எதிரணியின் போது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, எதிரணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தெஹிவளை – கல்கிஸை மாநகரசபையின் ஆளும் ஐ.ம.சு.கூ உறுப்பினரான சாவித்ர ரமால் டீ சில்வா, தீடீரென மைத்திரிபாலவை ஏச ஆரம்பித்ததுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாராட்டிக்கொண்டு அங்கிருந்த கதிரைகளை எத்தித் தள்ளியவாறு வெளியேறிய சம்பவமொன்று நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
வடமத்திய மாகாண சபையின் உறுப்பினர் ஒருவரும் அநுராதபுரம் பிரதேச சபை உறுப்பினர்கள் 18பேரும், மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக எதிரணியுடன் இணைந்துகொண்டனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள எதிரணியின் நடவடிக்கை அலுவலகத்தில் நடத்தப்பட்டதுடன் அதில் அந்த 18பேர் கலந்துகொண்டனர்.
இதில், தெஹிவளை – கல்கிஸை மாநகரசபையின் ஆளும் ஐ.ம.சு.கூ உறுப்பினரான சாவித்ர ரமால் டீ சில்வாவும் கலந்துகொண்டார். இவரும், மைத்திரிபாலவுக்கே ஆதரவு தெரிவிக்கப்போகிறாரா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேட்டபோதே, அவர் திடீரென மைத்திரிபாலவை ஏசத் தொடங்கியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பாராட்டியவாறு அங்கிருந்த கதிரை மேசைகளை எத்தித் தள்ளிக்கொண்டு அவர் வெளியேறியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சம்பவத்தை அடுத்து, மைத்திரிபாலவின் ஆதரவாளர்கள் சிலர், இது தொடர்பில் கிருளப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு - See more at: http://www.tamilmirror.lk/136380#sthash.RL8PXm0d.dpuf