எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்புக்கான தலைமைக்காரியாலயம் ,இன்று 07.12.2014 மட்டக்களப்பு திருமலை வீதியில் திறந்து வைக்கப்பட்டது.
இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை .பிரசாந்தன் பொருளாளர் தேவராஜ் தேசிய அமைப்பாளர் தவேந்திரராஜா கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ஆஷாத் மௌலானா உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் பெருமளவான மக்கள் வருகைதந்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.