11/06/2014

| |

போரில் அனாதியாகிய குழந்தைகளை வாழவைத்த லட்சணத்தில் மலையக குழந்தைகளை வாழவைக்க துடிக்கும் வடமாகாண சபை


75 பிள்ளைகளின் செலவை பொறுப்பேற்க புலம்பெயர் தமிழர்கள் தயார்: சி.வி.கே  

பதுளை, கொஸ்லாந்த, மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பெற்றோரை இழந்த 75 பிள்ளைகளை பொறுப்பேற்பதற்கு வடமாகாண சபை தயாக்ராக உள்ளது. அவர்கள் தங்களது பாடசாலைக் கல்வியை முடிக்கும் வரையான அனைத்து செலவுகளையும் புலம்பெயர் தமிழர்கள் ஏற்கத் தயாராக இருக்கின்றனர் என்று வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று புதன்கிழமை (05) தெரிவித்தார்.


கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கட்டிடத் தொகுதியில் இன்று புதன்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.