12/25/2014

| |

பிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள்
















.பிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள் ஏன் புலிகள் கொன்ற தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை நினைவு கூருவதில்லை 

ட்டக்களப்பில் 2005ம் ஆண்டு மார்கழி மாதம் 25ம் திகதி கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 9வது ஆண்டு நினைவு தினம் இங்கு அனுஸ்டிக்கப்பட்டது.
இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், சீ,யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், கோவிந்தன் கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, மா.நடராஜா, பிரசன்னா இந்திரகுமார் உட்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்துக்கு அருட்தந்தை மேரி அடிகளார் முதல் தீபச்சுடரை ஏற்றியதை தொடர்ந்து அதிதிகளால் தீபச்சுடர் ஏற்றப்பட்டதுடன் ஆத்மசாந்தி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவுகளும் பகிரப்பட்டன.பிணங்களை வைத்து அரசியல் செய்யும் விண்ணர்கள் ஏன் புலிகள் கொன்ற தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை நினைவு கூருவதில்லை