ஐரோப்பிய சட்டத்துறையில் பரிஸ்ரர் (Barrister) பட்டம்....
பிரான்ஸ் தமிழ் மாணவியின் உயர் சாதனை.....
பிரான்ஸ் தமிழ் மாணவியின் உயர் சாதனை.....
உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான Paris-Sorbonne University இன் இவ்வாண்டிற்கான புலமைசார் உயர் கல்வியை (Professional Higher Studies) நிறைவு செய்து சட்டத்துறையின் மனித உரிமைகள் சார் (Human Rights) பரிஸ்ரர் பட்டம் பெற்றுள்ளார் பிரான்சின் தமிழ் மாணவி ஒருவர்.
Pontoise நகரில் வசிக்கும் செல்வி. ஆன் குகநாதன் என்கின்ற மாணவியே Barrister தகமையுடன் ஐரோப்பிய சட்டத் துறைக்குள் நுழைகிறார்.
அண்மைய காலங்களில், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் இளையவர்கள், தாம் வாழும் நாடுகனையும் தாண்டி சர்வதேச அளவில் கல்வித் தகமைகளில் மேம்பட்டு சாதனை படைத்து வருகிறார்கள்.
இனம்-மதம்-சாதி-பால் என ஒரு வட்டத்தினுள் அடங்கிவிட்ட எமது தலைமுறையின் சிந்தனைகளை உடைத் தெறிந்து, மாற்றம் காணும் இன்றைய உலகத்துடன் , நம் எதிர்கால சமூகமும் இணைந்து வருவதை மகிழ்வுடன் அனைவரும் எதிர் கொள்ள வேண்டும். அவர்களது சாதனைகளை வாழ்த்தி வரவேற்க வேண்டும் ,இதன் மூலம் எனைய மாணவ சமூகம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
இலங்கை வரலாற்றில் மருத்துவம், பொறியியல், கணக்கியல், சட்டம் போன்ற துறைகளில் அதி உயர் பட்டமும் பாண்டித்தியமும் பெற்று புகழடைந்தவர்கள் கூடுதலாக ஆண்களாகவே இருந்தனர் 1960-1970 காலப்பகுதிகளில்.
குறிப்பாக சட்டத்துறையில் அன்றைய காலங்களில் பரிஸ்றர் (Barrister),கியூ.சி (Queen Council ) போன்ற உயர் தகைமைகளை பெற்று இலங்கையின் நீதித் துறை வராலாற்றில் இடம் பிடித்தவர்கள் ஒரு சிலராக அதுவும் ஆண்களாகத்தான் இருந்தார்கள்.
குறிப்பாக சட்டத்துறையில் அன்றைய காலங்களில் பரிஸ்றர் (Barrister),கியூ.சி (Queen Council ) போன்ற உயர் தகைமைகளை பெற்று இலங்கையின் நீதித் துறை வராலாற்றில் இடம் பிடித்தவர்கள் ஒரு சிலராக அதுவும் ஆண்களாகத்தான் இருந்தார்கள்.
இந்த வரிசையில் திருவாளர்கள் ஜீ.ஜீ. பொன்னம்பலம், எம்.திருச்செல்வம்,எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ,கொல்வின் ஆர் டி சில்வா, பீற்றர் கெனமன், திஸ்ஸ விஜயறட்ணே , மு.சிவசிதம்பரம், சி.கதிரவேற்பிள்ளை, காமினி அத்துக்கொறள இப்படி சிலரை மட்டுமே சொல்லலாம்.
இந்த நிலைமைகள் மாற்றப்பட்டு இன்றைய இளம் சமூகம் குறிப்பாக புலம் பெயர் இளையோர் கல்வியில் மட்டுமல்ல அனைத்து ஆரோக்கியமான துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள், பாகுபாடின்றி.
இதன் தொடர்ச்சியாக தனது 24வது வயதில் பரிஸ்றர் தகைமையுடனான ஒரு சட்டத்தரணியாக ஐரொப்பிய சட்டப் பரப்பில் வலம் வரவுள்ள செல்வி .ஆன் குகநாதனை நாமும் வாழத்தி வரவேற்போம்.
இவர் புலம் பெயர் தமிழ் ஊடகத்துறையின் ஆரம்ப கர்த்தாவும் டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஸ்தாபக இயக்குனருமான திரு எஸ்.எஸ்.குகநாதன்-றஜனி தமபதிகளின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி முகனூல்