ளுவாஞ்சிகுடி வாவி மீனவர் கூட்டுறவுச் சங்கம் மீன்களை கருவாடாக்கி பொதிசெய்து விற்பனை செய்து நிகர இலாபமீட்டி வருகிறது. அச்சங்கத்தில் திரு. பேர்ணாட் தலைமையில் 90 மீனவர்கள் உள்ளனர். அவர்களுக்கு நாம் 10 இலட்ச ரூபா வரையில் மானிய அடிப்படையில் கடன் வழங்கியுள்ளோம்.
கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி கால்நடை உற்பத்தித்துறை அமைச்சின் கீழ் உள்ள மீன் பிடித் திணைக்களத்தின் மீன் பிடிப் பிரிவு பணிப்பாளர் சிவபாதசுந்தரம் சுதாகரன் வழங்கிய செவ்வி.
வினா : கிழக்கில் எவ்வித கட்டமைப்பினுள் உங்கள் மீன்பிடிப் பிரிவு இயங்கி வருகிறது?
விடை : கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களில் மூன்று மாவட்டப் பணிப்பாளர்களுடன் ஒத்திசைவான முறைமையில் எமது மீன்பிடிப் பிரிவு உள்நாட்டு மீன்பிடி மீனவர்க்கான அபிவிருத்தித் திட்டங்களை செய்து வருகிறது.
வினா : உள்நாட்டு மீன்பிடி என்aர்கள். அதுபற்றிக் கூறமுடியுமா?
பதில் : ஆம் உள்நாட்டு மீன்பிடி எனும்போது நன்னீர் மீன்பிடி, களப்பு மீன்பிடி, ஆழமற்ற கடல் கரைவலை மீன்பிடி என்பவைகளைக் குறிப்பிடலாம். நாம் உள்நாட்டு மீன்பிடி தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்து வருகிறோம்.
வினா : எவ்வகையான அபிவிருத்தித் திட்டங்கள் என்று கூறுவீர்களா?
பதில் : மீனவர்களுக்கான உள்Zடுகளை மானிய அடிப்படையில் வழங்குதல், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்குதல், வலுசேர் பொருட்களை சந்தைப்படுத்தல் கண்ணாடி இழை குளிரூட்டிப் பெட்டிகளை வழங்குதல், தடாக வளர்ப்பை ஊக்குவித்தல் போன்றன.
வினா : கிழக்கில் மீனவர் தொகை பற்றி கூறுங்கள்?
பதில் : கிழக்கில் வயல் வளமும் கடல் வளமும் நன்னீர் நிலைகளும் நிறையவேயுள்ளன. கிழக்கில் சுமார் 1 இலட்சம் மீனவர்கள் உள்ளனர். சுமார் 500 மீனவர் சங்கங்கள் உள்ளன.
வினா : மீனவர் சங்கங்களுக்கு எவ்வகையான உதவிகளைச் செய்கிaர்கள்?
பதில் : நான் ஏலவே கூறியதுபோல் மானிய அடிப்படையில் உள்Zடுகளை வழங்குதல். புதிய மீனினங்களை அறிமுகப்படுத்தி வளர்ப்பு முறைகளுடன் பயிற்சியளித்தல், உதாரணமாக திலாப்பியா கெண்டை மீனினங்கள். அதேபோல இறால் வளர்ப்பிற்கும் உதவிசெய்கிறோம். இலங்கையில் வடமேல் மாகாணத்திற்கு அடுத்ததாக கிழக்கு மாகாணமே இறால் உற்பத்தியில் கூடுதல் இடத்தைப் பெறுகிறது. குறிப்பாக இறாலுக்கு வரும் நோய்களை கட்டுப்படுத்துவதில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை வழங்கி வருகின்றோம்.
வினா : மீனவர்களுக்கு காப்புறுதி வழங்குவதுண்டா?
பதில் : உண்மையில் மீனவர்களுக்கான முகாமைத்துவ பணிகளை மத்திய அரசும் அபிவிருத்திப் பணிகளை மாகாண சபையும் செய்து வருகிறது. மீன்பிடிக் கலங்களை பதிவுசெய்தல் தொடக்கம் காப்புறுதி வழங்குதல் வரை மத்திய அரசைச் சார்ந்தது. எனவே காப்புறுதி வழங்கல் எமது பொறுப்பல்ல.
வினா : நீங்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள் எவை?
பதில் : சட்டவிரோத மீன்பிடியிலீடுபடுதல், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பாவிக்கின்ற போது சிறிய ரக மீனினம் குறைந்து போக வாய்ப்புண்டு. நீர் நிலைகளில் கழிவுகளைக் கொட்டி நீரை அசுத்தமாக்கல். நீர் நிலைகளில் கழிவுகளைக் கொட்டுவதால் நீர் நிலைகள் மாசடைகின்றன. நஞ்சூட்டப் படுகின்றன. இதனால் மீன்கள் நோய்வாய்ப்பட அல்லது இறக்கக் காரணமா கின்றது போதுமான ஆளணி வசதியில்லாமை என்பவற் றைக் குறிப்பிடலாம்.
வினா : சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க முடியாதா?
பதில் : அது மத்திய அரசு சார்ந்தவிடயம். தங்கூசி இழையைப் பயன்படுத்தமுடியாது. அது தடைசெய்யப்பட்டுள்ள சட்டவிரோத மீன்பிடியால் எமது சிறிய மீன்கள் பெருமளவில் அழிந்துபோகின்றன. மீனுற்பத்தி குறையும்.
வினா : கிழக்கின் மீனுற்பத்தி எந்தளவிலுள்ளது?
பதில் : இலங்கையின் மொத்த மீனுற்பத்தியில் ஐந்தில் ஒரு பகுதி உற்பத்தியை கிழக்கு மாகாணம் செய்கிறது. அதாவது மொத்த தேசிய மீன் உற்பத்தி 50 ஆயிரம் மெற்றிக் தொன். இதில் கிழக்கு மாகாணம் 11 ஆயிரம் மெட்ரிக் தொன் மீனை உற்பத்தி செய்கிறது. கிழக்கின் மீனுற்பத்தி அபிவிருத்தி கண்டுவருகிறது.
வினா : வலுசேர் மீன் உணவுகளை பதனிடுதல் என்றால் என்ன?
பதில் : மீன்களை சுகாதார முறையில் கருவாடாக்கி பொதிசெய்தல், இது சுமார் 3 மாதங்களுக்கு பழுதடையாமல் இருக்கும். இரத்த அழுத்தமுள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கொழுப்பு சீனி வருத்தமுள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு இக்கருவாடு பொருத்தமானது.
வினா : இது விடயத்தில் ஏதாவது மீனவர் சங்கத்திற்கு உதவி செய்துள்Zர்களா?
பதில் : ஆம். உதாரணமாக களுவாஞ்சிகுடி வாவி மீனவர் கூட்டுறவுச் சங்கம் மீன்களை கருவாடாக்கி பொதிசெய்து விற்பனை செய்து நிகர இலாபமீட்டி வருகிறது. அச்சங்கத்தில் திரு. பேர்ணாட் தலைமையில் 90 மீனவர்கள் உள்ளனர். அவர்களுக்கு நாம் 10 இலட்ச ரூபா வரையில் மானிய அடிப்படையில் கடன் வழங்கியுள்ளோம்.
மின்சூழை வழங்கியுள்ளோம். மட்டு. மாவட்ட பணிப்பாளர் கேதாகரன் இதற்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ளார். இவரின் கீழ் மட்டு. மாவட்டத்தில் 155 சங்கங்கள் உள்ளன. அவற்றுள் இச்சங்கம் சிறப்பாக செயற்பட்டு வருகிறது.