11/17/2014

| |

ஜி–20 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறினார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் ஜி–20 மாநாடு கடந்த 2 தினங்களாக நடந்து வந்தது. இம்மாநாட்டில் இருந்து  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், முன் கூட்டியே புறப்பட்டுச் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த மாநாட்டில் பேசிய கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் ஆகியோர் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினை கடுமையாக தாக்கி பேசினார்கள்.
இதனால் ரஷிய அதிபர் புதின், மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்து விட்டு அவசரமாக நாடு திரும்பினார். நாடு திரும்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  பிரிஸ்பேனிலிருந்து, ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு செல்வதற்கு, 18 மணி நேரம் ஆகும். இதன்பின், மாஸ்கோவில் அதிபர் மாளிகைக்கு சென்று பணிகளை கவனிக்க வேண்டும். இது, மிகவும் களைப்பை ஏற்படுத்தும்.
எனவே, முன் கூட்டியே கிளம்பிச் செல்வதன் மூலம், நன்றாக தூங்குவதற்கு நேரம் கிடைக்கும். தூங்குவதற்காகவே, முன் கூட்டியே கிளம்புகிறேன். மற்ற எந்த காரணமும் இல்லை' என, அவர், தெரிவித்துள்ளார். .