11/12/2014

| |

உலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்

சர்வதேச தலைவர்கள் பங்குபற்றக்கூடிய, மியன்மாரில் முன்னெப்போதும் நடந்திராத முக்கிய சந்திப்பொன்று தலைநகர் நேப்பிடோவில் தொடங்கியிருக்கிறது.
12வது ஆசியான்- தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டுக்காக உலகத் தலைவர்கள் மியன்மாரில் கூடுகின்றனர்.
மியன்மாரின் (பர்மா என்றும் அழைக்கப்படும்) சீர்திருத்த நடவடிக்கைகள் முடங்கியிருப்பதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் இருந்துவருகின்ற நிலையில், இந்த மாநாடு நடக்கின்றது.
அடுத்த சில தினங்களில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட உலக மற்றும் பிராந்திய தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தொடர் மியன்மாரில் நடக்கின்றது.
2011-ம் ஆண்டில் சிவில் அரசாங்கத்திடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்க இராணுவ அதிகாரிகள் தொடங்கிய காலம் முதல், மியன்மாருக்கு எதிரான சர்வதேச தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு புதிய சீர்திருத்தங்கள் எதுவும் நடக்கவில்லை என்று நோபல் பரிசு வென்றவரான எதிரணித் தலைவி ஆங் சான் சூச்சி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.