வருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி செய்யும் பாரிய இலக்கு
ஆனையிறவு உப்பளம் 1938ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை சிறப்பாக இயங்கி வந்ததுடன் அதன் மூலம் நாட்டின் வீட்டு நுகர்வுக்கும் கைத்தொழில் பயன்பாட்டுக்குமான உப்புத் தேவையில் பெரும் பகுதி உற்பத்தி செய்யப்பட்டது. 1990 ம் ஆண்டுக்கு முன்னர் ஆனையிறவு உப்பளத்தின் வருடாந்த உப்பு உற்பத்தி 60,000 தொடக்கம், 80,000 வரையான மெற்றிக் தொன்னாகக் காணப்பட்டது.
அக்காலத்தில் நாட்டின் மொத்த உப்புத் தேவையில் 30 முதல் 40 சதவீதமான பகுதி ஆனையிறவு உப்பளத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனையிறவு உப்பளம் மொத்தமாக 1946 ஏக்கர் பரப்பைக் கொண்டதாகும். அதில் 1169 ஏக்கர் நிலம் வட பகுதியிலுள்ள குறிஞ்சா தீவில் அமைந்துள்ளது. மீதி 777 ஏக்கர்களும் பொதுவாக ஆனையிறவு பகுதியில் அமைந் துள்ளன.
இந்த இரு உப்பளங்களும் பரந்தனுக்கும் இயக்கச்சிக்கும் இடையிலுள்ள கடற்கரைப்பகுதியில் அமைந்துள்ளன. அதனால் இந்த இரண்டு இடங்களும் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அமைந்துள்ளன. ‘ஆனையிறவு உப்பளம்’ என அழை க்கப்படும் பகுதி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலும், குறி ஞ்சாதீவு என அழைக்கப்படும் வடக் குப் பகுதி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிலும் அமைந்துள்ளன.
1990 ம் ஆண்டுக்கு முன்னர் இந்த உப்பளம் உயர் தரத்திலான தூய வெள்ளை உப்பை உற்பத்தி செய்தது. ஆனையிறவு பிரதேசத்தில் நிலவும் அதிக சூரிய ஒளி, குறைந்த மழை வீழ்ச்சி, அதிக வெப்பநிலை, அதிக ரித்த காற்றின் வேகம், குறைந்த அமுக்கம், உலர் காற்று என்பன போன்ற இயற்கையான இயல்பான சூழல் இந்த உப்பளத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
1938ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் உயர் தரத்திலான தூய வெண்ணிற உப்பை மிகவும் வெற்றிகரமான முறையில் உற்பத்தி செய்து வந்ததாக பாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி கூறுகின்றார். எவ்வாறாயினும், யுத்த சூழ்நிலையின் காரணமாக உப்பளத்தின் தொழிற்பாடுகள் 1990 ம் ஆண்டில் கைவிடப்பட்டு கடந்த 23 வருடங்களாக மூடப்பட்டிருந்தது.
தற்போது இலங்கைக்கு வருடாந்தம் 150,000 மெற்றிக் தொன் உப்பு தேவை ப்படுகிறது. இதில் 80 சதவீதம் வீட்டு நுகர்வுக்கும் மீதமுள்ள பகுதி கைத்தொழில் தேவைகளுக்கும் பயன் படுத்தப்படுகின்றன. இக்கேள்வியில் 97 சத வீதம் தற்போதைய உப் பளங்கள் மூலம் பூர்த்தி செய்யப் படுகின்றது. மொத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தூய உலர் காற்று தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுத்தி கரிக்கப்பட்ட 4500 மெற் றிக் தொன் உப்பு வரு டாந்தம் இறக்குமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் 500 பில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்த 65 மில்லியன் மெற்றிக் தொன் உயர் தரத்திலான உப்பு, உலக சந்தைக்கு குறிப்பாக ஐக்கிய அமெரிக்க, ஜப்பான், சீனா, தென்கொரியா மற்றும் ஏனைய நாடுகளுக்குத் தேவைப்படுகின்றது. மஹிந்த சிந்தனை தேசிய அபிவிருத்தி வரைபுக்கு அமைய ‘வடக்கின் வசந்தம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.
பாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளின் பேரில் ஆனையிறவு உப்பளத்தின் புனரமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்காக 2014ம் ஆண்டு மே மாதத்தில் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் 100 மில்லியன் ரூபா நிதியினை வழங்கினார்.
இந்த ஆரம்ப நிதி ஒதுக்கீடு, கட் டம் 1 இன் புனரமைப்பு பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என பாரம்பரியக் கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி கூறுகின்றார். கட்டம் 1 மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வருடாந்தம் 20,000 - 25,000 மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வகையில் 15 நீராவியாக்கல் பாத்திகள், 267 உற்பத்தி பாத்திகள், கடல் நீர் உள்வாங்கல் கால்வாய்கள், வான்வழிகள், கால்வாய்த் தொகுதி, வெள்ளத் தடுப்பு அணைகள், நீர்த்தேக்கத்திற்கான கற்குவியல் பாதுகாப்பு, அணைகள், 30 உப்பள மேடைகள், நுழை பாதை, மின்சாரம், கட்டடங்கள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட தொடர்புடைய உட்கட்ட மைப்பு வசதிகள் என்பன மீள்நிர்மாணம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
ஆனையிறவு உப்பளச் செயற்திட் டத்தை மீள ஆரம்பிக்கும் செயற் திட்டத்தின் கீழ் கடல் நீர் உள்வாங்கல் கால்வாய், நீர்த்தேக்க வெளி நில அணைகளுக்கான புதுப்பித்தல் வேலைகள், நீர்த்தேக்கத்திற்கான கற்குவியல் பாதுகாப்பு, வெள்ளத் தடுப்பு நில அணைகளின் திருத்த வேலைகள், வான்வழிகளின் நிர்மாணம், மின்னி ணைப்பு வழங்கல், கட்டடங்களைப் புதுப்பித்தல், உளவு இயந்திரங்கள், டிரெய்லர்கள், கருவிகள், துணைப் பாகங்கள் என்பவற்றின் கொள்வனவு பணிகள் நடைபெற்று வருகின்றன.
யுத்தம் நிலவிய பிரதேசத்தின் நடுப் பகுதியில் இந்த இடம் அமைந்திருந் தமையினால் ஆனையிறவு உப்பளப் பிரதேசத்தில் பெருமளவிலான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. உப்பளத்தில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் அவுஸ்திரேலிய அரசாங் கத்தின் உதவியுடன் சமூக நல்லி ணக்கத்திற்கான டெல்வொன் உதவி (DASH) நிறுவனத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. DASH நிறுவனம் கண்ணிவெடி அகற்றல் விடுவிப்புச் சான்றிதழை பாரம்பரியக் கைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சிடம் 2011 ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளித்ததாக அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி கூறுகின்றார்.
உப்பளத்தின் உட்கட்டமைப்பு அபி விருத்திச் செயற்பாடுகளின் அமுலாக்கப் பணிகளில் கிளிநொச்சி மாவட்ட மக் களையும் சங்கங்களையும் செயலூக் கத்துடன் பங்கேற்கச் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கிணங்க, கிளிநொச்சி மாவட்ட செயலகம் பல் வேறுபட்ட ஒப்பந்தப் பொதிகளுக்கான விலைமனுக்களை அப்பிரதேசத்திலுள்ள கிராம அபிவிருத்திச் சங்கங்களிடமிருந் தும் மகளிர் கிராம அபிவிருத்திச் சங் கங்களிடமிருந்தும் கோரியது.
தட்டுவான்கொட்டி கிராம அபிவி ருத்திச் சங்கம், குமரபுரம் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கம், பரந்தன் மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கம், திருவையாறு பலநோக்குக் கூட்டுற வுச் சங்கம், கரச்சி வடக்கு கடற் றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், குமரபுரம் கிராம அபிவிருத்திச் சங் கம், இயக்கச்சி மகளிர் கிராம அபி விருத்திச் சங்கம், MASAR, இரத்தினபுரம் மகளிர் குழு, இயக்கச்சி கிராம அபி விருத்திச் சங்கம் என்பன உள்ளிட்ட கிராம அபிவிருத்திச் சங்கங்களும், மகளிர் அபிவிருத்திச் சங்கங்களும் உட்கட் டமைப்பு அபிவிருத்திப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றன.
இச்செயற்திட்டத்தை கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 10 கிராமிய அபி விருத்திச் சங்கங்கள், மகளிர் கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள் பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துகின்றமை விசேட அம்சமாகும் என சிவஞானசோதி கூறுகின்றார். சங்கங்களின் 300 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்கள் புனரமைப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனால், கிளிநொச்சி மாவட்ட மக்கள் இப்புனரமைப்புப் பணிகளில் பாரியளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இச் செயற்திட்டத்தின் அமுலாக்கத்தின் போது அவர்கள் அதிகம் பயனடைவர். இச்செயற்திட்டத்தின் திட்டமிடல் மற்றும் அமுலாக்கல் கட்டங்களில் உறுதியான உரிமையையும் சமூக ஈடுபாட்டையும் கட்டியெழுப்பியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 300-400 தொழிலாளர்கள் வேலைக்கமர்த்தப்பட்டுள்ளனர். கருவிகள் மற்றும் துணைப் பாகங் களின் கொள்வனவு உள்ளிட்ட அனை த்து உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகளும் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டு 1 ம் கட்டத்தின் தொழிற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. கட்டம் 1 பூர்த்தியாக்கப்பட்ட பின்னர் வருடாந்தம் 20,000 - 25,000 மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனையிறவு உப்பளத்தின் 447 ஏக்கர் கொண்ட இரண்டாம் கட்டத்தின் செயற்பாடுகள் 2015ஆம் ஆண்டில் திறைசேரியின் நிதியைப் பயன்படுத்தி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன் மூலம் 30,000 மெற்றிக் தொன் உப்பை மேலதிகமாக உற்பத்தி செய்ய முடியும் என்றும் 3000 இற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்களை உருவாக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. உட்கட்ட மைப்பு அபிவிருத்தி வேலைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் வருடாந்தம் 70,000 - 100,000 மெற்றிக் தொன் உப்பினை உற்பத்தி செய்ய முடியும் என்று எதிர்பார்க் கப்படுகின்றது.
அயடீன் சேர்த்தல், உப்பை பொதி செய்தல், உப்பு விநியோகம், தொட ர்புடைய இரசாயனங்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களின் உருவா க்கம். சூழல்சார் சுற்றுலாத் துறை அபிவிருத்தி என்ப வற்றை உள்ளடக்கக் கூடிய வகையில் ஆனையி றவு உப்பள அபிவிருத்திச் செயற்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. தூய வெண் ணிற உயர் தரத்திலான உப்பினைக் கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டுக் கொள்வனவாளர்களும் விருப்பம் தெரி வித்துள்ளனர். இத்தகைய தொடர்புடை செயற்பாடுகள் மூலம் ஆனையிறவுப் பிரதேசத்தை உள்ளடக்கிய விதத்தில் ‘உப்பு தொழில் முயற்சி நகரம்’ அபிவிருத்தி செய்யப்படும்.