ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் கொள்கைப் பிரகடனம் நாளை 22 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளது. மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு என்ற தொனிப் பொருளில் இம்முறை கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முற்பகல் 11 மணியளவில் தேர்தல் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.
பெளத்த மகாநாயக்க தேரர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பறங்கேற்க உள்ளனர். 2005 ஆம் ஆண்டில் மஹிந்த சிந்தனை, 2010 ஆம் ஆண்டில் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு, இம்முறை 2015 ஆம் ஆண்டில் மஹிந்த சிந்தனை முக்கால நோக்கு என்ற அடிப்படையில் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட உள்ளது.