12/20/2014

| |

தேர்தலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்: அ.இ.த.கா

ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவரில் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் என தனது கட்சி, தமிழ் மக்களுக்கு ஆலோசனை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.