தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரை காலமும் ஆதரவு வழங்கிய முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 31 ஆதரவாளர்கள், நேற்று வியாழக்கிழமை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டனர்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முல்லைத்தீவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டே, இவர்கள் தங்களது ஆதரவினை ஜனாதிபதிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.