12/12/2014

| |

மட்டு. இணைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட குழுவினர் பயணித்த வாகனம் விபத்து: எழுவர் காயம்

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் 

மட்டக்களப்பு மரப்பாலத்தில் இன்று வெள்ளிக்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அருண் தம்பிமுத்து உட்பட 19 பேரும் 03 வாகனங்களில் பயணித்தனர். இதன்போது, முன்னால்  இவர்களின் வாகனமொன்று  பயணித்தபோது,  பின்னால் பயணித்த இரண்டு வாகனங்களில் ஒன்று மற்றொன்றை மோதி, முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்தையும்  மோதியதாகவும் பொலிஸார் கூறினர். 

இந்த விபத்தில் காயமடைந்த 07 பேரும் உடனடியாக கரடியனாறு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். 

இருப்பினும், ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து எந்தவித காயமின்றி தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

புதூரைச் சேர்ந்தவர்களான நா.சிவராசா (வயது 53),  கே.பத்மநாதன் (வயது 53), உன்னிச்சையைச் சேர்ந்த கே.ஜெயரங்கநாதன் (வயது 49), திமிலைதீவைச் சேர்ந்த எஸ்.குமார் (வயது 36), ஏறாவூரைச் சேர்ந்த ஏ.சீனு (வயது 29), மாமாங்கத்தைச் சேர்ந்த ஜி;.தெய்வேந்திரதாஸ் (வயது 50), கித்துளைச் சேர்ந்த கே.ஐயாத்துரை (வயது 58) ஆகியோரே காயமடைந்துள்ளனர். 

மேலும், இந்த விபத்தின்போது சேதமடைந்த வாகனங்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. 

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்