரசாந்தன் காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயல்பாடுகளை முடக்கும் நோக்குடன் ரணில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டு சதியின் விளைவாகஅதன் தலைவர் சந்திரகாந்தன் மற்றும் செயலாளரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
»»  (மேலும்)

தமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை- நளினி ரட்ணறாஜா-மனித உரிமை பாதுகாவலர், அரசியல் செயல்பாட்டாளர்

நளினி ரட்ணறாஜா,
மனித உரிமை பாதுகாவலர், அரசியல் செயல்பாட்டாளர் 

Afficher l'image d'origineநாட்டின் மொத்த சனத்தொகையில் 52% பெண்களையும் மொத்த வாக்காளார்களில் 58% பெண் வாக்காளர்களையும் கொண்டுள்ள இலங்கையில், அரசியலில் பெண்கள் வகிக்க வேண்டிய பங்கின் முக்கியத்துவத்தை இன்னும்கூட ஆண் அரசியல்வாதிகளும், ஆண் அரசியல் தலைமைகளும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. புரியாமல் இருக்கிறார்களா அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா என்பது எனக்கு இன்னும் புதிராகவே இருக்கிறது.
தொடர்ந்து ஆறு தசாப்தங்களாக பெண்கள் வகிக்க வேண்டிய அரசியல் பாத்திரம் ஆண்களால் மறுக்கப்பட்டேதான் வந்திருக்கிறது. அத்துடன், சிறுபான்மை மக்களுக்கு சிறு நன்மையேனும் ஆண் அரசியல் தலைமையால் கிடைக்கவில்லை . இன்று பிரச்சனை தீரும், நாளை விடிவு வரும் என்று கூவிக் கூவி வாக்கு வேட்டை நடத்துவது மட்டுமே நாம் காலம் காலமாகக் காணும் யதார்த்தம்.
மாற்றுக் கட்சிகள், பேரவைகள் எனத் தினம் தினம் அரசியல் அமைப்புக்கள் உருப்பெறுகின்றன. அதற்கான காரணம் என்னவென்று அவர்களைக் கேட்டால், மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தாமே – இதுநாள் வரை தாம் அங்கம் வகித்த அமைப்புக்கள் அல்ல – விடிவைப் பெற்றுத் தரப்போகிறோம் என்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் தமது வேட்பு மனுக்களில் கூட பெண்களைச் சேர்த்து கொள்ளத் தயங்குகிறார்கள். அப்படிச் சேர்த்தாலும் கூட, ஓரிருவரை எவ்வித முக்கியத்துவமும் வழங்காமல் வெறுமனே பேருக்காக மட்டுமேதான் பட்டியலில் சேர்க்கின்றனர். இதுவே இலங்கைத்தீவில் இன்றுவரை நிலவி வரும் அரசியலாகவுள்ளது .
அண்மையில், தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கபட்டதாகக் கூறப்படும் தமிழ் மக்கள் பேரவையில் மருந்துக்குக் கூடப் பெண்களின் பங்களிப்பு இல்லை. இந்த அமைப்பை உருவாக்கியதன் பின்னணியில் நடந்திருக்கக் கூடிய கலந்தாலோசனைகள், கருத்தாடல்களில் கூட பெண்களின் பங்களிப்பு இருந்ததாகத் தெரியவில்லை.
இந்தப் பேரவையில் ஏன் பெண்களுக்கு இடமில்லை என்று முகபுத்தகத்தில் கேட்டதற்கு அவ்வமைப்பில் அங்கத்தவராக உள்ள ஒருவர் கூறுகின்றார், ”பெண்களின் பங்களிப்புத் தேவை என்ற கோஷம் தொடக்கத்திலிருந்தே பலராலும் சுட்டிக் காட்டப்பட்டது, ஆகவே, எதிர்வரும் காலங்களில் பெண்களைச் சேர்த்துக் கொள்வோம். அதற்காக தகமையான ஆளுமைகளை, துறைசார் நிபுணர்களை தேடிக் கொண்டிருகிறோம். ஆனால், எமக்குச் செயல்பாட்டளர்கள் தேவையில்லை” என்கிறார் அவர். ஆமாம், பெண் சட்டத்தரணிகள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் போன்றவர்களைத் தேடுங்கள். அரசியல் பதவிகளை அலங்கரிக்க அவர்களைக் கொண்டு வாருங்கள். மக்கள் மத்தியில் பணி செய்யும் செயற்பாட்டாளர்களையோ, பெண்ணியவாதிகளையோ மற்றும் மனித உரிமை ஆர்வலர்களையோ, முன்னாள் போராளிகளையோ அரசியலுக்குள் கொண்டு வந்தால் உங்களையும் உங்கள் செயற்பாடுகள், திட்டங்களைக் கேள்வி கேட்பார்கள், கண்காணிப்பார்கள், உங்கள் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வார்கள், நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் சலாம் போட மாட்டார்கள் என்று அஞ்சுகிறீர்களா?
உங்களுடைய பெண்களுக்கு சம சந்தர்ப்பமும், சம வாய்ப்பும், தீர்மானம் எடுக்கும் சுதந்திரமும் சமூகத்தின் சகல மட்டங்களிலும், அரசியலிலும் கொடுக்க முடியாதவர்கள் சிங்களத் தலைமைகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு சமத்துவதத்தை பெற்றுத் தர முடியுமா? உங்களுக்கு அரசியலில்​பெண்களின் பங்களிப்பு பற்றிய தேவை உள்ளதெனத் தெரியாதபோது சிங்களத் தலைமைகளுக்கு எவ்வாறு தமிழ் மக்களின் பங்களிப்பு புரியப்போகிறது ?
சரியான பெண்களைத் தேடுகிறோம் என்ற கூற்று வேடிக்கையாகவும், விநோதமாகவும் உள்ளது. முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட போராட்ட வரலாற்றில், சகல துறைகளிலும், சகல மட்டங்களிலும், யுத்த களத்திலும், கடற்படையணியிலும், அரசியல் துறையிலும், ஆணுக்கு சமமாகப் பெண் நின்று போராடிய பூமியில் அரசியலில் என்றவுடன் மட்டும் தமக்குத் தோதான பெண்களைத் தேடுகிறார்களாம்.
துணிச்சலுடன் எதிரிக்கு முன்னின்று ஆயுதமேந்திப் போராடவும், தற்கொலை குண்டுதாரியாக தாம் கொண்ட இலட்சியத்திற்காகத் தமது உயிரை மாய்த்துக் கொள்ளவும் துணிந்து வந்த பெண்கள், அரசியல் என்றதும் உங்கள் கண்களுக்குக் காணாமல் போய் விட்டதுதான் அதிசயம்.
வெளிநாட்டுப் பயணங்கள், குளிரூட்டப்பட்ட கார்கள், செல்வாக்கு எல்லாம் கொட்டிக் கிடக்கும் சுகபோக அரசியலுக்குப் பெண்கள் தேவை இல்லை, ஆண்கள் மட்டுமே உரித்தானவர்கள் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் மக்கள் பிரச்சினையை முன்வைத்து ஆரம்பிக்கப்படுவதாகப் பறைசாற்றிக் கொள்ளும் அமைப்புக்களும் தெளிவாகவே வெளிப்படுத்துகின்றனர் .
போரால் உருக்குலைந்து, அனைத்து கொடுமைகளுக்கும் முகம்கொடுத்த வண்ணம், கண்ணீருடன் தம் உறவுகளைத் தேடி அலைவதெல்லாம் பெண்கள். பாலியல் தொழிலாளியாகவும், கூலித் தொழிலாளியாகவும், சுயகௌரவம் இழந்து உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி அன்றாடம் செத்துப் பிழைக்கிறார்கள் பெண்கள்.
தீர்மானம் எடுக்கும் சகல மட்டங்களிலும் அதற்கான அதிகாரத்தைக் கொண்டிருப்பது ஆண்களே. சமூக நலன் தொடர்பான எந்த நடவடிக்கைகளிலும், பெண்களின் பங்களிப்பின்றி தீர்வும் விடிவும் சமூகத்திற்கு எப்போதும் வராது.
கடைசியாக ஒன்றைக் கேட்கிறேன், “தமிழ் மக்கள் பேரவை“ என்ற பெயரில் உள்ள “மக்கள்” யார்? ஆண்கள் மட்டுமா? அமைப்பின் பெயரைத் “தமிழ் ஆண்கள் பேரவை” என்று மாற்றினால் மிகப் பொருத்தமாக இருக்குமன்றோ?
ஆணோ பெண்ணோ ஜனநாயக விழுமியங்களையும் நல்லாட்சியின் குணாதிசயங்களையும் மனித உரிமைகளையும், பெண் உரிமையையும் மதித்து நடக்காத, கருத்தில் கொள்ளாத எந்தக் கட்சியும் அல்லது எந்த அமைப்பும் தமிழ் மக்களின் பிரச்னைக்குத் தீர்வை பெற்றுத் தரும் என்பது தண்ணீரில் எழுதிய எழுத்தாகும்.

நன்றி *மாற்றம் 
»»  (மேலும்)

வடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச்சனை: அமைச்சர்

Afficher l'image d'origineஇலங்கை வடமாகாணத்தில் மாகாணசபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் என்று அனைத்துப் பிரிவுகளிலும் பெரும் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம் கூறியுள்ளார்.
இங்குள்ள 110 வைத்தியசாலைகளில் 102 வைத்தியசாலைகளே செயற்படுகின்றன. அவற்றில் 29 வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியர் கூட கடமையில் இல்லாத நிலைமையே நிலவுவதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தாதியர்கள் பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலைகளில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பல வைத்தியப் பிரிவுகளை மக்களுக்குத் திருப்திகரமான முறையில் நடத்திச் செல்வதில் பல சிரமங்களை எதிர்நோக்க நேர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான உடனடி நடவடிக்கையாக ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்த்திருக்கின்ற போதிலும், ஆளணி பற்றாக்குறையைப் போக்க முடியாதிருப்பதாவும் அமைச்சர் சத்தியலிங்கம் விவரித்தார்.
மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வதற்காக ஓய்வு பெற்றவர்களைக் கண்டறிவதும்கூட கடினமான பணியாகியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, வைத்தியர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக வைத்தியர் இல்லாத வைத்தியசாலைகளுக்கு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றுபவர்களை வாரத்திற்கு இரண்டோ மூன்று மணித்தியாலங்கள் அங்கு சென்று பணியாற்றும் வகையில் ஒழுங்குகள் செய்திருப்பதாகவும் ஆனாலும் அதுவும் வைத்திய தேவையைப் பூர்த்தி செய்வதற்கு பெரிய அளவில் பயன்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வைத்தியத் துறையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையைப் போக்குவதற்காக மாதம்தோறும் நடைபெறும் மாகாண சபைகளின் சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கான கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருவதாகவும், அவரும் அவ்வப்போது சிறிய அளவில் நியமனங்களை வழங்கி வருவதாகவும், எனினும் அது தேவையைப் பூர்த்தி செய்யப் போதவில்லை என்றும் டாக்டர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
தற்போது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ள 1200 வைத்தியர்களில் சிலரை வடமாகாணத்திற்கு நியமனம் செய்வதற்கு ஜனாதிபதியுடனான கடந்த மாதச் சந்திப்பின் பின்னர் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் உறுதியளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
»»  (மேலும்)

12/28/2015

புணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசல் உடைப்பு தலைவர் ஹக்கீம் அதிரடி விஜயம்

1998_1753692268197447_1759788398976625053_nசம்மாந்துறை 6ஆம் கொலனி பகுதியில் புணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசலுக்கு நேற்று இனந் தெரியாதவர்களால் சேதம் விளைக்கப்பட்டுள்ளது .இதனை அறிந்த  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அதிரடி  விஜயம் ஒன்றை மேற்கொண்டு பார்வையிட்டதுடன் பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய நிலைமையை கண்டறிந்தார் என்பது குறிப்பிடதக்கது.
»»  (மேலும்)

நடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நல்லாட்சி அரசு

  Afficher l'image d'origineதற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில், தான் உள்ளிட்ட 24 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாத்தறை, மாவரல ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின்னர் மக்களை சந்தித்தபோது ஞாயிற்றுக்கிழமை அவர் இதனை கூறியுள்ளார்.
-
»»  (மேலும்)

12/27/2015

அமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து ஆறு பேர் பலி

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் நாட்டின் தெற்கே பல இடங்களில் ஏற்பட்ட கடுமையான வானிலை சீற்றங்கள் காரணமாக குறைந்தது இருபத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
டெக்ஸாஸ் மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கே டல்லாஸ் பகுதியில் டொர்னேடோ சுழல்காற்று வீசி, சாலைகளில் இருந்து வாகனங்களை வீசியெறிந்துள்ளது.
அவ்வூரின் கார்லண்ட் என்ற புறநகர்ப் பகுதியில் நெடுஞ்சாலையிலிருந்து கார்கள் வீசியெறியப்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மின் கம்பங்களும் கம்பிகளும் பிடுங்கியெறியப்பட்டதால், ஐம்பதாயிரம் பேர் வரையிலானோருக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
டெக்ஸாஸுக்கு கிழக்கே மிஸ்ஸிஸிப்பி, டென்னெஸ்ஸி, அர்கன்ஸாஸ் ஆகிய மாகாணங்களில் கடும் சூறாவளி வீசியதில் பதினேழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வரும் நாட்களில் மேலும் மோசமான வானிலை சீற்றங்கள் ஏற்படலாம் என்றும் இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து மக்கள் வீடு திரும்பும் மக்கள், விமான நிலையத் தாமதங்கள், சாலையில் வெள்ளப்பெருக்கு போன்ற இடர்களைச் சந்திக்கலாம் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
»»  (மேலும்)

12/26/2015

ஜனாதிபதி அவர்களே தேர்தல்களை பின்போடுவது மக்களின் உரிமைகளை மறுப்பதாகும்.

Afficher l'image d'origineஉள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலத்தில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த மாதம் 31ஆம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தாம் என்ன நிலைப்பாடு எடுப்பது,எந்த கட்சியை ஆதரிப்பது  என்பது தொடர்பிலேயே ஜனாதிபதியின் தீர்மானத்தில் குழப்பநிலை காணப்படுவதாலேயே இந்நீடிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

பாராளுமன்ற தேர்தலில் தமது சொந்த கட்சி தோல்வியடைந்து ஐக்கிய தேசிய கட்சி வெற்றி சூடவேண்டும் என்று வேலைசெய்தவர் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. எப்படியிருந்த போதிலும் தத்தமது அரசியல் இலாப நட்டங்களுக்காக தேர்தல்களை பின்போடுவது மக்களின் உரிமைகளை மறுப்பதாகும்.கடந்த மகிந்த ஆட்சியில் ஒருபோதும் தேர்தல்கள் பின்போடப்படவில்லை என்பதை இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
»»  (மேலும்)

ஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது



புலிகள் செய்யும் கொலைகளை மூன்று  விதமாக வகைப்படுத்தலாம்.
முதலாவது வகை  கொலைகள் புலிகளால் உரிமைகோரப்படும். அப்படி புலிகளால் உரிமை கோரப்பட்டு கொலைசெய்யபடுபவர்கள் சமூக விரோதிகள்இதிருடர்கள்இவிபச்சாரிகள்  என  ஊடகங்களால் சித்தரிக்கப்படுவர்.இவர்களில் பலர் சாதாரணா மனிதர்களாக இருப்பர். இக்கொலைகள் காலப்போக்கில் எல்லோராலும் மறக்கப்பட்டுவிடும் ஏனெனில் இவர்கள் சாமானியார்களாக இருப்பார்.இப்படியாக வடக்கு கிழக்கில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டாவது வகை  கொலைகள்  புலிகளால் உரிமை கோரப்படமாட்டாது.இவற்றில் அதிகமானவை அரசியல் கொலைகளாக இருப்பதால் அவை உரிமைகோரப்பட முடியாதவையாகும்.ஆனால் புலிகளின் ஊடகங்கள் அந்த கொலைக்கு  நியாயம் வழங்கி  அவர்கள் கொல்லப்படவேண்டியவர்கள்இ தமிழ் சமூகத்தின்  துரோகிகள் என்று செய்திகளை பரப்பும். இக்கொலைகள் காலம்தோறும் பேசப்பட்டாலும் வரலாறும் அவர்களை துரோகிகள் என்றே எழுதும். இந்தியபிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை இந்த வகையறாவில் உள்ளடங்கும்  இவ்வகை கொலைகளுக்கு முகம் கொடுக்க நேருபவர்களில் பலர்  புத்திஜீவிகள்இஅரசியல்வாதிகள்இஎழுத்தாளர்கள்இ மாற்றுகருத்துகொண்டோர்இ ஊடகவியலாளர்கள் என பலவகைபடுவர்.அமிர்தலிங்கம் தொடக்கம் ரஜினி திரணகம ஈறாக கிங்ஷிலி இராசநாயகம் வரை பலநூறு  பேர் இப்படித்தான் கொல்லப்பட்டனர்.இவர்கள் பற்றிய எந்த விசாரணைகளையும் தமிழ் தலைமைகளோ "தமிழ் தேசிய மனித உரிமைவாதி"களோ பத்திரிகைகளோ கோருவதில்லை.

புலிகளால் செய்யப்படும் மூன்றாவது  வகை கொலைகள் விசித்திரமானவை.அவற்றை ஒருபோதும் புலிகளால் உரிமைகோரப்படாதவை. முடிந்தவரை அக்கொலைகளை மாற்று இயக்கங்கள் மீதும் அரச படையினர் மீதும் புலிகள் போட்டுவிடுவர்.இக்கொலைகள் 
அனேகமாக உட்கட்சி மோதல்களை சமாளிக்க புலிகள் தமக்குள்ளேயே அல்லது தமது நெருங்கியவர்களுக்குள்ளேயே நிகழ்த்தும் கொலைகளாகும். புலிகளின் மூத்த உறுப்பினர் சங்கர்இ பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன்இஐரோப்பாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கஜன் புலிகளின் சர்வதேச நிதிபொறுப்பாளர் நாதன் போன்றோரின் இரட்டைகொலை போன்றவையெல்லாம் இவ்வகைப்பட்டதுதான்.அதாவது புலிகளே கொன்றாலும் அதனை மற்றயவர்களின் தலையில் போட்டுவிட்டு அவர்களுக்கு தாமே அஞ்சலி செலுத்துவது வழமை. இப்படித்தான் சங்கருக்கு கேர்ணல் பட்டமும் சிவநேசனுக்கு மாமனிதர் பட்டமும் வழங்கப்பட்டன.

இந்த வகையில் ஜோசேப் பரராச சிங்கம் கொலை   மூன்றாவது  வகை கொலைகளுக்குள் அடங்க கூடியது.புலிகள் இந்தகொலையை புலிகள் புரிந்திருக்க முடியாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.ஜோசேப் பரராச சிங்கம் முன்பொருதடவை பொட்டம்மானால் நேரடியாகவே எச்சரிக்கப்பட்டிருந்தவர் என்பது முக்கியமானது.அக்கொலையை தேவாலயத்துக்குள் நிறைவேற்ற வேண்டியிருந்தமையால் பாதிரிமாருக்கு பதில் சொல்ல முடியாமல் அக்கொலையை புலிகள் மறுதலித்திருக்கலாம்.உடனடியாக  ஜோசேப் பரராச சிங்கத்துக்கு மாவீரர் பட்டம் கொடுத்து நிலைமையை திசை திருப்பியிருக்கலாம்.

அதேவேளை ஜோசேப் பரராசசிங்கம் கொலை செய்யப்பட்ட இடம் மட்டகளப்பு நகரம் என்பதும் அது உயர் பாதுகாப்பு வலயத்துள் உள்ள இடம் என்பதுமே அக்கொலை அரச தரப்பினரால் அல்லது அரசசோடு சேர்ந்தியங்கிய ஆயுத குழுக்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என சொல்லப்படுவதற்கான முக்கிய காரணம் ஆகும்.

ஆனால் இந்த கூற்று அடிப்படையற்றதொன்றாகும்.ஏனெனில் புலிகள் செய்த பல பகிரங்கமான தாக்குதல்களும் கொலைகளும்  உயர் பாதுகாப்பு வலையங்களுக்குள்ளேயே செய்யப்பட்டதாகும்.இலங்கைஇஇந்திய  ஜனாதிபதிகளின் பாதுகாப்பு வலையங்களுக்குள்ளேயே புகுந்து பிரேமதாசவையும் ராஜீவ் காந்தியையும்  கொல்ல முடியுமென்றால்இ பாதுகாப்பு அமைச்சர்கள் இருவரைஇ எத்தனையோ அரசியல் வாதிகளை  கொழும்பின் அதி உச்ச உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் நுழைந்து கொலை செய்ய  முடியும் என்றால்இ மட்டகளப்பு  உயர் பாதுகாப்பு வலயம் அவர்களுக்கு ஒன்றுமேயில்லை. 

 புலிகளின் பிளவுக்குள் புகுந்து விளையாடி தனது பதவிக்காய் குறிவைத்து இயங்கியவர் ஜோசேப் பரராசசிங்கம் ஆகும். பிளவுக்கு பின்னரும் வன்னிபுலிகளுக்கு ஆதரவாக அறிக்கை விட்டுகொண்டு இருந்த இவரை கருணா எப்படி தேர்தலுக்கு அனுமதித்தார்? தேர்தல் முடிந்த பின்னரும்  சுமார் ஒருவருட காலத்துக்கு  இவர் எப்படி  பாலுக்கும் காவல்  பூனைக்கும் தோழனாக நடித்துக்கொண்டிருந்தார்? கிழக்கு புலிகளுடன் ரகசிய உறவுகொண்டு தனது உயிரை   பாதுகாத்துக்கொண்டு இருந்தமை எப்படி பொட்டம்மானால் அறிய முடியாதிருந்திருக்கும்? என்கின்ற கேள்விகள் பல உண்டு. எனவே ஜோசேப் பரராச சிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்லை என்பதற்கு எந்தவிதமான  உத்தரவாதமும் கிடையாது.

அரசியல் ஆய்வாளர்ழூ தேவகுமாரன் 




»»  (மேலும்)

12/25/2015

பாகிஸ்தான் சென்றார் மோடி ; திடீர் பயணத்தால் அரசியல் பரபரப்பு

பிரதமர் மோடி இன்று பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். இவரது திடீர் பயணத்திற்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு காரணமாக இவரது பயணம் ரகசியமாக திட்டிமிட்டிருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது . ரஷ்யாவில் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி முடித்து விட்டு ஆப்ககானிஸ்தான் சென்றார் , அங்கு பார்லி., வளாகத்தை திறந்து வைத்து உரையாற்றினார் இரு நாட்டு உறவு எந்த அளவிற்கு சிறந்து விளங்குகிறது என தனது பேச்சில் விளக்கமளித்தார் . இந்த நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து பிரதமர் மோடி, பாகிஸ்தானுக்கு திடீரென புறப்பட்டு செல்வதாக அறிவிக்கப்பட்டது, காபூலில் இருந்து மாலை 3.45க்கு லாகூர் நோக்கி புறப்பட்டார் . முன்னதாக 3 மணி அளவில் அவர் லாகூரில் தரையிறங்கியதாகவும் ஒரு தகவல் பரவியது ஆனாலும் இது உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்பட்டது. மாலை 4. 50 மணியளவில் மோடி லாகூர் சென்றடைந்தார் . பிரதமர் மோடியின் இந்த திடீர் பயணம் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது .
»»  (மேலும்)

557 கைதிகள் விடுதலை


Afficher l'image d'origineகிறிஸ்மஸ் தினத்தையொட்டி, ஜனாதிபதி மன்னிப்பின் கீழ், 557 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
»»  (மேலும்)

12/24/2015

சுவிஸ் நாட்டில் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து ‘ஊரும் உறவும் பொங்கல் விழா-2016”

Scan_20151218புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து மூன்றாவது முறையாக மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஊரும் உறவும் பொங்கல் விழா-2016” எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரில் இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இவ்விழாவின்போது சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின்போது இலங்கையின் கிழக்கு வாழ் மக்கள் சுவிஸ் நாட்டில் ஒன்று சேரும் தருணம் நிகழ்வதுடன்> புதிய நட்பு உண்டாவதுடன்> உறவுகள் ஒற்றுமைப்படுவதற்கும்> பல்வேறான நன்மை தரும் விடயங்கள் நிகழவுள்ளதுடன்> எதிர்காலத்தில் ஒற்றுமையுடனான செயற்பாடுகள் மேற்கொள்ப்படுவதற்கும் களம் அமையப் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதன்போது பல்வேறான தமிழர்களின் பாரம்பரிய உணவு தயாரிக்கும் போட்டி> பாரம்பரியம் மிக்க கலை கலாசாரப் போட்டிகள் போன்றன நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. சுவிஸ் பேர்ன் நகரில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வின்போது பிரமாண்டமான முறையில் பொங்கல்  பொங்கி சூரிய பகவானுக்கும் சுவாமிக்கும் படைக்கப்பட்டதன் பின்னர் பரிமாறப்படவுள்ளது. இதன்போது இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்ததக்கது.

»»  (மேலும்)

12/21/2015

வன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது

Afficher l'image d'origineஎஸ்.சி./எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று மதியம் 2.10 மணிக்கு ராஜிய சபாவில் வெற்றி கரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.ஏற்கனவே லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டு இருந்ததுனால் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.அற்புதமான சட்டம் இது.கண்டிப்பாக சாதி ரீதியாக ஒடுக்கப்படும் தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் இந்த சட்டம் மிக பெரிய பாதுகாப்பு கருவியாக இருக்கும்
»»  (மேலும்)

சந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிறைப்படுத்தமுடியாது –ரி.எம்.வி.பி.யின் மகளிர் அணி தலைவி

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிறைப்படுத்தமுடியாத என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித்தலைவர் திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  நாவற்கேணியில் நடைபெற்றது.

இதன்போது குறித்த பகுதியில் உள்ள 20 குடும்ப பெண்கள் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான நிதிகள் வழங்கப்பட்டன.

இதற்காக கிழக்கு மாகாணசபை உறுப்பினரினால் இரண்டு இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாக மகளிர் அணித்தலைவர் திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி மாலதி மகேஸ்வரன் உட்பட மகளிர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய திருமதி செல்வி மனோகர்,
மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை நிலையை போக்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.கடந்த காலத்தில் எமது கட்சி தலைவர் சந்திரகாந்தனால் வாழ்வாதார திட்டங்கள் பல முன்னெடுக்கப்பட்டன.பல பெண்கள் அதன் மூலம் சிறந்த பலன்களைப்பெற்று தமது குடும்ப நிலைமையை மேம்படுத்தியுள்ளனர்.

சந்திரகாந்தன் இன்று சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அவரது பணியை சிறையில் அடைக்கமுடியாது.அதனை நாங்கள் முன்னெடுப்போம்.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது தமிழ் மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட கட்சி அதன் அர்ப்பணிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

மிக விரையில் எமது தலைவர் நிரபராதியாக வெளிவருவார்.மேலும் எங்கள் செயற்பாடுகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்படும்.கிழக்கு மாகாண தமிழர்களின் எதிர்காலம் எமது குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பில் எமது கட்சி சிந்தித்து செயற்பட்டுவருகின்றது என்றார்.
»»  (மேலும்)

12/19/2015

பெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்

தேசிய அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம், முன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால், நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை நிறைவேறியது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 160 பேரும் எதிராக 51 பேரும் வாக்களித்தனர்.  13 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதன்படி, இவ்வரவு செலவுத் திட்டம் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 
தமி்ழ்த் தேசியக் கூட்டமைப்பு, வரவு செலவுத் திட்டத்துக்கு  ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில், மக்கள் விடுதலை  முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் எதிராக வாக்களித்திருந்தனர். எனினும், லக்ஷ்மன் செனவிரத்ன, டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் ஆதரவாக வாக்களித்திருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ, அலிஸாஹிர் மௌலான, எம். கே .டி. எஸ், குணவர்தன, பிரேமலால் ஜயசேகர, கீதா குமாரசிங்க, விமல் வீரவன்ச, ஜனக்க பண்டார தென்னகோன், நடேசன் சிவசக்தி, மனுஷ நாணயக்கார ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 
»»  (மேலும்)

12/18/2015

அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய என்னை அரசியல் பழிதீர்க்கவே முற்படுகின்றனர்.

மக்களை நேசிக்கும் தலைவர்களை விமர்சித்து, துரோகிகளாக சித்தரித்து கிழக்கில் தலைமைகளே உருவாகக் கூடாது என கங்கணங்கட்டி செயற்படும், தமிழ் அரசியல் தலைமைகள் என தம்மைச் சொல்லிக் கொள்ளும் சூட்சுமமான வரலாற்றிற்கு நான் என்ன விதி விலக்கா?
கிழக்கு மண்ணையும் மக்களையும் நேசித்த தாம், கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் ஒருவரை ஒருவர் சந்தேகக்கண் கொண்டு நோக்காவண்ணம் நிதி, நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுத்ததோடு, இனம், மதம், மொழி கடந்து தனது கடமைப்பாடுகளை முன்னெடுத்திருந்தேன்.
இந்த நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
எனினும் தமக்கும் இந்த கொலைச் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் அதனை கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக கிறிஸ்தவ மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
இதேவேளை உலக மக்களின் விடியலுக்காய் உயிர்ப்பித்த யேசுபாலகன் பிறந்த இந்த மாதத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தன்னை அரசியல் பழி தீர்க்க முற்படுவதனை பொது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
யேசுபாலன் பிறந்த இந்த மாதம் அனைவரிற்கும் சுபீட்சமான மாதமாக அமைய வாழ்த்துகின்றேன். 

»»  (மேலும்)

கலாபூஷணம் அரச விருது பெற்ற இரா.நல்லையா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

மட்/களுதாவளையை சேர்ந்த திரு.நல்லையா அவர்களுக்கு அரச விருதான கலாபூசண விருது வழங்கப்பட்டுள்ளது.கலை கலாசார பண்பாட்டு தளங்களில் இவர் ஆற்றிய சேவைக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.சமூக சேவையாளரான இவர் முன்னாள் வங்கி முகாமையாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவருக்கு புலம் பெயர் வாழ் கிழக்குமாகாண மக்கள் சார்பில் உண்மைகள் இணையத்தளம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றது.
»»  (மேலும்)

•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்!

இலங்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் புலிகளே காரணம். புலிகள் இல்லை என்றால் பாலும் தேனும் ஆறாக ஒடும் என்றார்கள்.
புலிகளும் யுத்தமும் இல்லாமல் 6 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் மக்கள் வாழ்வில் எந்த மாற்றமும் நிகழவில்லை.
விபச்சார தொழில் குறிப்பாக சிறுவர் விபச்சாரத்தில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. இதுவே இலங்கை அரசின் வெட்கம் கெட்ட சாதனையாக உள்ளது.
ஆனால் இலங்கை அரசோ யுத்த காலத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தைவிட அதிக பணத்தை ராணுவத்திற்கு ஒதுக்குகிறது.
இத்தனை காலமும் அடக்கி வைக்கப்பட்ட மக்கள் தமது தேவைக்காகப் போராட ஆரம்பித்து விட்டார்கள்.
தொழிற் சங்கங்கள் ஒன்றினைந்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
விவசாயிகள் ஊர்வலமாக வந்து பிரதமருக்கு மனுக்கொடுக்க முனைந்தள்ளனர். ஆனால் பிரதமர் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார்.
விவசாயிகள் தமது வறுமை நிலையை உணர்த்தும் வண்ணம் கோமணத்துடன் தலைநகரை முற்றுகை இட்டுள்ளனர். ஆனால் அது குறித்து பிரதமர் எந்த வெட்கமும் அடையவில்லை.
மீண்டும் அனைத்து விவசாயிகளுடன் வந்து பாராளுமன்றத்தை அல்லது பிரதமர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடினால் எந்தவொரு அரசும் ஒரு நிமிடம் கூட தாக்கு பிடிக்க முடியாது. எனவே இதை உணர்ந்த அரசு மீண்டும் புலிகளை உருவாக்க முனையும்.
ஆனால் இனி மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் போராட்டத்தை இனி யாராலும் தடுக்க முடியாது.
»»  (மேலும்)

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தியினை வன்மையாக கண்டிக்கின்றோம்! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.

"தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்" என குறிப்பிடப்பட்டு வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. குறித்த சந்தேக நபர்களுக்கும் எமது கட்சிக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது என்பதனை ஊடகங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
சித்தாண்டிக் கிராமத்தினைச் சேர்ந்த ரெட்ணசிகாமணி புண்ணியமூர்த்தி என்பவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கதிர்காமத்தம்பி சிவப்பிரகாசம்; மற்றும் பிள்ளையான் நித்தியானந்தம் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் எனவும்; குறிப்பிடப்பட்டு வெளியான செய்தியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை தொடர்புபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இது தொடர்பில் எமது கண்டன அறிக்கையில்....
இது ஒரு உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.மேற்குறிப்பிட்ட இரு சந்தேக நபர்களுக்கும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சிக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது என்பதனை ஊடகங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
அண்மைக் காலங்களாக எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கோடு எமது கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களின் பெயர்களையும், குற்றச் செயல்களையும் கட்சியுடன் தொடர்பு படுத்துவதும் அதனை எந்த ஆதாரமும் அற்ற நிலையில் பத்திரிகைகளில் வெளியிடுவதனையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். குறிப்பாகBattinadham.com இணையத்தளம் எமக்கெதிராக பல பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
எமது கட்சி தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்கள் தற்போது விசாரணைக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாங்களும் இந்நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு வன்முறைகள், ஆர்ப்பாட்டங்களை தவிர்த்து எமது தலைவரின் விடுதலைக்காக செயற்படுகின்றோம். எனவே எமது கட்சி தொடர்பான செய்திகளை வெளியிடுகின்ற போது கட்சியுடன் தொடர்பு கொண்டு உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்தி செய்தி வெளியிடுவதானது செய்தியின் உண்மைத் தன்மையினை மேலும் உறுதிப்படுத்தும். என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இச் செய்தி வெளியிட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது கண்டனத்தையும் தெரிவித்து கொள்கின்றது.
க.குமாரசிறி
செயற்குழு உறுப்பினர்
TMVP.
»»  (மேலும்)

12/17/2015

இனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்

இனவெறுப்பு பேச்சு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக  அவைத்தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்தார்.
இந்த சட்டமூலம், நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்றும் அவை அறிவித்துள்ளார்.

»»  (மேலும்)

12/16/2015

விசாரணையின்றி தொடரும் விளக்க மறியல் அரசியல் பழிவாங்கலின் உச்சம்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்; தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா மற்றும் கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் ஆகியோருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 30ஆம் திகதிவரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 அன்று சிவநேசதுரை சந்திரகாந்தனை கைதுசெய்திருந்தனர். -முன்னாள் முதல்வருக்கு விசாரணையின்றி தொடரும் விளக்க மறியல் அரசியல் பழிவாங்கலின் உச்சம் என மட்டகளப்பு புத்தியீவிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
»»  (மேலும்)

ஆடம்பரமில்லா ஆசான்

ஆடம்பரமில்லா ஆசான் நுவரெலியா வட்டகொடையைச் சேர்ந்த திரு. சுப்பையா இராஜசேகரன் அவர்கள் நேற்று அரச விருதான கலாபூஷண விருதை பெற்றுகொண்டார். எழுத்தாளரும் அவன காப்பாளருமான இராஜ சேகரன் அவர்கள் மலையக புத்தி ஜீவிகளுள் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

சவூதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர்.

Afficher l'image d'origineசவூதி அரேபியாவில் இன்று நடைபெறுகின்ற வரலாற்று சிறப்புமிக்க உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தலில் அந்நாட்டுப் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர்.
மன்னராட்சி கீழ் செயற்ப்பட்டு வரும் சவூதி அரேபியாவில், தற்போதைய மன்னர் ஆப்லே;லாஹ் உள்ளாட்சி சபை நிர்வாகங்களுக்கான தலைமைகளை தேர்வுசெய்வதற்கு இம்முறை பொது மக்களுக்கு வாப்பளித்துள்ளார். மேலும் தேர்தலில் பெண்கள் வாக்களிப்பதற்கான மற்றும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ள்ளார்.
இந்நிலையில் இன்று 2,100 சபைகளில் தேர்தல் நடைப்பெறுகின்றது, மேலும் உள்ள 1050 சபைகளுக்கான நிர்வாகிகள் மன்னர் அனுமதியுடன் நியமிக்கப்படவுள்ளனர், இம்முறை நடைப்பெறும் தேர்தலில் 978 பெண்கள் போட்டியிடுகின்ற அதேவேளை, 5,938 ஆண் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இன்றைய தேர்தலின் முடிவுள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
»»  (மேலும்)

12/15/2015

விசாரணைகள் இன்றி தொடரும் விளக்கமறியல் அரசியல் பழிவாங்கலின் உச்சம்

Afficher l'image d'origine தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரரான ஹரனுக்கு எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இவர்கள் இருவரையும் ஆஜர்படுத்தியபோது, நீதிபதி என்.என்.அப்துல்லாஹ்  இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் பொய் குற்றம் சாட்டப்பட்டு இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி பூ.பிரசாந்தன் காத்தான்குடிப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார். 
»»  (மேலும்)

12/13/2015

திருமதி அருண். விஜயராணி மறைவு

திருமதி அருண். விஜயராணி மறைவு
சகோதரி அருண். விஜயராணி   நினைவுகளாக  எம்முடன் வாழ்வார்.
கலை - இலக்கியவாதி, சமூகப்பணியாளர்arun vijayarani

எழுதிச்  செல்லும்  விதியின்  கை
எழுதி  எழுதி  மேற்செல்லும்
தொழுது  கெஞ்சி  நின்றாலும்
சூழ்ச்சி  பலவும்  செய்தாலும்
வழுவிப்  பின்னாய்  நீங்கியொரு
வார்த்தை யேனும்  மாற்றிடுமோ,
அழுத  கண்ணீர்   ஆறெல்லாம்
அதிலோர்  எழுத்தை  அழித்திடுமோ
 --- உமர்கய்யாம்  ( கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு )
ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார்.
இலங்கை வானொலியிலும்  அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும்  நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான  அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் - தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர்.
தமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் - இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர்.
இவருடைய கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டது.
இவருடைய சிறுகதைகள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1970 களில் ஈழத்து இலக்கியத்துறையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக அறிமுகமான இவர் - பின்னாளில்;  மத்திய கிழக்கிலும் இங்கிலாந்திலும் வாழ்ந்திருப்பவர்.
1989  இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னரும் தொடர்ந்து கலை - இலக்கிய சமூகப்பணிகளில் ஈடுபட்டவர்.
 மெல்பன் வானமுதம் வானொலியின் சார்பில் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தினால்  அருண். விஜயராணி இதுவரைகாலமும் மேற்கொண்ட வானொலி ஊடகசேவைக்காக   அண்மையில்  பாராட்டி கௌரவிக்கப்பட்டார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்: முருகபூபதி  --- அவுஸ்திரேலியா

கன்னிகளின்  குரலாக  தனது  எழுத்தூழியத்தை தொடர்ந்த   அருண். விஜயராணியின்  வாழ்வும் பணிகளும்
இலங்கை   வானொலி  ' விசாலாட்சிப்பாட்டி ' இலக்கியத்துறையில்   ஆற்றிய  பங்களிப்பு
    _   முருகபூபதி
( கடந்த  ஒக்டோபர்  மாதம்  தேனீயில்  எழுதிய குறிப்புகள்   மீண்டும்  வாசகர்களின்  பார்வைக்கு )
" வணக்கம்....  பாருங்கோ.... என்னத்தைச் சொன்னாலும்  பாருங்கோ, உங்கடை   விசாலாட்சிப்பாட்டியின்ர  கதையைப்போல  ஒருத்தரும் சொல்லேலாது.    இந்தக்குடுகுடு  வயதிலையும்  அந்தப்பாட்டி  கதைக்கிற கதையளைக்   கேட்டால்  பாருங்கோ.... வயதுப்பிள்ளைகளுக்கும்  ஒரு நப்பாசை    தோன்றுது.    என்ன  இருந்தாலும்  திங்கட்கிழமை  எண்டால் பாட்டியின்ர   நினைவு   தன்னால  வருகுது.   அதனால  சில திங்கட்கிழமையில  அவவுக்கு  தொண்டை  கட்டிப்போறதோ  இல்லை... வேற  ஏதேன்  கோளாறோ    தெரியாது.   இவ  வரவே  மாட்டா..... பாவம் கிழவிக்கு  என்னாச்சும்  நேந்து போச்சோ   எண்டு  ஏங்கித் துடிக்கின்ற உள்ளங்களின்ரை    எண்ணிக்கை  எத்தனை   எண்டு  உங்களுக்குத்தெரியுமே...?
அதனாலை  ஒண்டு  சொல்லுறன்  கோவியாதையுங்கோ...  பாட்டியின்ர பிரதியளை   இரண்டு  மூண்டா  முன்னுக்கே  அனுப்பிவைச்சியளென்டால் பாட்டி    பிழைச்சுப்போகும்.   தடவித் தடவி   வாசிக்கிற  பாட்டிக்கு  நீங்கள் இந்த  உதவியை   எண்டாலும்  செய்து  குடுங்கோ "
இக்கடிதம்    இலங்கை  வானொலி  கலையகத்திலிருந்து  08-11-1976  ஆம் திகதி    நிகழ்ச்சித் தயாரிப்பாளர்  திரு. விவியன்  நமசிவாயம் அவர்களிடமிருந்து  ஒரு  பெண்   எழுத்தாளருக்கு  எழுதப்பட்டது. அந்தப்பெண்தான்  விசாலாட்சிப்பாட்டி  தொடரை   எழுதியவர்.
அந்தப்பெண்    அப்பொழுது  பாட்டியல்ல.   இளம்  யுவதி.   அவர்தான் அன்றைய    விஜயராணி  செல்வத்துரை,   இன்றைய  படைப்பாளி  அருண். விஜயராணி.    இவரது  விசாலாட்சிப்பாட்டி  வானொலித் தொடர்  சுமார்  25 வாரங்கள்    வானொலியில்  ஒலிபரப்பாகியது.
அக்காலத்தில்   பல  வானொலி  நாடகங்கள்  யாழ்ப்பாண  பேச்சு உச்சரிப்பில்    ஒலிபரப்பாகின.   விசாலாட்சிப்பாட்டிக்குரிய  வசனங்களை  அந்த    உச்சரிப்பிலேயே  விஜயராணி  எழுதினார்.
சமூகம்  குறித்த  அங்கதம்  அதில்  வெளிப்பட்டது.   அங்கதம்  சமூக சீர்திருத்தம்   சார்ந்தது.   அதனை   அக்கால  கட்டத்தின்  நடைமுறை வாழ்வுடன்   அவர்  வானொலி  நேயர்களுக்கு  நயமுடன்  வழங்கினார்.
வடக்கில்    உரும்பராயைச் சேர்ந்த  விஜயராணியின்  முதலாவது   சிறுகதை  ' அவன்  வரும்வரை '  இந்து  மாணவன்  என்ற  பாடசாலை மலரில்  1972   இல்  வெளியானது.
தவறுகள்  வீட்டில்  ஆரம்பிக்கின்றன  என்ற   இவர்  எழுதிய  மற்றும்  ஒரு வானொலி   நாடகத்தை  பின்னாளில்  துணை   என்ற   பெயரில் தொலைக்காட்சி  நாடகமாக  இயக்கித் தயாரித்து  ரூபவாஹினியில் விக்னேஸ்வரன்  ஒளிபரப்பினார்.
தொலைக்காட்சியின்   வருகைக்கு  முன்னர்  மக்களிடம்  வலிமையான ஊடகமாக   செல்வாக்கு  செலுத்தியிருந்தது   வானொலி.    அதிலும்  இலங்கை    ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்  தேசிய  சேவையும்  வர்த்தக சேவையும்    இலங்கைத்  தமிழ்  நேயர்களுக்கு  மாத்திரமின்றி   இந்தியாவில்     தமிழ்  நேயர்களுக்கும்  பெரும்  வரப்பிரசாதமாகத் திகழ்ந்தது.
அதற்கான  காரணம்:   ஒலிபரப்பின்  தரம்.   ஒலிபரப்பப்படும்  நிகழ்ச்சிகள். ஒலிபரப்பாளர்களின்    குரல்  வளம்.   வானொலிகள்  இருந்த  அனைத்து  தமிழ்   - முஸ்லிம்  இல்லங்களிலும்  காலை   முதல்  இரவு  வரையில் ஒலித்துக்கொண்டிருந்த   இலங்கை  வானொலி  நிகழ்ச்சிகள்  அனைத்து தலைமுறையினரையும்   கவர்ந்தது.   அந்த  நிகழ்ச்சிகளின்  பெயர்ப்பட்டியலே    நீளமானது.
இதில்   தமிழ் - முஸ்லிம்  எழுத்தாளர்களை   மிகவும்  ஆகர்சித்த  நிகழ்ச்சிகள், வானொலி  நாடகங்கள்,   இசையும்  கதையும்,   மாதர்  மற்றும்  கிராம சஞ்சிகை,    இளைஞர்களுக்கான  சங்கநாதம்,   சிறுவர்களுக்கான  சிறுவர்மலர்.   இவற்றில்  ஏராளமான  நாடக  எழுத்தாளர்கள்,  வானொலி கதாசிரியர்கள்,    சிறுவர்  இலக்கியம்  ,  சிறுவர்  நாடகம்,   நேயர் கடிதம்    எழுதுபர்கள்  அறிமுகமானார்கள்.    அவ்வாறு  வானொலி  நேயர்களுக்கு   அறிமுகமாகியவர்  விஜயராணி.
கொழும்பில்    தெகிவளையில்  தமது  பெற்றோர்  சகோதரங்களுடன்  வாழ்ந்த    காலப்பகுதியில்   -  இலங்கை   வானொலி  தமிழ்  நேயர்களினால் வரவேற்பை பெற்றிருந்த    சில  நிகழ்ச்சிகளுடன்  சம்பந்தப்பட்டிருந்தார்.
அவுஸ்திரேலியாவில்    கால்நூற்றாண்டுக்கு  மேற்பட்ட  காலம்  முதல் வாழும்   திருமதி  அருண். விஜயராணி   மெல்பனிலிருந்து  அந்த வசந்தகாலத்தை   நினைத்து  நனவிடை   தோய்ந்துகொண்டிருக்கிறார்.
படைப்பாளியிடம்    எழுதிக்கேட்டு  ஆக்கங்களை   ஊடகங்களில்  ஒலிபரப்பிய    வானொலியும் -  பிரசுரித்த  பத்திரிகைகளும்  இன்றைய  நவீன   யுகத்தில்  அந்த  மரபை   கைவிட்டமைக்கு  இன்றைய  நவீன தொழில்   நுட்பம்தான்  அதிலும்   கணினி  -  மின்னஞ்சல்  யுகம்தான்   பிரதான   காரணம்.
வீரகேசரி   வாரவெளியீட்டின்  பொறுப்பாசிரியராக  பணியாற்றிய  பொன். ராஜகோபால்    ஈழத்து    எழுத்தாளர்களை    ஊக்குவித்தவர்.   1970 - 1980 காலப்பகுதியில்   அவர்  சில  பரீட்சார்த்த  முயற்சிகளையும் வாரவெளியீட்டில்   மேற்கொண்டார்.
ஏற்கனவே    படைப்பாளிகள்  எஸ்.பொன்னுத்துரை,    குறமகள்  வள்ளிநாயகி, இ.நாகராஜன்,    கனகசெந்தி  நாதன்  ஆகியோர்  இணைந்து  எழுதிய  மத்தாப்பு  புதினத்தை    படித்திருந்த  அவர்,  அதுபோன்றதொரு  தொடரை வீரகேசரி    வாரவெளியீட்டிலும்  வெளியிட  விரும்பினார்.
நாளைய  சூரியன்  என்ற    தலைப்பில்  ஐந்து  பெண்   எழுத்தாளர்கள் இணைந்து    எழுதும்  தொடர்  வெளியானது.    முதல்  அங்கத்தை   அருண். விஜயராணி    எழுதியிருந்தார்.    தொடர்ந்து  மண்டூர்  அசோக்கா, தமிழ்ப்பிரியா,   தாமரைச்செல்வி,    தேவ மனோகரி  ஆகியோர்  எழுதினர்.   இது   போன்ற  பரீட்சார்த்த  முயற்சிகள்  பற்றி  முன்பொரு  தடவை எழுதியிருக்கின்றேன்.
ஆயினும் -  இலங்கையில்  இருந்தகாலத்தில்  நான்  இவரை சந்திக்கவில்லை.    குறிப்பிட்ட  நாளைய  சூரியன்  தொடரை  ஒப்புநோக்கும் (Proof Reading)  பொழுதே   படித்திருந்தேன்.   அக்கால கட்டத்தில்  நாளைய சூரியன்   வாசகர்களிடமும்  விமர்சகர்களிடமும்  வரவேற்பை பெற்றிருந்தமைக்குக்காரணம்  அந்தக்கதையின்  கருப்பொருள்.  ஹிப்பிக் கோலத்தில்  அலையும்  ஒரு   பாத்திரம்  பற்றிய  கதை.   ஈழத்து இலக்கியத்தில்   அதனை   பெண்   எழுத்தாளர்கள்  எழுதியமையினால்  துணிகர  முயற்சி  என்றும்  சில  விமர்சகர்கள்  சொன்னார்கள்.
பின்னர்   சிறிதுகாலம்  விஜயராணியின்  எழுத்துக்களை  பத்திரிகையிலும் காணவில்லை.   வானொலியிலும்  அவரது  படைப்புகள் ஒலிபரப்பாகவில்லை.
வீரகேசரியில்   விஜயராணியின்  உறவினர்  சோமசுந்தரம்  ராமேஸ்வரன் பத்திரிகையாளராக   பணியிலிருந்த  எனது  நண்பர்  . அவர்தான்  விஜயராணி   திருமணம்  முடித்து  மத்திய கிழக்கில்  ஒரு  நாட்டிற்கு கணவருடன்    சென்றுவிட்ட  தகவலை  தெரிவித்தார்.
காலங்கள்   சக்கரம்  பூட்டியது.  விரைந்துவிடும்.
விஜயராணியின்  குடும்பத்தினர்  கலை,   இலக்கியம்,   இசை,  நடனம் முதலான   துறைகளில்  ஆர்வம்  மிக்கவர்கள்.   விஜயராணியின்  தந்தையார்    இலங்கையின்  மூத்த  ஓவியர்.   யோகர் சுவாமியின்   சீடர்.    இன்றும்  நாம்  பார்க்கும்  நாவலியூர் சோமசுந்தரப்புலவரின்   படத்தை   தமது  ஒளிப்படக்கருவியால்  எடுத்த  கமரா   கலைஞருமாவார்.   
அவருடைய    தங்கையின்  மகன்தான்  ஈழத்தின்  மூத்த  எழுத்தாளர் முனியப்பதாசன்.    விஜயராணியின்  அக்காமார்  ,   அண்ணன்மாரின் பிள்ளைகள்   நடன,  இசை  அரங்கேற்றம்  கண்டவர்கள்.   இவ்வாறு    கலை,  இலக்கிய,  சமூகப்பார்வையுடன்  வாழ்ந்த குடும்பத்திலிருந்து    வந்த  விஜயராணியின்  கணவர்  அருணகிரி  ஒரு பொறியியலாளர்.    பெரும்பாலான   பெண்   இலக்கியவாதிகளின்  கணவர்கள் போன்று   அவருக்கு  இந்தத்துறையில்  நாட்டம்  இல்லையாயினும்  தமது மனைவியின்    எழுத்துப்பணிகளுக்கு  உற்றதுணையாக  விளங்குபவர்.
அதனாலும்   விஜயராணி  செல்வத்துரை  என  முன்னர்  நாம் அறிந்திருந்தவர்   பின்னாளில்  இலக்கிய  உலகில்  அருண். விஜயராணி என்று   அறியப்பட்டார்.
அருண். விஜயராணி   எழுதத் தொடங்கியகாலம்  முதல்  பல  நாடகங்களை சிறுகதைகளை,    வானொலிச்சித்திரங்ளை   எழுதியிருந்தபோதிலும்  தமது நூல்களை    வெளியிடுவதில்  ஆர்வம்  கொண்டிருக்கவில்லை. அவர்   மெல்பன்  வந்தபின்னர்  எனது  இரண்டாவது  சிறுகதைத்தொகுதி சமாந்தரங்கள்  நூலின்   வெளியீட்டு  விழாவை   25-06-1989  ஆம்  திகதி மெல்பன்  வை. டபிள்யூ. சி. ஏ.   மண்டபத்தில்  நடத்தியபொழுது  அருண். விஜயராணியும்  உரையாற்றினார்.   சிட்னியிலிருந்து  மூத்த  எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையும்    வருகைதந்து  உரையாற்றினார்.   இருவரும் அவுஸ்திரேலியாவில்    ஏறிய  முதல்  மேடையாக  அந்த  இலக்கிய நிகழ்வு   அமைந்தது.
தாம்  பலவருடங்கள்  இலங்கையிலும்  லண்டனிலும்  இருந்தும்கூட   தமது ஒரு    நூலைத்தன்னும்  வெளியிட  முடியாதிருந்த  இயலாமையை  அன்று அவர்  மேடையில்  சொல்லி,  அந்த  நிகழ்வு  தனக்கு   முன்மாதிரியாக இருப்பதாக   குறிப்பிட்டதுடன்,    வீரகேசரி  வாரவெளியீட்டில்  அந்த  நிகழ்வு பற்றிய   கட்டுரையையும்  பின்னர்  எழுதியிருந்தார்.

1990  ஆம்  ஆண்டு  நான்  சென்னைக்கு  புறப்படுவதற்கு  முதல்நாள்  மாலை   தமது  கணவருடன்  எனது  வீட்டிற்கு  வந்த  அவர்,  என்னிடம்  ஒரு   கோவையை    கையளித்து,    அதில்  தனது  சிறுகதைகள் இருப்பதாகவும்   அதனை   சென்னை   தமிழ்ப்புத்தகாலயம்  அகிலன் கண்ணனிடம்   சேர்ப்பித்து  அச்சிடுவதற்கு  வழிவகை  செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
அன்றைய   உரையாடலில்  அதற்கு  தூண்டுகோலாக  இருந்தவர் அவருடைய    கணவர்தான்   என்பதையும்    அறியமுடிந்தது.
விமானத்திலேயே   அந்தக்  கதைகளின்  மூலப்பிரதிகளை  படித்தேன். தமிழகத்தின்    பிரபல  ஓவியர்  மணியம்  செல்வன்  வரைந்த முகப்போவியத்துடன்  அந்தநூல்  கன்னிகா  தானங்கள்  என்ற  பெயரில் சென்னை   தமிழ்ப்புத்தகாலய  வெளியீடாக  வந்தது.
21-04-1991 ஆம்  திகதி  கன்னிகாதானங்கள்  மெல்பனில்  அதே வை. டபிள்யூ. சி. ஏ.    மண்டபத்தில்  பேராதனை  பல்கலைக்கழக  முன்னாள் விரிவுரையாளர்  கலாநிதி  காசிநாதர்  தலைமையில்  நடந்தது.  இலங்கை வானொலியின்   முன்னாள்  தமிழ்ச் சேவைப்பணிப்பாளர்  திருமதி பொன்மணி  குலசிங்கம்  வருகைதந்து  வாழ்த்துரை   வழங்கியபொழுது அருண். விஜயராணியின்  வானொலி  நிகழ்ச்சிப்பங்களிப்புகளை நினைவுபடுத்தினார்.
குறிப்பிட்ட  கன்னிகா  தானங்கள்  நூலை   தமிழகத்தில்  வாசித்த  சுஜாத்தா ராணி   என்பவர் Indian Express  Weekend  இதழில்   நல்லதொரு  விமர்சனம்   எழுதியிருந்தார்.   அதனையும்  தினகரன்  வாரமஞ்சரியில் அந்தனி ஜீவா   -  தேவமலர்  என்ற  புனைபெயரில்  எழுதிய பெண்பிரம்மாக்கள்   என்ற  தொடரில்  அருண். விஜயராணி   பற்றி எழுதியிருந்த    குறிப்புகளையும்  சிட்னியிலிருந்து  கவிஞர்  பாஸ்கரன், எஸ்.பொன்னுத்துரை,    மாத்தளை  சோமு  இலங்கையிலிருந்து  பொன். ராஜகோபால்,   சுடர்  இதழ்  ஆசிரியராகவிருந்த  கனகசிங்கம்  (பொன்னரி) மெல்பனிலிருந்து   ரேணுகா  தனஸ்கந்தா,  முருகபூபதி குவின்ஸ்லாந்திலிருந்து    வானொலிக்  கலைஞர்  சண்முகநாதன்   வாசுதேவன்   ஆகியோர்  எழுதிய  குறிப்புகளையும்  தொகுத்திருந்த    சிறிய பிரசுரமும்   அன்றையதினம்  வெளியிடப்பட்டது.
அருண். விஜயராணியின்    மெல்பன்  வருகையின்  பின்னர்  இங்கும்  சில கலை, இலக்கிய   மாற்றங்கள்  தோன்றின.   1990  தொடங்கப்பட்ட அவுஸ்திரேலியா   தமிழர்  ஒன்றியத்தின்  கலாசார  செயலாளராக  அவர் அங்கம்    வகித்ததுடன்  சங்கத்தின்  வெளியீடான  அவுஸ்திரேலியா முரசுவின்    ஆசிரியராகவும்  பணியாற்றினார்.   சிட்னி - மெல்பன் குவின்ஸ்லாந்து  தமிழ்   வானொலிகளிலும்  இவருடைய  பல  படைப்புகள்  ஒலிபரப்பாயின.    கவியரசு  கண்ணதாசனின்  திரைப்படப்பாடல்களில் இழையோடிய    தத்துவக்கருத்துக்களையும்,   சமூகம்,   மொழி,  பெண்கள் தொடர்பான  சிந்தனைகளையும்  தொகுத்து  தொடர்ச்சியாக உரைச்சித்திரங்களை   எழுதி  வான்  அலைகளில்  பரப்பினார்.
மல்லிகை   அவுஸ்திரேலியா  சிறப்பு  மலரை  நாம்  2000  ஆம்   ஆண்டு இறுதியில்  வெளியிட்டபொழுது,  அந்த  முயற்சிக்கு  பக்கபலமாக  இருந்தார்.    அதில்  இவர்  எழுதிய  தொத்து வியாதிகள்  என்ற சிறுகதையை   ஆங்கிலத்தில்  மொழிபெயர்ந்த  தமிழக  கவிஞி   தமிழச்சி சுமதி  தங்கபாண்டியன்  தாம்  விரிவுரையாளராக   பணியாற்றிய   சென்னை  இராணி   மேரி  மகளிர்  கல்லூரியில்  நடந்த  கருத்தரங்கொன்றில்  விமர்சித்திருக்கிறார்.
அருண். விஜயராணியின்   கன்னிகா தானங்கள்  தொகுப்பில்  இருக்கும் சிறுகதைகளை    கனடாவில்  வதியும்    சியாமளா  நவரத்தினம் ஆங்கிலத்தில்    மொழிபெயர்த்துள்ளார்.   ஆயினும்  ஆங்கில  வெளியீடு வெளிவருவதில்    தொடர்ந்தும்  தாமதம்  நீடிக்கிறது.
அருண். விஜயராணி    எமது  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கம்    -    இலங்கை  மாணவர்  கல்வி    நிதியம் முதலானவற்றிலும்    அங்கம் வகித்து  இவற்றின்  வளர்ச்சிக்கு  ஆதரவு வழங்கியவர்.    அத்துடன்  இந்த  அமைப்புகளின்  தலைவியாகவும்  சில வருடங்கள்  பணியாற்றினார்.    நாம்  தொடர்ந்து  நடத்திவரும்  தமிழ் எழுத்தாளர்   விழாக்களிலும்  அவரது  ஆதரவு  தொடர்ந்தது.
ஒருவிழாவில்   இவருடைய  முயற்சியினால்  வெளியான  மறைந்த எழுத்தாள ர் முனியப்பதாசனின்  சிறுகதைத்தொகுதி  இலங்கையில் அச்சிடப்பட்டு    அறிமுகப்படுத்தப்பட்டது.   அதனை   மல்லிகைப்பந்தல்  ஊடாக  வெளியிட்டிருந்தார்.    முனியப்பதாசனின்  கதைகளை  தேடி  எடுத்து தொகுத்தவர்  செங்கை ஆழியான்.
இவர்களும்  மல்லிகைப்பந்தலும்  இல்லையேல்  அந்தத் தொகுப்பு வெளிவந்தே  இருக்காது.    முனியப்பதாசனை  ஈழத்து  இலக்கிய  உலகம் மறந்திருந்த  வேளையில்,  அவரை  நினைவுபடுத்திய இலக்கியத் தொகுப்பாக  அந்த  நூல்  அமைந்தது.
சமீபத்தில்  சில   தமிழ்  இணையத்தளங்களில்   நிறைவடைந்த  விழுதல் என்பது  எழுகையே  என்ற   மெகா   தொடர்கதைத் தொடரை   புகலிட நாடுகளிலிருந்து    பல   படைப்பாளிகள்  எழுதினர்.   அதிலும்  அருண். விஜயராணியின்   ஒரு  அத்தியாயம்  இடம்பெற்றது.
சுமார்  35   ஆண்டுகளுக்கு    முன்னர்  வீரகேசரியில்  நாளைய  சூரியன் தொடர்கதையில்    சம்பந்தப்பட்டிருந்த  அருண். விஜயராணி , மீண்டும்  எழுதி அங்கம்வகித்த    தொடர்  சர்வதேச  பார்வையுடன்  நிறைவுபெற்றது.
படைப்பாளிகளின்    படைப்புமொழி  மாறிக்கொண்டிருக்கிறது. வெளியீட்டுச்சாதனங்களும்  ஊடகங்களின்  வடிவங்களும்  காலத்துடன் மாறிக்கொண்டிருக்கின்றன.
இந்த    மாற்றங்களுக்கு  மத்தியில்  அருண். விஜயராணி,  தமிழ்  இலக்கிய பரப்பில்  பலதரப்பட்ட  காலகட்டங்களில்  எழுதிக்கொண்டிருந்தாலும் அவருடைய   குரல்  பாதிக்கப்பட்டவர்கள்  சார்ந்து,  குறிப்பாக  பெண்கள் சார்ந்தே    ஒலித்துக்கொண்டிருக்கிறது.
»»  (மேலும்)

மக்களின் வாழ்வு பற்றி எங்களுக்கு கவலையில்லை வடகிழக்கு இணைப்புகோசம் எங்களை என்றும் வாழவைக்கும் -இரா. சம்பந்தன்

Afficher l'image d'origineநாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாக விளங்கினாலும் அரசாங்கத்துடனும் ஜனாதிபதியுடனும் நல்லிணக்கத்துடனேயே அது செயற்பட்டு வருவதாக பார்க்கப்படுகின்றது.
அதன் அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றக் குழுக்களின் துணைத் தலைவராக செயற்படுவதுடன், இந்த முறை வரவு செலவுத் திட்டத்துக்கும் அந்தக் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே த. தே. கூட்டமைப்பு கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள மட்டக்களப்பு , யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய மாவட்டங்களில் இந்த பதவியை தங்களுக்கு வழங்க ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கம் தெரிவித்திருந்தாக த.தே. கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மாவட்டங்களை சேர்ந்த த. தே. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் அந்த பதவி தொடர்பான எதிர்பார்ப்பு காணப்பட்டது.
தற்போது வடக்கில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த துணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ் மாவட்டத்திற்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் வன்னி மாவட்டத்திற்கும் ஜனாதிபதியினால் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கிழக்கில் அ. இ. ம காங்கிரஸின் துணைத் தலைவரும் துணை அமைச்சருமான எஸ். எச். அமீர் அலி மட்டக்கப்பு மாவட்டதிற்கான அபிவிருத்திக் குழு தலைவராக நியமனம் பெற்றிருக்கின்றார்.
ஐ. தே. க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எம். மஹ்றூப் திருகோணமலை மாவட்டத்திற்கும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொகமட் மன்சூர் அம்பாறை மாவட்டத்திற்கும் நியமனம் பெற்றுள்ளனர்.
இருந்தபோதிலும், "இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்ற இலக்கை கொண்டுள்ள தமது பயணத்தில் இதனை ஒரு முக்கிய விடயமாக தாங்கள் கருதவில்லை" என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் கூறுகிறார்.
அரசிடமிருந்து இதுபோன்ற சலுகைகளைப் பெறுவது தமது அரசியல் தீர்வு என்ற இலக்கை பலவீனப்படுத்துவதாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்
இந்த நியமனத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு தங்களிடம் இருந்ததாக தெரிவித்துள்ள அவர், தேவை ஏற்படும் பட்சத்தில் இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேசப்படும் என்றும் கூறுகின்றார்.
»»  (மேலும்)

வெள்ள மீட்பு பணியில் விஷ பூச்சி கடித்து தன்னுயிரை ஈந்த அன்புச் சகோதரன் இம்ரான்.


சென்னையில்‬ வெள்ள மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவொற்றியூரை சார்ந்த சகோதரர் இம்ரான் அவர்கள் விஷப்பூச்சி கடித்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு வந்திருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
»»  (மேலும்)

12/12/2015

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பதற்கான நகல் திட்டம்

நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பதற்கான நகல் திட்டத்தை, நுவரெலிய மாவட்ட செயலாளர் திருமதி. ஹெலன் மீகஸ்முல்ல, தன்னிடம் கையளித்துள்ளதாக தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 
நவம்பர் 18ஆம் திகதியன்று சில விடயங்களை அமைச்சரவையில் முன்மொழிந்தார். அந்த முன்மொழிவுகளில் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் அடங்கிய புதிய உத்தேச பிரதேச சபைகள் அமைவு தொடர்பான நகல் திட்டமே இன்று கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை செயலாளர் எஸ். அபேசிங்க, தேசிய கலந்துரையாடல் அமைச்சின் செயலாளர் திருமதி பேர்ல் வீரசிங்கவுக்கு, டிசம்பர் 3ஆம் திகதி இந்த அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் கடிதமொன்றை எழுதியிருந்தார். 

நுவரேலியா மாவட்டத்தில் வாழும் 706,588 ஜனத்தொகையில் தமிழ் மக்கள் 57.69 சதவீதமும் சிங்களவர்கள் 39.60 சதவீதமும் ,முஸ்லிம்கள் 2.47 சதவீதமும்  என்றடிப்படையில் இன்று வாழ்கிறார்கள். எனவே நுவரெலியா மாவட்டம் மலையக தமிழ் இந்திய வம்சாவளி மக்களின் இதயமாகும். எனினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் 6,500 ஜனத்தொகைக்கு ஒரு பிரதேச சபை இருக்கும் போது, நுவரெலியா மாவட்டத்தில்  200,000க்கு மேற்பட்ட ஜனத்தொகைக்கு ஒரு பிரதேச சபை என்ற நிலைமையே இருந்து வருகிறது. இது இந்த மாவட்ட மக்களுக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும். 

இதன்படி, அம்பகமுவ, ஹங்குரன்கெத்த, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, நுவரெலியா, வலப்பனை, நோர்வூட், மதுரட்ட, தலவாக்கலை, நில்தண்டாஹின்ன ஆகிய பத்து புதிய பிரதேச சபைகள் நுவரெலிய மாவட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விடயம், கொள்கையளவில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 
»»  (மேலும்)