இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செல்வம் அடைக்கலநாதன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் ஆகியோர் கொண்ட அணியினர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் உடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு சென்றனர். அங்கு எதிர்கட்சித் தலைவர் திரு.ரணில் விக்கிரமசிங்க, திருமதி.சந்திரிகா குமாரதுங்கா ,பொதுவேட்பாளர் திரு.மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இருந்துள்ளனர்.
கூட்டமைப்பின் குழுவினர் திரு.ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சை தொடக்கினர், அதற்கு அவர் இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை எல்லாத்துக்கும் திருமதி.சந்திரிக்காதான் பொறுப்பு என்றார். அதற்கு திருமதி.சந்திரிக்கா, என்னிடம் எந்த அதிகாரமும் இல்ல எனக்கு எந்த பவரும் இல்ல நீங்கள் திரு.மைத்திரிபால சிறிசேனவுடன் தான் பேசவேண்டும் என்று கூறிவிட்டார். அதற்கு திரு.மைத்திரிபால சிறிசேன எல்லாம் திரு சம்பந்தனுடன் பேசியாச்சு எனவே இது தொடர்பாக நான் பேசுவதற்கு எதுவும் இல்லை என்றார்.
மீண்டும் ரணிலுடன் சில விடங்களை அவசர அவசரமாக உரையாடியுள்ளனர். அவ்வுரையாடிடலில் திரு.ரணில் வடக்கில் இராணுவம் குடிகொண்டிருக்கிற நிலங்கள விடமுடியாது. தேவைக்கதிகமாக இராணுவம் வச்சிருக்கிற நிலத்தை வேண்டும் என்றால் விடலாம் என்று அழுத்தம் திருத்தமாக கூறியதும் இவர்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு திரு.சம்பந்தன் இந்தியாவில் இருந்து வந்த பின்னர் எங்கள் முடிவை தெரிவிக்கிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்கள். இந்தப் பேச்சுவார்தையின் போது திரு.சுமந்திரனைத் தவிர மற்றயவர்களை எந்த மதிப்பும் கொடுக்கவில்லை என்று அறியவருகின்றது.