11/11/2014

| |

டயகமவில் தீ; 24 லயன் அறைகள் நாசம்

டயகம மேற்கு இரண்டாம்  பிரிவிலுள்ள லயன் குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்த அனர்த்தம் இன்று திங்கட்கிழமை(10) மாலை 6.45  மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
 
பொதுமக்களும் இலங்கை மின்சார சபையின் ஊழியர்களும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.
 
மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் இந்த விபத்தில் இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.