11/16/2014

| |

யாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் ஆராய்வு

யாழ். நகரகுளத்தை புனரமைத்து அழகுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் ஆராய்வு 16.11.2014 - ஞாயிற்றுக்கிழமையாழ்ப்பாணம் நகர குளத்தை புனரமைத்து அதனை அழகுபடுத்திப் பராமரிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் ஆராய்ந்;தறிந்து கொண்டார். குளம் அமைந்துள்ள பகுதிக்கு இன்றையதினம் (16) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் அதன் புனரமைப்பு தொடர்பில் ஆராய்ந்தார்.யாழ்ப்பாண நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இக் குளம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.இதனையடுத்து நகரத்தை அழகுபடுத்தும் வகையில் அதனை பாதுகாத்து பராமரிக்கும் வகையில் செயற்திட்டங்கள் தொடர்பில் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டார்.கஸ்தூரியார் வீதியில் மாநகர சபையால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதிக்குப் பின்புறமாகவுள்ள இக்குளத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனைக்கமைவாக புனரமைப்பதனூடாகவும் அதனைப் பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்திட்டங்கள் ஊடாகவும் யாழ்ப்பாண நகரம் எதிர்காலத்தில் புதுப்பொலிவுடனும் அழகுடனும் காட்சிதரும் என்பது குறிப்பிடத்தக்கது.