11/05/2014

| |

மலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்

(சாகரன்)*நன்றி முகனூல் 
மலையக மக்களின் அண்மைய அவலங்களை வைத்து அரசியல் நடாத்த கிளம்பிவிட்டனர் அரசியல்வாதிகள். பாராளுமன்றக் கதிரைகள் தமது பரம்பரைச் சொத்து என்பதை மனதில் நிறுத்தி இதற்கான வேஷங்கள் போடும் கூத்தாடிகள் இவர்கள். இந்த வேஷக்காரர்களை மலையக மக்கள் தமது பாரம்பரிய கலையான காமன் கூத்திற்கூடாக சாட்டையடி கொடுத்து விரட்ட வேண்டும். தமது உறவுகளின் ஒரு பகுதியை தம்மிடம் இருந்து பிரித்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப காரணமாக இருந்தவர்களிடம் இவர்கள் கேள்விகள் கேட்க வேண்டும். இந்தக் கேள்வி வேள்வியில் இந்த மக்களே இறுதியில் வெல்லவும் வேண்டும். இதற்காக அனைத்து ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் ஒரு அணியில் நின்று குரல்கொடுக்க வேண்டும். அன்றேல் மீண்டும் ஒருமுறை இவர்கள் சந்தர்பம் பார்த்து மலையகத்து அப்பாவி மக்களை தர்மபுரங்களில் குடியேற்றி குறைந்த கூலிகளை வழங்கி, மாலை நேரங்களில் இவர்களின் வறுமைக்கு தமது வழங்களைக்காட்டி எமது மலையக பெண்களை தங்கள் மேய்சல் நிலங்களாக்க முயலுவர். வன்னியின் நிலச்சுவாந்தர்கள் பலருக்கு இந்த வரலாறு ஒன்றும் புதியன அல்ல. இதில் இவர்களில் பலரும் புனிதர்களும் அல்லர். இன்று மீண்டும் வெள்ளை வேட்டி கட்டி புனிதர்கள் போல் வேஷம் போட்டு நீலிகண்ணீர் வடிக்கின்றனர் இவர்கள். ஒருவேளை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட இதே மலையக குழந்தைகளை ‘வேலைக்காரி’ என்று தத்து எடுத்து அடிமைகளாக 24 மணிநேரமும் கூலி இல்லா வேலை வாங்கிய வடுக்களைக் கொண்டவர்கள் இவர்கள். நாய்க்கு போடும் மிகுதியில் ஒருபகுதியை ஒரு வேளை மட்டும் ‘தீனி’யாகப் போட்டு நாய்கள் படுக்கும் கொட்கைகளில் சாக்கில் படுந்துறங்க வைத்த கொடுமை அனுபவங்கள் இந்த பிஞ்சுகள் பலருக்கும் உண்டு. இன்றுவரை எந்த தமிழ் பாராளுமன்ற அரசியல் தலைவர்களும் இதற்கு வருந்தியது கிடையாது. ஏன் எனில் இவர்களும், இவர்களின் மூதாதையரும் இதன் பங்காளிகள் அல்லவா. அப்போ எப்படி ஐயா நம்ப முடியயும் இவர்களின் மலையகத்து வெள்ளை வேஷ்டி விசிட்டை. என்ன….. இது எல்லாம் இவர்களுக்கு அரசு சொகுசு வாகனங்களில் கூட்டமாக எமது அழகிய மலையத்திற்கு ஒரு சுற்றுலா அவ்வளவுதான். இதற்கு மேல் ஏதும் இவர்கள் செய்யப் போவது இல்லை. தாய் தந்தையரை இழந்த 75 வரையிலான மலையகக் குழந்தைகளை பொறுப்பெடுத்து வளர்க்கப்போகின்றனர் என்று வடமகாண சபையில் முழக்கம் வேறு. இதே போலத்தானே அன்றும் தமது பிள்ளைகளுக்கு ஒருவேளை உணவு இல்லாத வறுமையில் உங்களிடம் பிஞ்சுகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றனர் உயிருடன் இருந்த தாய் தந்தையர். நீங்கள் அந்த பிஞ்சுகளை ‘வேலைக்காரி’ என்று வஞ்சனையுடன் அடிமைகள் போல் நடத்தியது இன்றும் கல்லில் எழுதிய எழுத்துக்களாய் தலைமுறை கடந்தும் தணர்ந்துகொண்டு இருக்கின்றது. இதுதான் ஒட்ட முடியாத உறவுகளாய் எம்மினத்து உழைப்பு மக்கள் எட்டவே உயரத்தில் அட்டைகடிகளுக்கும், பேரினவாத அடிகளுக்கும் இடையில் யாழ்ப்பாணமும் வேண்டாம், கொழும்பும் வேண்டாம், தருமபுரமும் வேண்டாம் என்று இன்றுவரை இருக்கின்றர். இன்றும் எம்மில் பலருக்கு இவர்கள் ‘தோட்டக்காட்டான்’, ‘வயித்துகுத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக்கூடாது. ‘கள்ளத் தோணி’ என்று பழிப்பதில், பாகுபடுத்துவதில், தரம் குறைத்து பார்பதில், தள்ளிவைப்பதில் புழகாங்கிதம் இல்லை என்று யாராவது உரத்து கூறட்டும் பார்க்கலாம். இதைதானே ‘தொப்பி பிரட்டி’, ‘காக்க’ என்று இனச்சுத்திகரிப்பு செய்தனர் யாழ்பாணத்தில். இதற்கு எல்லாம் எதிர்குரல் கொடுத்தவர்கள் துரோகிகள் ஆக்கப்பட்டனர், சுட்டக்கொலப்பட்டனர், துரத்தியடிக்கப்பட்டனர், காணாமல் செய்யப்பட்டனர். இலங்கை இராணுவம் ஒரு புறம் என்றால் மறுபுறம் நீங்கள் நின்று அதேயளவில் சுட்டக்கொல்லவில்லையா. இன்றுவரை மீள்குடியேற்றம் என்று வந்தால் முஸ்லீம் மக்களும், தருமபுரத்து மக்களும் இரண்டாம்தர பிரஜைகளாக கையாளுவதில் இந்த வீரர்கள் பின் நிற்கவில்லை என்ற செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. எனவேதான் சொல்கின்றோம் எமது மலையகத்து சகாக்களே இந்த பொய்யர்களுக்கு எதிராக காமன் கூத்தாடுங்கள், வேள்வி நடத்துங்கள்கள், பொய்யர்களை அனுமதிக்காதீர்கள். இது கொழும்பில் ஜாகைபோட்டு வீரவசனம் பேசும் சட்டை கசங்காத நடிகர் விபி கணேசனுக்கும் பொருந்தும். இந்த வேள்விகளில் என்றென்றும் நாம் உங்களோடு தோளோடு தோள்கொடுத்து நிற்போம். இவ்விடத்தில் இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உளவியல் மாணவர் அமைப்பு இந்த அனர்ந்தங்களுக்கு செய்துவரும் நிவாரணப் பணிகளையும், மேலும் முகமறியாத பல தனி நபர்களையும், ஸ்தாபனங்களையும் நாம் கரிசனையுடன் எடுத்துப்பார்பதும் நலம் என்று நினைக்கின்றோம்.
மலையக மக்களுக்காக கோஷங்கள் போடும் வேஷதாரிகள்

(சாகரன்)