12/31/2014

| |

கம்யூனிசகட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன மகிந்த ராஜபக்சையை ஆதரிக்க முடிவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கையின் முக்கிய இடதுசாரிகட்சிகளான கம்யூனிச கட்சி,லங்கா சமசமாஜ கட்சி போன்றன ஜனாதிபதி மகிந்த ராஜபக்சையை ஆதரிக்கும் முடிவுக்கு வந்திருக்கின்றன.அவை சார்ந்த   மூத்த இடதுசாரி தலைவர்களான  டியூ குணசேகரா,வாசுதேவ நாணயக்கார,மற்றும் பேராசிரியர் திஸ்ஸவிதாரண போன்றோர் கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களினதும் ஒடுக்கப்படும் மக்களினதும் சார்பாக தென்னிலங்கையில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச -பஷீர் சேகுதாவூத்

நாட்டு மக்களை பாதுகாப்பதில் விசேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது  நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கட்சியின் முடிவுக்கமைவாகவே தான் வெளியேறுவதாகவும்  முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த பஷீர் சேகுதாவூத் நேற்று முன்தினம் அரசிலிருந்து வெளியேறினார்.
தாம் வெளியேறியமைக்கான காரணங்களை ஜனாதிபதி மகிந்தவுக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

தமது கட்சி எடுத்த தீர்மானத்திற்கு இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், முஸ்லிம் மக்களிடையே தமது கட்சி துரோகம் இழைக்கிறது என்ற நிலைப்பாட்டை இல்லாமல் செய்யவும் அதிகாரத்தில் பேராசை கொண்டவர்கள் அல்ல என்பதை தெரிவிக்கவுமே தாம் இராஜினாமாச் செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மகிந்தவின் தலைமைத்துவத்தின் கீழ் ஏற்பட்ட அதிருப்தியோ அல்லது நம்பிக்கையின்மை காரணமாகவோ தாம் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றும் கூறியுள்ள அவர், நாட்டுப்பற்றுள்ள பிரஜையாக அனைத்து மக்களிடையேயும் ஐக்கியத்தை ஏற்படுத்த ஜனாதிபதி ஆற்றிய சேவையை மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தேர்தல் பிரசார நடவடிக்கையெதிலும் ஈடுபடப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அவர், ஓர் அமைச்சராக இருந்து ஜனாதிபதிக்காக வாக்கு சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டமையைிட்டு வருந்துவதை தாழ்மையாக அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்ட தாம் இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முன்னாள் அமைச்சர் பஷீச் சேகுதாவூத் ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் 

»»  (மேலும்)

| |

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களை படுகொலை செய்வதாகவே அமையும்:சந்திரகாந்தன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பத்திகையாளர் மாநாட்டில் பத்திகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான சிவசேனதுரை சந்திரகாந்தன் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தமுறை தமிழரசுக் கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குமென்றால் அந்தச் செயலை தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அதைப் பார்க்கமுடியும்.
ஏனென்றால் எதிரணியுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே எந்தவிதமான மக்கள் நலன் சார்ந்த குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு ஒன்றுமே சொல்லப்படவில்லை.
எனக்குத் தெரிந்த வகையில் ஐயாயிரம் ஏக்கர் காணியாவது மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால் விடுவிப்போம் என்று சொல்கிற வசனத்தைக்கூட கூட்டமைப்பினரால் சேர்க்க முடியாமல் போயிருக்கிறது.
அதைச் சேர்க்கச் சொல்லி சந்திரிக்காவுடன் கேட்டபோது, சந்திரிக்கா அவர்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களைப் பார்த்ததாகவும் மைத்திரிபால சிறிசேன அவர்கள் சம்பிக்க ரணவக்கவைப் பார்க்க அவர் அதற்கு பதில் சொன்னதாக கடைசியான தகவல் இருக்கிறது. இது ஒரு ஒண்மைத் தகவலும்கூட.
இந்த அடிப்படையில் தமிழர்களுக்குத் தீர்வும் இல்லை. அதிகாரப் பகிர்வும் இல்லை. வடபகுதியையே மாத்திரம் அதாவது வடக்கு கிழக்கை எல்லாம் மறந்து வடபகுதி காணிப் பிரச்சினைக்கே முடிவுகொடுக்க முடியாத, அதை எழுத்திலே உறுதிப்படுத்த முடியாத ஒரு கூட்டத்திற்கே இவர்கள் வாக்களித்தால்,
நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிற கடந்தகால இலங்கை அரசியல் வரலாற்றில் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறபோது யாழ் மேலாதிக்கவாதிகளுடைய வர்க்க அரசியலாகப் பார்க்க முடியும். இந்த நாட்டை ஒன்றிணைக்கின்ற அல்லது அவர்கள் எதிர்பார்த்திருக்கின்ற தீர்வுத் திட்டத்திற்கான ஒரு அரசியல் போக்காகப் பார்க்கமுடியாது.
ஆகையால் இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பியோ, விரும்பாமலோ நீண்ட வரலாற்றிலே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு ஒரு இணக்கப்பாட்டு அரசியலுக்கு வந்தால் அதை வெளிப்படையாகப் பேசினால் பல நன்மைகள் மாற்றங்கள் தமிழர்களுக்கு நிகழ முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

மானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் - வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்  அவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது.

வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினராகிய அனந்தி சசிதரன் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் தான் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவ்வாறு வாக்களிப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என்று தெரிவித்துள்ளார் .

வடமாகாண சபைக்கான தேர்தலில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கொள்கைக்கு அமைவாகவே தான் போட்டியிட்டதாகவும் அதற்காகவே மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்ததாகவும் அவர் கூறுகிறார்.

இந்நிலையில் அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரண்பட்ட விரோதமான ஒரு கொள்கையைக் கொண்ட ஒருவருக்கு எவ்வாறு வாக்களிப்பது, மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கேட்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது என்றும் மானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என கூறுயுள்ளார்.


Read more: http://www.vivasaayi.com/2014/12/respect-to-hero.html#ixzz3NQXViFxH
»»  (மேலும்)

12/30/2014

| |

லயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்கு வோம்.

நாட்டின் உயிர் நாடியான மலையக மக்களின் அனைத்துத் தேவைகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வர்களின் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிக்க தேசிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இன்னும் சில மாதங்களில் தனி வீடுகளை வழங்கவுள்ளதாகவும் உறுதியளித்தார்.
நுவரெலியா நகரில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், நுவரெலியாவுக்கு வருகை தந்து மக்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடை கின்றேன். குளிரிலும் மழையிலும் மக்கள் வெள்ளம் திரண்டு வந்து எமக்கு ஆதரவளிப்பது எமது அமோக வெற்றியை உறுதிப்படுத்துகிறது.
இந்த தேர்தல் நாட்டின் தீர்க்கமானதொரு தேர்தல், எமது பக்கம் இருந்த ‘முனாபி’கள் எதிர்ப்பக்கம் சென்று போட்டியிருக்கின்றனர். எம்மோடு இரவில் அப்பம் சாப்பிட்டுவிட்டு காலையில் சொல்லிக் கொள்ளாமல் போனவர்களை முனாபிக் என்றுதானே கூற வேண்டும். 
எமது அரசில் நல்லதென்றாலும் கெட்டதென்றாலும் அதை அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். எனினும் எம்மிடமிருந்து எதிரணிக்குச் சென்றவர் அங்கிருந்து கொண்டு எம்மைத் தூற்றுகின்றார். இப்போது அவர் நல்லவராகிவிட்டார். நாமே கெட்டவர்கள், அவர் செய்த தவறுகளும் இப்போது எம்மீது சுமத்தப்படுகிறது. இது எந்த வகையில் நியாயமாகும்.
மக்கள் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். நாட்டில் எந்தப் பகுதியிலும் இப்போது எவரும் சுதந்திரமாக சென்று வர முடியும்.
நான் அண்மையில் வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டேன் கிளிநொச்சி, வவுனியா பிரதேசங்களில் தற்போது வாழும் மலையக வம்சாவளி மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தமது வாக்குகளை வழங்கிய போதும் தமது பிரச்சினைகளை அவர்கள் கண்டு கொள்வதில்லை என்றனர்.
மலையகத்தில் மட்டுமன்றி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவில் வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு நான் அமைச்சர் தொண்டமானுக்கு பணிப்புரை விடுத்தேன். தோட்ட மக்களின் வாழ்க்கை சூழலை நான் நன்கு அறிவேன். அதற்கான விசேட வேலைத் திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம். வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளேன்.
இப்போது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அத்திட்டம் கையளிக்கப்பட்டு மூன்றாவது கட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் மலையக மக்கள் லயன் காம்பிராக்களுக்கு விடை கொடுத்துவிட்டு தனித்தனி வீடுகளில் குடிபுக முடியும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வீடுகளை அமைக்கும் திட்டத்தோடு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் திட்டமும் நடைமுறைப்படுத் தப்படும்.
மலையகத் தோட்டங்களில் ஒரு தேயிலைச் செடியையாவது பிடுங்குவதற்கு நான் இடமளிக்க மாட்டேன்.
சிலர் தேயிலைத் தோட்டங்களை அழிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
மதுபான சாலைகளுக்கு லைசன் வழங்குவது பற்றி தற்போது பேசப்படுகிறது. நான் அவ்வாறு ஒரு லைசனும் வழங்கவில்லை. வழங்கப் போவதும் இல்லை. புதிதாக மதுபான சாலை திறக்கவும் நாம் லைசன்ஸ் வழங்க மாட்டோம் இது உறுதி.
மலையகப் பிரதேச மக்களின் பிள்ளைகளின் போசாக்கின்மை நிலையை சரிசெய்வதற்கு நாம் ஜனாதிபதி செயலகம் மூலம் விசேட செயலணியொன்றை ஏற்படுத்தியுள்ளோம்.
500 தமிழ் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களை நாம் புதிதாக நியமித்துள்ளோம். வடக்கு கிழக்கிற்கும் நாம் இவ்வாறு உத்தியோகத்தர்களை நியமித்துள்ளோம். விவசாயிகளுக்கு தொடர்ந்து 350 ரூபாவுக்கு உரம் வழங்கி வருகின்றோம்.
நான் பல தேர்தல் பிரசாரக் கூட்டங்களை இரத்துச் செய்து விட்டு மலையகத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்றேன். அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டேன்.
எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விவசாயிகள், கல்வித்துறை மற்றும் பல்கலைக்கழகத்தினருக்கு கேட்டு வைக்கும் பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாமே அவற்றை மென்மேலும் முன்னேற்றும் திட்டங்களையே மக்கள் முன் சமர்ப்பித்துள்ளோம். நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகக் கல்லூரியொன்றையும் நிறுவவுள்ளோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி, மலையக மக்கள் இந்த நாட்டின் உயிர் நாடிகள், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும். உங்கள் தேவைகளை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் என்னிடம் சமர்ப்பித்துள்ளார். நாம் அவற்றை நிறைவேற்றுவோம்.
ஜனவரி 9ம் திகதிக்குப் பின்னரும் நானே ஜனாதிபதி. நான் உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் உங்களைப் பாதுகாப்பேன். நீங்கள் எம்மை நம்பலாம். நீங்கள் சம உரிமை வசதிகளுடன் மென்மேலும் முன்னேற வேண்டும். உங்கள் பிள்ளைகள் மும்மொழியும் கற்று முன்னேற வேண்டும். அவர்கள் உலகை வெல்ல வேண்டும். மேலும் பெருமளவு பட்டதாரிகள் மலையகத்திலிருந்து உருவாக வேண்டும்.
பிள்ளைகளே உங்களதும் நாட்டினதும் செல்வம். லயன் காம்பிரா யுகம் இனி இல்லை. புதிய வீடுகள் வழங்கு வோம்.
வெற்றிலையின் வெற்றி எமது வெற்றி உங்கள் வெற்றி நாட்டின் வெற்றி நாம் அனைவரும் வெற்றிலையை அமோக வெற்றி பெறச் செய்து தமது தாய் நாட்டை கட்டியெழுப்புவோம்.
யார் எந்தப் பக்கம் சென்றாலும் நான் உங்கள் பக்கமே. நீங்கள் எம் பக்கம் நான் உங்களை பாதுகாப்பேன். நாம் சொல்வதை செய்வோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
»»  (மேலும்)

12/29/2014

| |

மைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்களிப்பதானது, இறுதியில் தமிழ் மக்கள் தங்களின் தலையில், தாங்களே மண்ணைவாரிப் போட்டுக்கொள்வதற்கு ஒப்பாகும்-*யதீந்திரா*.

சிறிலங்கா அதிபர் தேர்தல் 2015: தமிழ் மக்களுக்கு நன்மையான தெரிவு எது?  
                                                                                                                                                                                                                                        

                                                                                                                                                                                                                                                                *யதீந்திரா*

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னால் மூன்று தெரிவுகள்தான் உண்டு. ஒன்று மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பது. இரண்டு, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது. மூன்று இருவரையும் நிராகரிப்பது. இதில் எது தமிழ் மக்களுக்கு நன்மையான முடிவாக இருக்க முடியும்? ராஜபக்சவை ஆதரித்தல் என்பது தமிழர் மனச்சாட்சிக்கு பொருந்தாத ஒன்று. எனவே முதலாவது தெரிவு குறித்து விவாதிப்பதில் பொருளில்லை – யதீந்திரா.
இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நாள் வரையில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் உத்;தியோகபூர்வ முடிவை அறிவித்திருக்கவில்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தற்போது இந்தியாவில் தங்கியிருக்கின்ற நிலையிலேயே, கூட்டமைப்பின் முடிவு தாமதமாகிவருகிறது அல்லது முடிவு திட்டமிட்டே தாமதப்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் தாமதப்படுத்தலும் கூட, ஒரு வகையான அரசியல் உக்திதான். நிலைமைகளை துல்லியமாக அவதானித்து இறுதியில் முடிவை எடுப்பதன் மூலம் வரக்கூடிய சில ஆபத்துக்;களை தவிர்த்துக்கொள்ள முடியும்.
ஆனால் கூட்டமைப்பு நான்கு கட்சிகளின் கூட்டு என்னும் வகையில் தேர்தல் தொடர்பான தகவல்கள் அனைத்தும் கட்சித்தலைவர்களுடனும் பகிரப்பட்டிருக்க வேண்டும். அதுவே ஒரு அரசியல் அமைப்பிற்கான ஜனநாயக மரபாகும். ஆனால் சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பில், கூட்டமைப்பிற்குள் ஆகக் குறைந்தளவு கூட உள்ஜனநாயகம் பேணப்பட்டிருக்கவில்லை என்னும் ஆதங்கம் பங்காளி கட்சிகள் மத்தியில் காணப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு எடுக்க வேண்டிய  முடிவு தொடர்பில் பங்காளிக் கட்சிகள் மத்தியில் எந்;தவொரு  ஆக்கபூர்வமான கலந்துரையாடலும் இடம்பெற்றிருக்கவில்லை. கூட்டமைப்பிற்குள் பின்பற்றப்பட்டுவரும் வழமையான ஒரு கட்சி மேலாதிக்க – சம்பிரதாயமே நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது.
அதாவது தமிழரசு கட்சியே தேர்தல் விடயங்களை தனியாக கையாண்டுவருகிறது. தமிழரசு கட்சியென்று சொல்வதிலும் பார்க்க, அதன் சார்பில் இயங்கும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே பிரதானமாக ஈடுபட்டுவருகின்றார். சுமந்திரன் கூட்;டமைப்பின் சார்பில் பல்வேறு விடயங்கள் குறித்து எதிரணியை சேர்ந்த மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருக்கின்றார். ஆனால் பேசப்பட்ட விடயங்களை சுமந்திரன் மூடிமறைக்காமல் ஏனைய கட்சித் தலைவர்களுடன் பகிரவில்லையென்னும் குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்தப் பின்னணியில்தான் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகியிருக்கிறது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் தன்னுடைய பங்கும் முக்கியமானதென்றே சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். ஆனால் இதிலுள்ள ஆச்சரியம் என்னவென்றால் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் இறுதி வரைபை தான் பார்க்கவில்லை என்று சந்திரிக்கா குமாரதுங்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவித்திருக்கின்றனர். கூட்டமைப்பின் தலைவர்களுடனான சந்திப்பின் போதே, இந்த தகவலை தெரிவித்திருக்கின்றனர்.
உண்மையில் தேர்தல் விஞ்ஞாபன தயாரிப்பில் ஆரம்பத்தில் கலாநிதி ஜயம்பதி விக்கிரமவும் சட்டத்தரணி வெல்லியமுனவும் பங்களித்திருந்தனர். ஆனால் இறுதியில் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் இறுதி வரைபு ஜாதிய ஹெல உறுமயவினாலேயே பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தைக் கூட சுயமாக தீர்மானிக்க முடியாதளவிற்கே மைத்திரிபால இருந்திருக்கின்றார். இந்த விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் எந்தவொரு வார்த்தையும் இல்லை.
மிகவும் மேலோட்டமாகவும் பொதுமைப்படுத்தப்பட்டுமே பிரச்சினைகள் பார்க்கப்பட்டிருக்கின்றன. தமிழில் கூட இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டவில்லை. இந்த நிலையில் மைத்திரிபாலவிற்கு ஆதரவளிக்குமாறு நாங்கள் எவ்வாறு தமிழ் மக்களை கோர முடியுமென்னும் கேள்வியை கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சித்தலைவர்களும் எழுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து மைத்திரிபால, சந்திரிக்கா, ரணில் மற்றும் மங்களசமரவீர ஆகியோரை கூட்டமைப்பின் அனைத்து தலைவர்களும் சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டையும் சுமந்திரனே மேற்கொண்டிருந்தார். ஆனால் அங்கு கிடைத்த அனுபவத்தினால் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
இது தொடர்பில் அங்கு நடந்தவற்றை கூட்டமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் இவ்;வாறு விபரித்தார். நாங்கள் சந்திரிக்காவை பார்த்து கேட்டோம். எங்கள் கேள்விக்கான பதிலாக சந்திரிக்கா ரணிலை பார்த்தார், ரணிலோ மைத்திரியை பார்த்தார். மைத்திரியோ, சந்திரிக்காவையும் ரணிலையும் பார்த்தார். நாங்கள் கேட்டது இதுதான் – சில விடயங்களை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடுவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை நாங்கள் விளங்கிக் கொள்கின்றோம். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் காணி பிரச்சினைகள், வடக்கு கிழக்கிலுள்ள இராணுவ பிரசன்னம் ஆகியவற்றையாவது நீங்கள் குறிப்பிட்டிருக்கலாமே! ஆனால் இதற்கு மாறி மாறி முகங்களை பார்த்துவிட்டு, இறுதியில் சந்திரிக்கா குறிப்பிட்டார், என்னால் எந்தவொரு உத்தரவாத்தையும் உங்களுக்கு தரமுடியாது ஏனெனில் நான் அதற்கான அதிகாரமுள்ள ஒருவரல்ல. அனைத்திற்கும் மைத்திரிதான் பதில்சொல்ல வேண்டும். பின்னர் மைத்திரியை பார்த்து, மைத்திரி சொல்லுங்கள் அவர்கள் கேட்பதற்கு என்றார். ஆனால் மைத்திரியோ எதனையும் சொல்ல முடியாமல் தடுமாறினார். ஆனால் காணி பிரச்சினை தொடர்பில் பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க தேசிய பாதுகாப்பிற்கு தேவையான காணிகளை தவிர ஏனையவற்றை மக்களிடம் ஒப்படைப்பதில் பிரச்சினைகள் ஒன்றுமில்லை என்றார். இதனைத்தான் கடந்த ஜந்து வருடங்களாக பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவும் சொல்லி வருகின்றார். அவ்வாறாயின் இரண்டு தரப்பினருக்கும் இடையில் என்ன வேறுபாடு?
இதிலிருந்து ஒருவிடயம் வெள்ளிடைமலையானது அதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் எந்தவொரு பதிலும் இல்லை. பதில் இல்லாதவர்களிடம் எவ்வாறு பிரச்சினைகளுக்கான தீர்வை எதிர்பார்க்க முடியும்? எனவே இந்த நிலையில் மைத்திரிபாலவிற்கு பகிரங்க ஆதரவை வழங்க முடியுமா என்னும் கேள்வியுடன் நாங்;கள் அனைவரும் வெளியேறினோம். அதே வேளை மேற்படி சந்திப்பின் போது பிறிதொரு விடயத்தையும் அவதானிக்க முடிந்தது. நாங்கள்தான் வலிந்து எங்களின் உதவி உங்களுக்குத் தேவையா என்று கேட்டோமே தவிர, அவர்கள் எங்களை பெரிதாக பொருட்படுத்தவில்லை. பின்னர் ஏன் நாங்கள் வலிந்து அவர்களின் காலில் விழ வேண்டுமென்றும் எனக்கு விளங்கவில்லை, என்றும் அந்த தலைவர் குறிப்பிட்டார்.
இந்த தகவல்களின் அடிப்படையில் நோக்கினால், எதிரணி தொடர்பில் சந்தேகங்களே மேலிடுகிறது. எனவே எதிர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் முன்னாலுள்ள சரியான தெரிவு என்ன? என்னும் கேள்வி எழுகிறது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னால் மூன்று தெரிவுகள்தான் உண்டு. ஒன்று மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பது. இரண்டு, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது. மூன்று இருவரையும் நிராகரிப்பது. இதில் எது தமிழ் மக்களுக்கு நன்மையான முடிவாக இருக்க முடியும்? ராஜபக்சவை ஆதரித்தல் என்பது தமிழர் மனச்சாட்சிக்கு பொருந்தாத ஒன்று. எனவே முதலாவது தெரிவு குறித்து விவாதிப்பதில் பொருளில்லை.
இப்போது தமிழ் மக்கள் முன்னால் இருப்பது மிகுதியான இரண்டு தெரிவுகள் மட்டுமே! ஓன்றில் மைத்திரிபாலவை ஆதரிப்பது அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய விடுதலை முன்னணி குறிப்பிடுவது போன்று, தேர்தலை முற்றிலுமாக புறக்கணிப்பது. இதிலுள்ள சாதக பாதகங்கள் என்ன?
மைத்திரிபாலவை ஆதரிப்பதே சரியான முடிவு என்றுவாதிடுவோர், ஆட்சி மாற்றத்தின் மூலம் நாட்டில் சீர்கெட்டுள்ள ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை மீட்டெடுக்க முடியுமென்று வாதிடுகின்றனர். அதாவது, மகிந்த ராஜபக்சவின் குடும்ப செல்வாக்கிலிருந்து இலங்கை அரசியலை மீட்டெடுப்பதன் மூலம், இலங்கையில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி என்பற்றை மீட்டுவிடலாம் என்பதே அவர்களின் வாதமாகும். ஏனெனில் ராஜபக்சேக்களை வீழ்த்துதல் என்பதே எதிரணியில் இணைந்திருக்கும் அனைவரதும் ஒரேயொரு இலக்காகும். எனவே எதிரணியினரின் இந்த நோக்கத்திற்காக தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.
ஆனால் எதிரணியினர் விரும்புவது போன்றே, ராஜபக்சவை வீழ்த்திவிட்டால், அடுத்து இத்தீவில் தமிழ் மக்களின் வாழ்வில் ஏற்படப்போகும் மறுமலர்சிதான் என்ன? இதற்கு  எவரிடமும் பதிலில்லை. இதுதான் மைத்திரிபாலவிற்கு வாக்களிக்குமாறு கோருவோரிடமுள்ள அரசியல் பலவீனமாகும்.
இன்று தமிழ் மக்களுக்கு அழைப்புவிடும் தமிழ் தேசியவாத அமைப்புக்கள் அனைத்தும் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரவில்லை. உண்மையில் அவர்கள் எவராலும் அப்படியொரு பகிரங்க அழைப்பைவிட இயலவில்லை. ஏனெனில் மைத்திரிபாலவை பகிரங்கமாக ஆதரிக்குமளவிற்கு அவர் தமிழ் மக்கள் குறித்து எந்தவொரு சாதகமான அபிப்பிராயத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டியங்கிவரும் தமிழ் சிவில் சமூகம் தமிழ் மக்கள், தங்கள் மனச்சாட்சிக்கும், நீண்டகால நோக்கில் தங்களுக்கு உகந்த முடிவு எது  என்பதையும் சிந்தித்து முடிவெடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது.
இந்த இடத்தில் தமிழரின் மனச்சாட்சி என்ன என்னும் கேள்வி எழுகிறது. இன்று தெற்கில் இடம்பெறும் பிரச்சாரங்களை உற்று நோக்கினால் ஒரு விடயம் வெள்ளிடைமலையாகும். அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்தமைக்கான பெருமை யாருக்குரியது என்பதில் அனைவருமே போட்டியிடுவதை காண முடிகிறது. அதாவது முள்ளிவாக்காலில், பெருந்தொகையான மக்களுடன் பிரபாகரனை வீழ்த்திய பெருமை யாருக்குரியது? ராஜபக்ச சொல்லுகின்றார் அதற்கான ஏகபோக உரிமை தனக்குமட்டுமேயுரியதென்று. ஆனால் சந்திரிக்காவோ, இல்லை, புலிகளை 75வீதம் அழித்தது நானே என்கிறார். ஆனால் ரணிலோ இல்லை நானே பேச்சுவார்த்தை என்னும் பொறிக்குள் அவர்களை சிக்கவைத்து, கிழக்கில் பிளவை ஏற்படுத்தி, பிரபாகரனின் முடிவுக்கு சரியானதொரு அடித்தளத்தை இட்டேன் என்கிறார். சரத்பொன்சேகாவோ, இல்லை புலிகளை அழித்ததில் எனது பங்குதான் அதிகம் என்கிறார்.
இதில் யார் சொல்லுவது உண்மை என்பதை ஆராய வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இல்லை. இப்பொழுது தமிழ் மக்கள் தங்களின் மனச்சாட்சிப்படி இதில் எவரை ஆதரிக்க முடியும்? இதில் எவரையேனும் தமிழ் மக்கள் ஆதரித்தால் உண்மையிலேயே தமிழ் மக்கள் மனச்சாட்சி உள்ளவர்களாக கருதப்படுவார்களா? ஒரு புறம் ராஜபக்சேக்களின் வெற்றியணி, இன்னொருபுறம் இல்லை நாங்கள்தான் புலிகளை அழித்தோமென்று மார்தட்டும் எதிரணி, இதில் தமிழ் மக்கள் அவர்களது மனச்சாட்சிப்படி எவரை தெரிவு செய்ய முடியும்? மைத்திரிபாலவிற்கு தமிழ் மக்களை வாக்களிக்குமாறு கோருவோர் உண்மையிலேயே, தமிழ் மக்களை மனச்சாட்சியற்றவர்கள் என்று கருதுகின்றனரா?
யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட, மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களில் நியாயமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. மாறாக வெற்றிதரும் குதூகலத்தில் தன்னைமறந்து செயற்பட்டார். அனைத்துலக சமூகத்தின் கோரிக்கைகளை புறம்தள்ளினார். இந்திய மற்றும் அமெரிக்க ஆலோசனைகளை அசட்டை செய்தார். இதன் விளைவாக அவர் மீதான அனைத்துலக அழுத்தங்கள் மெது மெதுவாக படர ஆரம்பித்தது.
இந்த பின்னணியில்தான் அமெரிக்கா, தனது ராஜதந்திர அழுத்தங்களை அனைத்துலக மயப்படுத்தும் நேக்கில், இலங்கை பிரச்சினையை ஜ.நாவிற்குள் கொண்டு சென்றது. அந்த நோக்கத்திற்காகவே அமெரிக்கா ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது பிரேரணைகளை கொண்டுவந்தது. இதனைத் தொடர்ந்துதான், அதுவரை வெறும் பயங்கரவாத பிரச்சினையாக பார்க்கப்பட்ட தமிழர் விவகாரமானது, ஒரு மனித உரிமைசார் விவகாரமாக அனைத்துலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் ராஜபக்ச அனைத்துலக அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்கவில்லை. மாறாக, அமெரிக்காவின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் ஒர் உபாயமாக ஆசியாவில், அமெரிக்க மற்றும் அதனுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை பேணிவரும் நாடுகளுக்கு, சிம்மசொப்பனமாக திகழும் சீனாவுடன் வலுவான உறவுகளை பேணிக் கொண்டார். இதன் மூலமாக, ஜக்கிய நாடுகள் சபையின் அதிகார எல்லைக்குள் இலங்கையின் மீது நடவடிக்கைகள் எடுக்கமுற்படும் அமெரிக்க நகர்வுகளுக்கு, ராஜபக்ச முட்டுக்கட்டையிட்டார். எனினும் ஜ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் எல்லைக்குள் இருக்கும் சில வாய்புக்களை பயன்படுத்தி, இலங்கையின் மீதான ஒரு விசாரணைக்கு அமெரிக்கா அடித்தளமிட்டது. இந்த விசாரணையினால் ராஜபக்சவை தண்டிக்க முடியாவிட்டாலும், அதனால் உலகிற்கு சில சிபார்சுகளை வழங்க முடியும். இறுதியில் இலங்கை விவகாரம் ஜக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலம் ராஜபக்சவிற்கு தொடர்;சியான நெருக்கடிகளை கெடுத்து அவரை ஒரு வழிக்கு கொண்டுவர முடியும். இப்படியொரு பின்னணியில்தான் இலங்கையில் ஒரு சிறிலங்கா அதிபர் தேர்தல் இடம்பெறுகிறது.
ஆரம்பத்தில் மிகவும் இலகுவானதொரு வெற்றியாக கணிக்கப்பட்ட ராஜபக்சவின் வெற்றி, தற்போது ஓரளவு கேள்விக்குறியுடன் நோக்கப்படுகிறது. ஆனால் இங்கு தமிழர் கவனிக்க வேண்டிய விடயம் ராஜபக்ச தேர்தல் முறையின் ஊடாக அதிகாரத்திலிருந்து அகற்பட்டால், இதுவரை இலங்கை ஆட்சியாளர்கள் மீது தொடர்ந்துவந்த அழுத்தங்களுக்கு என்ன நிகழும் என்பதே! இங்கு தமிழ் மக்கள் ஒரு விடயத்தை மிகவும் ஆழமாக அவதானிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
ராஜபக்ச ஒரு வேளை தோல்வியடைந்து வெளியேறினால், இலங்கையில் இடம்பெற்றதாக கருதப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் வெறும் ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் சில இராணுவ தளபதிகளின் தனிப்பட்ட விவகாரமாக மாறிவிடும். இவர்கள் ஒரு வேளை தண்டிக்கவும் படலாம். ஆனால் ஒரு சிலர் தண்டிக்கப்படுவதால் இனவாத சிந்தனைகளால் வனையப்பட்டிருக்கும் இலங்கை அரச இயந்திரத்தில் எத்தகைய மாற்றம் நிகழ்ந்துவிடும்? உண்மையில் கடந்த ஜந்து வருடங்களாக ராஜபக்ச மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்துலக அழுத்தங்கள் என்பவை வெறும் ராஜபக்ச மீதான அழுத்தமல்ல மாறாக, இலங்கை இனவாத இயந்திரத்தின் மீதான அழுத்தமாகும். இப்படியொரு பின்னணியில் மேற்படி அனைத்துலக அழுத்தம் வெறும் நபர்கள் மீதான அழுத்தமாக சுருங்குமாயின், தமிழ் மக்களின் பிரச்சினை கும்பைத் தொட்டிக்கு அனுப்பப்படும். எனவே தமிழ் மக்களின் பிரச்சினை இன்றும் நீர்த்துப் போகாமல் இருப்பதற்கு ராஜபக்ச மேற்குலகுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் ஒத்துப்போகாமல் இருப்பதே காரணமாகும்.
ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் வரவிருக்கும் மைத்திரிபாலவிற்கு அப்படியான எந்தவொரு கடப்பாடும் இல்லை. சில மாதங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு முக்கியமான விடயத்தை குறிப்பிட்டார். அதாவது, மகிந்த ராஜபக்சவின் கடும்போக்கான நிலைப்பாடுதான், எங்களுடைய அரசியல் நகர்வுகளுக்கு சாதகமாக இருக்கிறது. சம்பந்தன் அவர்களது தற்போதைய நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை ஆனால், அந்த (மகிந்த) கடும்போக்கிலிருந்து இலங்கையின் முகம் சடுதியாக மாறுமாயின், தமிழர் பிரச்சினையின் முக்கியத்துவமும் அல்லவா மாறிவிடும்.
மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் முன்னால் எந்தவகையிலும் ஒரு தெரிவல்ல என்பதில் தடுமாறுவதற்கும், விவாதிப்பதற்கும் எதுவுமில்லை. ஆனால் ராஜபக்சவை எதிர்த்து போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவும் தமிழ் மக்கள் முன்னால் ஒரு சரியான தெரிவல்ல. இங்கு தமிழ் மக்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம், சிங்கள இனவாதம் மைத்திரிபால சிறிசேனவை ஒரு கருவியாகக் கொண்டு, மிகவும் நுட்பமாக செயலாற்றி வருக்கிறது. மைத்திரிபால சிறிசேன, ஜாதிக ஹெல உறுமயவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தமிழ் மக்களின் சமஸ்டி கோரிக்கையை தான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டேனென்று, அவர் அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருக்கின்றார். மைத்திரி மிகவும் நேர்மையாகவே தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்திருக்கின்றார்.
ஆனால் இங்கு பலரும் கவனிக்கத் தவறுகின்ற பிரச்சினை, மைத்திரிபாலவின் வெற்றிக்கு தமிழ் மக்கள் பங்களிப்பார்களாயின், அதன் பொருள் தமிழ் மக்கள் வரலாற்று ரீதியாக முன்வைத்துவரும் சமஷ்டிக் கோரிக்கையை தாங்களாகவே நிராகரித்துவிடும் நிலையல்லவா உருவாகும். இங்கு மைத்திரிபால வெல்லுவது இந்தக் கட்டுரையாளரை பொறுத்தவரையில் ஒரு விடயமல்ல, ஆனால் அவர் தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவை பெற்று வெற்றிபெற்றுவிடக் கூடாது. அவ்வாறு மைத்திரிபால வெற்றிபெறுவாராயின் அவரது சமஸ்டி நிராகரிப்புக் கோரிக்கையையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதாகவே பொருள்படும்.
இந்த இடத்தில்தான் தெற்கின் இலட்சிய இனவாத அமைப்பான ஜாதிக ஹெலஉறுமய மிகவும் நுடப்பமாக காய்நகர்த்தியிருக்கிறது. இதன் மூளை பாட்டாளி சம்பிக்க ரணவக்க ஆவார். ஆனால் சம்பிக்கவின் நுட்பமான இந்த காய்நகர்த்தலை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள எவராவது புரிந்துகொண்டார்களா என்பது கேள்வியே! எனவே எதிர்வரும் சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபாலவிற்கு தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாக்களிப்பதானது, இறுதியில் தமிழ் மக்கள் தங்களின் தலையில், தாங்களே மண்ணைவாரிப் போட்டுக்கொள்வதற்கு ஒப்பாகும். எனவே இப்போது தமிழ் மக்கள் முன்னால் எஞ்சியிருக்கும் அந்த ஒரேயொரு தெரிவு எது? ஓட்டுமொத்தமாக பார்த்தால் இன்றைய சூழலில் தமிழ் மக்கள் முன்னாலுள்ள ஒரேயொரு கடமை, தங்கள் மனச்சாட்சிக்கு விடுக்கப்படும் சவாலை வெற்றிகொள்வது ஒன்றேயாகும்.
»»  (மேலும்)

12/28/2014

| |

தீர்வு விடயத்தில் கையை விரித்தார் மைத்திரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதான அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொது எதிரணித் தலைவர்களுடன் தனிப்பட்ட முறையில் நட்பு ரீதியாக நடத்திவரும் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக அவரினால் முன்வைக்கப்பட்ட இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த யோசனை பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவினால் நிராகரிக் கப்பட்டதாக தெரிய வந்துள் ளது. ஆரம்பத்தில் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தனது யோசனையை ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
அவரோ அதனை சந்திரிகா அம்மையாரிடம் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் சந்திரிகா அம்மையாரோ மைத்திரிபால சிறிசேவிடம் தெரிவித்து பதில் பெறுமாறு கோரியுள்ளார். மைத்திரிபாலவிடம் இவர் தனது யோசனையை முன்வைத்தபோது அவரோ அதனை ஏறெடுத்தும் பார்க்காது வையுங்கள் தேர்தலின் பின்னர் பார்க்கலாம் எனத் தெரிவித்துவிட்டாராம்.
இந்த விடயத்தை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் வெளியே தெரியவிடாது மூடிமறைக்க முனைந்தபோதும் அங்கே கூட இருந்த சில தமிழ் உறுப்பினர்கள் மூலமாக விடயம் வெளியே கசிந்துவிட்டது. இதனால் அப்பாராளுமன்ற உறுப்பினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளதுடன் இவ்விடயம் ஊடகங்களுக்கு கசிந்துவிடாமலும் பார்த்துக் கொண்டாராம்.
எனினும் இவ்விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்களின் செவிகளுக்கு எட்ட அவர்கள் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் தன்னிச்சையான செய்கை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனது தனிப்பட்ட நட்பை குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தன்னிச்சையாக தங்கள் எவருக்கும் தெரியாத கட்சி விடயத்திற்குப் பயன்படுத்தியமை குறித்து தமிழரசுக் கட்சியின் தலைமையும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரி ஆட்சி அமைத்தால் அதில் தனக்கு அமைச்சர் அதிலும் பொருளாதார அமைச்சர் பதவியை எதிர்பார்த்தே இவ்வாறு தனித்துப் பேசியதாகவும் தெரிய வருகிறது. ஏதோவொரு அமைச்சர் பதவி தரலாம் என அவருக்கு எதிரணித் தரப்பிலிருந்து உறுதி வழங்கப்பட்டிருந்தாலும் இனப்பிரச்சினை தீர்வு குறித்துக் கதைக்கக் கூடாது எனவும் கூறப்பட்டதாக நம்பகரமாக அறியமுடிந்துள்ளது.
»»  (மேலும்)

| |

கீரிகளினதும், பாம்புகளினதும் போலியான ஒற்றுமைக் கூண்டுக்குள் சிக்கித் தவிக்கும் எதிரணி வேட்பாளர் மைத்திரி பெரும் சிக்கலில் மைத்திரி பெரும் சிக்கலில்

ஆட்சி மாற்றம் ஜனாதிபதி மஹிந்தவை மாற்றல் இவை இரண்டையும் மட்டுமே தமது கருப்பொருளாகக் கொண்டு பிரசாரம் செய்து வரும் எதிரணியினர் ஒரு நாட்டை நிர்வகிப்பது தொடர்பான எவ்விதமான அடிப்படைக் கொள்கை அறிவுகூட இல்லாதவர்களாகவே காணப்படுகின்றனர். ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பதை இவர்கள் ஏதோ விளையாட்டுத் தனமாக நினைக்கிறார்கள். சந்திரிகாவும். ரணில் விக்கிரமசிங்கவும் சரத் பொன்சேகாவும் தமது குறுகிய பழிவாங்கும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக தாய் நாட்டைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாது மைத்திரி பால சிறிசேனவைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி வருவதாக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தான் ஜனாதிபதி ஆகிவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என்பதாகவே மைத்திரிபால நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை மேடைகளில் தெரிவித்து வருகிறார். தன்னைச் சந்திக்கும் தலைவர்களுடன் ஒவ்வொரு மாதிரி முன்னுக்குப் பின் சம்பந்தமில்லாது கதைக்கிறார்.
இத்தகைய ஒருவரால் ஒரு நாட்டை எப்படி நிர்வகிக்க முடியும்?
இது விளையாட்டல்ல. நாட்டை நிர்வகிக்க முதலாவதாக சரியான முறையில் வெளிநாட்டுக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டும். அயல் நாடுகளைச் சமாளிக்க வேண்டும். தெற்காசியாவிலேயே அமைதியான நாடாக இலங்கை மட்டுமே உள்ளது. அதற்கு கடந்த பத்து வருடங்களாக நட்டை ஆட்சி செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே காரணம். அதனைச் சீர்குலைக்க முயற்சி செய்தவரும் வெளிநாட்டுச் சக்திகளுடன் உள்நாட்டுத் தலைவர்கள் சிலரும் இணைந்துள்ளனர். இது தேசத் துரோகச் செயற்பாடாகும்.
எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு நாட்டை தலைமை தாங்கி ஆளும் வல்லமை கிடையாது. இவருக்கு எத்தகைய முன் அறிவும் இல்லை. அத்துடன் இவருடன் கூட்டணி அமைத்துள்ளவர்கள் தமக்கிடையே பல முரண்பாடான கருத்துக்களைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். உள்நாட்டிலேயே ஆட்சி செய்ய முடியாதவராகக் காணப்படும் இவரால் வெளிநாட்டுக் கொள்கைகளை முன்னெடுக்க முடியாது. இது எதிர்காலத்தில் எமது நாட்டுக்கு பாரதூரமான விளைவை எற்படுத்தலாம். மைத்திரியுடன் இணைந்துள்ள சந்திரிகா, ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேகா. மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சஜித் பிரேமதாச. கரு ஜெயசூரிய, ஜாதிக ஹெல உருமய உட்பட பல கருத்துக்களையும் கொண்டவர்களை இவரால் சமாளிக்க முடியாது.
இப்போது தேர்தலை இலக்காக வைத்து இவர்கள் தமக்கிடையே போலியான ஒற்றுமையை காட்டி வருகிறார்கள். ஒருவேளை இவர்கள் ஆட்சியை அமைத்தால் அதன் பின்னர் இவர்களது சுயரூபங்கள் தெரிய வரும். உண்மையில் கீரிகளும் பாம்புகளும் ஒற்றுகூடி தமக்கிடையே பேலியான ஒற்றுமையை வெளிக்காட்டி வருவதாகவே என்னால் பார்க்க முடிகிறது. இவர்களால் ஒற்றுமையாக இருந்து நாட்டை ஒருபோதும் நிர்வகிக்க முடியாது. மைத்திரியால் தன்னிச்சையாக ஒரு முடிவினையும் எடுக்க முடியாது. சந்திரிகா, ரணில், சரத் பொன்சேகா, ஜாதிக ஹெல உருமய கட்சியினர் ஆயோரிடம் இவர் ஆலோசனை பெற்றே ஆக வேண்டும். நாட்டை நிர்வகிக்க ஜனாதிபதி மஹிந்த போன்ற பலமுள்ள ஜானதிபதியே அவசியும். கூடிப் பேசி பின்னர் சரியான முடிவை தனித்து முன்வைக்கும் தலைமையை நாம் அவரிடம் மட்டுமே காண முடிகிறது. அது அவரது தலைமைத்துவத்தின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை. அவரிடம் அந்த ஆளுமை இருப்பதால் அவரே சிறந்த தலைவராக தொடர்ந்தும் இந் நாட்டை ஆள வேண்டும். மாற்றம், மாற்றம் என எண்ணி நாட்டு மக்கள் படுகுழியில் விழுந்து விடக் கூடாது. எனவே மக்கள் சிந்தித்து வாக்களித்து தமது தலைமையைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் முன்னெப்போதுமில்லாத வகையில் அவருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளை ஈட்டித் தரும். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வரவு - செலவுத் திட்டத்தில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் எந்த அடிப்படையில் இன்னுமொரு தடவை அவரில் நம்பிக்கை கொள்வது என எழுப்பப்பட்ட வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர், வெறுமனே வெற்று வார்த்தை ஜாலங்களில் சொல்லிவிட்டு போவதை வைத்தன்றி உண்மையில் நிஜத்திலே என்னென்ன விடயங்களை ஒருவர் செய்துள்ளார் என்பதை வைத்தே ஒருவரது நம்பகத் தன்மையை அளவிட முடியும். அந்த வகையில் ஜனாதிபதி வடக்கு மக்களுக்காக நிறையவே செயலில் செய்து காண்பித்துள்ளார்.
அதனை உணர்ந்து மக்கள் நிச்சயமாக ஜனாதிபதி மஹிந்தவுக்கு கணிசமான அளவு முன்னெப்போதுமில்லாத வகையில் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது எனவும் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

மு.கா. விலகியது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகி, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக அக்கட்சி அறிவித்தது. கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமாக தாருஸ்ஸல்லாமில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார். தன்னுடைய அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்வதற்கான இராஜினாமா கடிதத்தையும் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் 
»»  (மேலும்)

| |

யார் துரோகிகள்? கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைபேச பட்டுள்ள தமிழர்களின் வாக்குகள்.அதிர்ச்சி தகவல்கள்

அதிர்ச்சி தகவல்கள்
மைத்திரிக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பால் செய்யப்பட்டுள்ள இரகசிய ஒப்பந்தம்.பற்றிய தகவல்கள் கசிகின்றன.

*சம்பந்தர் இந்தியாவில் போய் படுத்து விட்டார்.

*சுமந்திரன் தமிழ்மக்களின்வாக்குகளை விலைபேசி முடித்துவிட்டார்.

*ஆறு கோடி பெறுமதியான வீடு சுமந்திரனின் உறவினர் பெயரில் கொழும்பில் எழுதப்பட்டுள்ளது. 

*ஐந்து கோடி கைமாறப்பட்டுள்ளது.

*மைத்திரி வென்றால் சுமந்திரனுக்கு அமைச்சுபதவி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

*அரை க்கோடியை  மட்டும் சுரேசுக்கும்,சித்தருக்கும் அடைகலத்துக்கும் பிரித்து கொடுக்க முனைந்ததில் உட்பூசல் வெடிக்கிறது.

*தமிழா தமிழா  இப்போது யோசி யார் துரோகி? 
»»  (மேலும்)

| |

மு.கா.வின் முடிவு நாளை?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலேயே நாளை இந்த அறிவிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

நிர்க்கதியாகி தனிமையில் பாணமை!


போக்குவரத்து துண்டிப்பு : 1560குடும்பங்கள் இடம்பெயர்வு: உணவுத்தட்டுப்பாடு :பாடசாலையில் 8அடி வெள்ளம்:குளம் panama flood 5உடைப்பெடுக்கும் அபாயம்:2500ஏக்கர் வயல்மூழ்கியது!


அம்பாறை மாவட்டத்தின் தென்கோடியின் அந்தத்திலிருக்கும் பாணமைக்கிராமம் பெருவெள்ளத்தால் தனிமைப்படுத்தப்பட்டு நிர்க்கதியாகியுள்ளது. இக்கிராமத்தைச்சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது. இக்கிராமம் சகலவழிகளாலும் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து முற்றாகத்துண்டிக்கப்பட்டுள்ளது. பார்க்குமிடமெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றது
பொத்துவிலிலிருந்து 17கிலோமீற்றர் தொலைவிலுள்ள  பாணமைக்கிராமத்தில் சுமார் 2420 தமிழ்சிங்கள குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.இது லாகுகலை பிரதேசசெயலக பிரிவில் அமைந்துள்ளது.பொத்துவில-பாணமை வீதியில் 8மைல் தொலைவிலுள்ள நாவலாறு பகுதியுடன் பாணமை துண்டிக்கப்பட்டுள்ளது. நாவலாறுக்கு அப்பால் செல்லமுடியாது.

அங்கு தொடரும் அடைமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பொலிஸ் நிலையம் இராணுவ முகாம் தமிழ் மகா வித்தியாயலயம் பிள்ளையார் ஆலயம் வைத்தியசாலை கமநல மத்திய கேந்திர நிலையம் சமுர்த்தி வங்கி உரக்களஞ்சியம் உள்ளிட்ட பல பொது இடங்கள் முற்றாக வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன சித்திவிநாயகர் ஆலய தர்மகர்த்தா பாலச்சந்திரன்  ரஞ்சிதகுமார் அங்கிருந்து தெரிவித்தார்.

பாடசாலையில் 8அடி வெள்ளம்!

குறிப்பாக பாணமை தமிழ் மகா வித்தியாலயத்தில் 8அடி வெள்ளம் தேங்கியுள்ளது. அதன் மதிலுக்கு மேலால் 4அடி வெள்ளம் பாய்வதால் மதிலைக்காணவில்லை. பாடசாலையின் கூரைமட்டும் சற்றுத் தெரிகிறது. அங்கிருக்கக்கூடிய கணனிகள் தொடக்கம் ஆவணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் சிக்குண்டிருக்கின்றன. அதிபர் பொத்துவிலில் இருப்பதால் வரமுடியாத நிலையுள்ளது.
வைத்தியசாலையில் 4அடி வெள்ளம் பாய்கிறது. கடற்படையினர் நோயாளிகளை படகில் ஏற்றி வேறிடத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

ஆலயத்தில் ஜந்தடி வெள்ளம்!

பாணமைச்சந்தியிலுள்ள சித்திவிநாயகர் ஆலயம் கதிர்காமம் மற்றும் உகந்தை ஆலயத்திற்குச்செல்வோர் தங்கியிருந்து செல்லும் ஆலயமாகும். அவ்வாலயத்தினுள் 5அடிக்கு மேலாக வெள்ளம் பாய்கிறது. சற்றுநேரத்தில் மூலஸ்தானத்தினுள் சென்றுவிடுமென ஆலய தர்மகர்த்தா பாலச்சந்திரன்  ரஞ்சிதகுமார் தெரிவித்தார்.மேலும் மேலும் வெள்ளமட்டம் கூடிக்கொண்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ்நிலையம் மற்றும் இராணுவ முகாம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. கடற்படையினர் படகுகளில் சென்று அவர்களை மீட்டுவந்துள்ளனர்.

சிறுகுளம் உடைப்பு!

பாணமை உகந்தை வீதியிலுள்ள வள்ளந்மாதின எனும் குளம் உடைப்பெடுத்த காரணத்தினால்
பாணமையிலிருந்து சுமார் 8மைல் தூரத்திலுள்ள   குணுகல எனுமிடத்தில் பாலம் உடைந்து வீதி அள்ளுண்டுள்ளது. பாணமை உகந்தை வீதி வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது.

175 தென்பகுதி உல்லாசபயணிகள் மாட்டினர்!

நத்தார் மற்றும் விடுமுறைகாலம் என்பதால் குடும்பிக்கலை உகந்தை போன்ற இடங்களுக்குச்செல்ல தென்பகுதியிலிருந்து இரண்டு பஸகளிலும் 4வான்களிலும் வந்த உல்லாசப்பயணிகள் பாணமையில் மாட்டியுள்ளனர். ஒரு பக்கமும் செல்லமுடியாமல் சிக்கியுள்ளனர்.
 
1560 குடும்பங்கள் பாதிப்பு!

இங்குள்ள 2400 குடும்பங்களுள்  1560குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களது வீடு வாசல்களில் 5அடிக்கு மேலாக வெள்ளம் தேங்கியுள்ளது. பாதிக்கபபட்ட மக்கள் அனைவரும் பாணமை சிங்கள மகா வித்தியாயலத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.இவர்களுக்கான உணவு கேள்விக்குறியாகியுள்ளது.
இதுவரை 17வீடுகள் முற்றாகவும் 42வீடுகள் பகுதியளவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னும் சரியான கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை.

2500ஏக்கர் வயல் மூழ்கியது!

பாணமைபபிரிவிலுள்ள சுமார் 2500 ஏக்கர் வயல்நிலம் முற்றாக வெள்ளத்தினுள் மூழ்கியுள்ளது. குடலைப்பருவததில் இவ் அனர்த்தம் ஏற்பட்டள்ளதால் அவை முற்றாக அழிக்கப்பட்டதாகவே கருதமுடியுமென ரஞ்சித்குமார் தொவித்தார்.

பாணமைக்குளம் உடைப்பெடுக்கும் அபாயம்!
 
logoபாணமையிலுள்ள மிகப்பெரிய குளமான பாணமைக்குளம் கிராமத்திலிருந்து 2கிலோமீற்றர் தொலைவிலுள்ளது. அக்குளததின் அடிப்பாகத்தில் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது உடைந்தால் பாணமை முற்றாக மூழ்கடிக்கப்படும் அபாயமுள்ளது.
அதனால் நேற்று இரு இயந்திரப் படகுகளில் கடற்படையினரும் தொழிலாளர்களும் குளக்கட்டிற்குச்சென்று சில திருத்தவேலைகளில் ஈடுபட்டனர்.

logo


»»  (மேலும்)

12/27/2014

| |

யாருக்கு ஆதரவு: மு.கா. இன்று முடிவு?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இன்று சனிக்கிழமை(27) தீர்மானிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக இது தொடர்பில் கட்சியின் உயர்மட்ட குழுவினர் கலந்துரையாடிய நிலையில் இன்று அக்கட்சி தனது தீர்மானத்தை வெளியிடும் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
»»  (மேலும்)

12/26/2014

| |

ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வருவது ஊர்ஜிதமாகியிருக்கின்றது

ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகள் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வருவது ஊர்ஜிதமாகியிருக்கின்றது. அதேநேரம் எதிரணியினருக்கென கூடுதலான நிதி சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படுவது ஊர்ஜிதமாகியிருக்கிறதென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்க் (800 மில்லியன் ரூபா) சி.ஐ.டி. யினரால் கைப்பற்றப்பட்டுள்ள அதேநேரம், குறித்த பணத்தை மைத்திரிபாலவிடம் கொண்டு சேர்ப்ப தற்காக எடுத்துச் சென்ற நபர் கைது செய்யப் பட்டி ருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை. இது மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட வேண்டியதென்ற உண் மையினை பணபரிமாற்றத்துடன் சம்பந்தப்பட்ட நபர் கல்கிஸ்ஸை நீதவானிடம் நேரில் சென்று வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், எதிரணியின் பின்னணியில் சர்வதேசம் இருப்பது உறுதியாகியுள்ளது. அரபு வசந்தம் ஒன்றை ஏற்படுத்த முயன்று தோற்றுப் போனவர்கள் தேர்தலைப் பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டியுள்ளனர். எனவே, வாக்காளர்கள் மஹிந்த ராஜபக்ஷ என்னும் தனிநபரை பழிவாங்க வேண்டுமா? அல்லது முழு நாட்டினது எதிர்காலத்தையும் பழி வாங்க வேண்டுமா? வென சிந்தித்து வாக்களிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்ட கருத்துக்களை முன்வைத்தார்.
தேர்தலுக்காக அனுப்பப்பட்டுள்ள சட்டவிரோத நிதியுடன் அநேகமான வெளிநாட்டு மருந்துக் கம்பனிகள் தொடர்புபட்டிருப்பதாகவும் எமக்கு சாட்சியங்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் அவற்றை உரிய நேரத்தில் தாம் வெளிப்படுத்துவோ மெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எமது நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நிலைப்பாட்டில் சர்வதேச நாடுகள் குறியாகவுள்ளன. பல வெளிநாட்டு தூதுவர்கள், ஜனாதிபதி மூன்றாவது தடவை போட்டியிடக் கூடாது எனவும் அதற்கான உரிமை
அவருக்கு இல்லையென்றும் நேரடியாகவே கூறிவருகின்றனர். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் சர்வதேசத்தின் திட்டங்கள் செல்லுபடியாகாது என்பதனால் ஜனாதிபதியை மாற்ற வேண்டிய தேவை அவர்களுக்குள்ளது. அதற்கான சிறந்த உதாரணமே கடந்த வருடம் கொழும்பில் நடத்தப்பட்ட பொதுநலவாய மாநாடு என்றும் அமைச்சர் கூறினார்.
பிரத்தானிய பிரதமர் கெமரோன் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்திருக்கவில்லை மாறாக வடக்கிற்கு சென்று படப்பிடிப்பை மேற்கொள்வதற்காக செனல் 4 ஊடகவியலாளர்களை இங்கு அழைத்து வந்தார்.
பிரிட்டனில் வாழும் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் டயஸ்போராக்களின் வாக்குகளிலேயே அவரது பதவி தங்கியுள்ளதென்பதால், அவர்கள் மனதை குளிர்விப்பதற்காகவே அவர்கள் அவ்வாறு செயற்படுகின்றனர் எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.
சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பில் அமைச்சர் மேலும் விளக்கமளித்ததாவது, குறித்த ஒரு நாட்டிலிருந்து ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்க் அடங்கிய பூட்டுடன் கூடிய பொதி இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த அத்துல ரோஹண வீரரட்ண என்பவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துல என்பவர் அந்த பொதியை பாதுகாப்பாக வைத்திருக்கும் படியும் அது மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட வேண்டியதென்றும் கூறி தனது மூத்த சகோதரனான சந்திரதாஸ என்பவரின் மகனிடம் கையளித்துள்ளார்.
இந்நிலையில் மைத்ரிபால சிறிசேனவின் மகனின் காதலியின் சகோதரனின் நண்பனான லசித்த என்பவர் குறித்த விலாசத்திற்கு சென்று பணப் பொதியை பெற்றுக் கொண்டுள்ளார். அதன்போது சந்திரதாஸ முதலாளியின் மகள் எவ்வளவு கேட்டும் வந்த நபர் பதில் கூற மறுத்துவிட்டார்.
இதன்போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் பணப் பொதியுடன் சென்ற லசித்த கைதுசெய்யப்பட்டார். பொதி பூட்டப்பட்டிருந்ததனால் பொலிஸார் இது குறித்து விசாரணையினை சி.ஐ.டியினரிடம் ஒப்படைத்தனர்.
சி.ஐ.டி யினர் பெட்டிக்குள்ளிருந்து ஒரு மில்லியன் சுவிஸ் பிராங்கினை கைப்பற்றியுள்ளதுடன் விசாரணைகளை முழுமையாக முன்னெடுத்து வருகின்றனர்.
இதேநேரம், சந்திரதாஸ முதலாளியின் மகள் கல்கிஸ்ஸை மஜிஸ்ரேட்டை நேரில் சந்தித்து தனக்கு பணம் வந்த முறைமையினை விளக்கமாக கூறியுள்ளார். நீதிமன்ற விசாரணைகளின் பின் மேலதிக அனைத்து தகவல்களும் அம்பலத்திற்கு வரும்.
»»  (மேலும்)