11/20/2014

| |

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி மஹிந்த!

ஜனாதிபதித் தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தியோகபூர்வ பிரகடனத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ளார். 
ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதி புதல்வர் யோசித்த ராஜபக்ஷ ஆகியோர் அருகில் இருக்க அலரி மாளிகையில் ஜனாதிபதி பிரகடனத்தில் கையொப்பம் இட்டுள்ளார். 

அதன்படி, 4 வருட பதவிகாலம் முடிந்துள்ளதால் தேர்தல் ஒன்றை கோருவதோடு போட்டியிடவும் தயார் என தெரிவித்தும் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளரிடம் ஜனாதிபதி கோரியுள்ளார். 



ஜனாதிபதியால் கைச்சாத்திடப்பட்ட பிரகடனம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.