
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
மிகவும் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டிருக்கும் இம்மைதானத்தில் உள்ளக விளையாட்டரங்கு, தங்குமிட வசதிகள், ஓடு பாதை, பார்வையாளர் மண்டபம், நீச்சல் தடாகம் என சர்வதேச விளையாட்டு மைதானததுக்கு ஈடாக அமைந்திருப்பது, மட்டக்களப்புக்கு கிடைத்த வரப்பிரசாதம் என கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் எஸ். மணிவண்ணன் தெரிவித்தார்.
மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன், மாநகர சபையின் உதவி ஆணையாளர் என். தனஞ்செயன், பொறியியலாளர் பி. அச்சுதன், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு மைதானம் திறப்பு விழாவின் பின்பு, மைதானத்தின் பராமரிப்பு மட்டக்களப்பு மாநகர சபைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.