11/12/2014

| |

வடமாகாணசபையின் நிவாரண நிதி: 38 உறுப்பினர்களில் 13 உறுப்பினர்களே வழங்கினர்!

பதுளை மாவட்டம் கொஸ்லந்தை பகுதியில் இடம்பெற்ற மண் சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு,வடக்கு மாகாண சபையின் சார்பில் சேகரிக்கப்படும் நிவாரணப்பொருள்களை 07.11.2014 அன்று கொண்டுசென்று ஒப்படைப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
வடக்கு மாகாண சபையின் பேரவைச்செயலகத்தில் கடந்த 31.10.2014 அன்று நடைபெற்ற சபை உறுப்பினர்களுடனான கூட்டத்தில்உறுப்பினர்களின் பங்களிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் தலா பத்தாயிரம் ரூபாவை நிதியுதவியாக வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இந்த முடிவின் பிரகாரம்வடக்கு மாகாணசபையை பிரதிநிதித்துவம் செய்யும் 38உறுப்பினர்களில் 13 உறுப்பினர்களே நிவாரண நிதியை  உவந்தளித்துள்ளனர்.
அதன் விவரம்:
கௌரவ க.வி.விக்னேஸ்வரன் (முதலமைச்சர்) 50,000
கௌரவ எச்.எம்.ரயீஸ் (உறுப்பினர்) 50,000
கௌரவ சீ.வீ.கே.சிவஞானம் (அவைத்தலைவர்) 10,000
கௌரவ த.குருகுலராசா (கல்வித்துறை அமைச்சர்) 10,000
கௌரவ கே.என்.கனகரட்ணம் (உறுப்பினர்) 10,000
கௌரவ அ.பரஞ்சோதி (உறுப்பினர்) 10,000
கௌரவ ப.அரியரத்தினம் (உறுப்பினர்) 10,000
கௌரவ வை.தவநாதன் (உறுப்பினர்) 10,000
கௌரவ ம.தியாகராசா (உறுப்பினர்) 10,000
கௌரவ இ.இந்திரராசா (உறுப்பினர்) 10,000
கௌரவ து.ரவிகரன் (உறுப்பினர்) 10,000
கௌரவ வீ.கனகசுந்தரசுவாமி (உறுப்பினர்) 10,000
கௌரவ பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதனும் அவரது மகனும் இணைந்து 25,000ரூபாவும் பங்களிப்புச்செய்துள்ளதாக அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அறிவித்துள்ளார்.
மேலும் நலன்விரும்பிகளால் இதுவரை வடமாகாண பேரவைச்செயலகத்தில் செலுத்தப்பட்ட நிதியுதவிகளின் விவரம்:
பி.சிதம்பரநாதன் (உரும்பராய்) 100,000
என்.அருணாசலம் (திருநெல்வேலி) 10,000