11/30/2014

| |

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பு நிரூபித்துள்ளது

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும்  வீழ்த்த முடியாது என்பதை வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பு நிரூபித்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.இன்னும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டுச்சென்றாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்கட்சிகளால் இல்லாமல் செய்யமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட இருதயபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவைக்கட்டிடத்தின் திறப்பு விழா  நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜதிஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர் செவ்வேள்,பொருளாளர் தேவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.மகிந்த சிந்தனையின் கீழான கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கீடுசெய்த பத்து இலட்சம் ரூபா செலவில் இந்த பல்தேவைக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக ஒன்றுகூடுவதற்கான மண்டபம் இல்லாமையினால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவந்தனர்.இந்த பல்நோக்கு மண்டபம் அமைக்கப்பட்டதன் மூலம் அந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.அத்துடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தினையும் மாகாணசபை உறுப்பினர் ஆரம்பத்துவைத்ததுடன் மரநடுகை திட்டத்தினையும் ஆரம்பித்துவைத்தார்