11/08/2014

| |

35வருடகத்துக்கு பின்னர் திறக்கப்பட்ட கல்லடி அரசாங்க விடுதி வீதி

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கல்லடிப்பகுதியில் கடந்த 35 வருடமாக மூடப்பட்டிருந்த வீதி திறக்கப்பட்டு புனரமைக்கப்பட்டது.


கல்லடி அரசாங்க விடுதி வீதியே இவ்வாறு இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது.

இந்திய இராணுவம் இப்பகுதியில் தரித்திருந்த காலப்பகுதியில் மூடப்பட்ட இவ்வீதியான பின்னர் இராணுவமுகாம் அமைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மூடப்பட்டுவந்தது.

இந்த நிலையில் அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ மற்றும் கிழக்கு மாகாண படைத்தளபதி ஆகியோரிடம்  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த வீதி திறப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகரன்,முன்னாள் மட்டக்களப்பு மாநகர பிரதி ஆணையாளர் ஜோர்ஜ்பிள்ளை மற்றும் மாதர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டு வீதியை திறந்துவைத்தனர்.

இதன்போது படைமுகாம் அமைப்பதற்கு அமைக்கப்பட்ட முள்வேலிகள் மற்றும் வேலைகள் அகற்றப்பட்டு சிரமான அடிப்படையில் தூய்மைப்படுத்தப்பட்டது.

அனைத்தொடர்ந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் விசேட நிதியொதுக்கீட்டில் கிரவல் இடும் பணிகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
இப்பகுதி மக்கள் நீண்டதூரம் பிரயாணம் செய்தே பிரதான வீதிக்கு செல்லும் நிலை இருந்துவந்தது.இந்த வீதி திறக்கப்பட்டுள்ளதால் விரைவாக தங்களது பயணங்களை மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவித்தனர்.