12/11/2014

| |

த.தே.கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு: இன்று சுன்னாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஏகமனதாக முடிவு: சரவணபவன் எம்.பி வெளிநடப்பு”

 எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்து என சற்று முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர்களும் ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர்.

இன்று மாலை 3 மணி தொடக்கம் இரவு 7 இணிவரை சுன்னாகம் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபை உறுப்பினர்களும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இக்கூட்டத்திலிருந்து கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் வெளிநடப்புச் செய்து தனது எதிர்ப்பை பலமாக வெளிக்காடடியுள்ளார்.

இக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ், சுமந்திரன், மாவை. சேனாதிராசா, சிறிதரன், சிவசக்தி ஆனாந்தன், வினோநோதராதலிங்கம், சரவணபவன் ஆகியோருடன் சித்தாத்தன், ஆனோல்ட், கனகசபாபதி ஆகிய மூன்று வடமாகாண சபை உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய 27 மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.