12/09/2014

| |

புகலிட தமிழ் தேசிய கனவான்களே கிளிநொச்சியில் 3000 க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள்

கிளிநொச்சியில் ஏறக்குறைய 3000 க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் 50 பேருக்கு மேல் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு நிரந்தரமாக உதவிகளும் வைத்தியமும் தேவை. ஆனால் கிளிநொச்சியில் எலும்பு முறிவு நெரிவுக்கான சத்திரசிகிச்சை நிபுணர் எவரும் இல்லை. அப்படியான நிபுணர்கள் யாரும் இருந்தால் இவர்கள் நிரந்தரத் துன்பத்திலிருந்தும் துயரத்திலிருந்தும் விடுதலைபெறக் கூடியதாகவோ ஆறுதலடையதாகக் கூடியதாகவோ இருக்கும்.
அது மட்டுமல்ல, அப்படி ஒரு நிபுணர் இருந்தால் அவருடைய அனுசரணையோடு இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிகிச்சை மையத்தையோ புனர்வாழ்வு மையத்தையோ நிர்மாணிக்க முடியும். இதற்காக உதவக்கூடியவர்களும் உள்ளனர்.
புகலிட தமிழ் தேசிய கனவான்களே உங்களின்  எத்தனையோ வாரிசுகள் எலும்பு முறிவு நெரிவுக்கான சத்திரசிகிச்சை நிபுணர்களாக மேற்குலகில் பணியாற்றுகின்றார்கள்.அதிலும் பிரித்தானியாவில் ஆயிரத்துக்கும் மேல் இந்தவகை டாக்டர்கள் உள்ளனர்.ஆனால் கிளிநொச்சியில் உள்ள 3000 தமிழ் மக்களுக்கு யார்போய் பணியாற்றுவார்.எமது மக்களின் நிலை இப்படியிருக்கையில் தமிழ் தேசியத்தை சீமானோ வைகோவோ ஜெனிவாவுக்கான ஊர்வலங்களோ வளர்க்க முடியாது.எமதுமக்கள் வாழ்வும் வளமும் பெற்று வாழ்கின்ற கணங்களில்தான்  தமிழ் தேசியம் தலைநிமிரும்.