வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப் பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேருவில பிரதேசத்திலுள்ள 'வெள்ளம் தாங்கி' என்னும் பகுதியிலேயே பாதுகாப்பு அணை நேற்றிரவு அல்லது இன்று அதிகாலைவேளையில் உடைப்பெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்பு மூதூர் மற்றும் சேருவில பிரதேசத்தின் சில பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பாரிய அணையொன்று சுமார் 60 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பாதுகாப்பு அணையே தற்போது உடைப்பெடுத்துள்ளது. இதனால் கங்குவேலி, படுகாடு. நிலாபொளை பிரதேச வயல் நிலங்கள்முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கையில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்ததன் விளைவாக இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.