11/30/2014
| |
கல்லடியில் வாழ்வின் எழுச்சி நிவாரணம் வளங்கும் நிகழ்வு
| |
தமிழர்களுக்கு அதிக தீங்கிழைத்தது ஐக்கியதேசிய கட்சியே
1968 இல் டட்லி – தந்தை செல்வா ஒப்பந்தத்தில் அதிகாரம் பிராந்திய முறையிலிருந்து மாவட்ட முறைக்கு வந்தது இறுதியில் எதுவும் இல்லாமல் போய்விட்டது. பின்பு அரசியலில் நரியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா 2/3 பலத்தோடு இருந்தும் தமிழர்களுக்கு இந்திய அரசுடன் செய்து கொண்ட 13 ஆவது ஒப்பந்தத்தின் படி மாகாண சபைக்கான அதிகாரங்களை வடகிழக்கு மாகாண சபைக்கு வழங்கவில்லை. அதற்காக மஹிந்த ராஜபக்ஸ எமக்கு அள்ளிக் கொட்டிவிட்டார் என்று கூறவில்லை, மாகாணங்களுக்கு அதிகாரங்களை ஓரளவுக்கேனும் வழங்கி இருந்தார். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும் பெற முடியாது பதிலாக படிப்படியாகத்தான் நாம் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்.
2009 இன் பின்னர் நாட்டில் அமைதி நிலவுகின்றது இராணுவம், பொலிஸ் பரிசோதனை என்றில்லாமல் யார் எந்த இடத்திற்கும் என்நேரமும் செல்லலாம். இந்நிலையை நாம் பாதுகாக்க வேண்டும். தமிழர்களாகிய எமக்கு சந்தர்ப்பம் தரப்பட்டுள்ளது நாம் படிப்படியாக முன்னேறுவோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழுக்களுடன் பேசுதல், கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்கல் என்று பல்வேறு பிரச்சினைகளைப் பேசுகின்றார்கள் அவர்கள் பெரிய தேசியப் பிரச்சினைகளைக் கண்டு கொள்வதில்லை.
மஹிந்த ராஜபக்ஸவின் தீக்க தரிசனமிக்க செயல் அவரது 2015 ஆம் அண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களைக் காண்பிக்கின்றது. அதை விடுத்து எல்லாம் கொள்ளை, குடும்ப ஆட்சி என்று ஒட்டு மொத்த பொய்களைக் வாய் கூசாமல் கூறாமல் நல்ல விடயங்களை நல்லது என்றே கூற வேண்டும். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம் வந்த பிறகு கிராம புறப் பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூடங்கள் வந்தன இதனால் கிராமப் புறமாணவர்கள் 5 ஆம் அண்டு புலமைப்பரிசில் முதல் பல்கலைக்கழகம் வரை சென்றுள்ளார்கள்;. மட்டக்களப்பிற்கு நிறைய அபிவிருத்தி வந்துள்ளது. இவைகள் அபிவிருத்தி இல்லையா அதை விடுத்து பொய்யான பிரசாரங்களை நம்பி ஏமாறாமல் உளரீதியாக ஏற்று சிறந்த சிந்தனை மாற்றத்தோடு செயல்படுங்கள்.சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைச் செயலாளராக இருந்து ஆட்சி புரிந்து வந்த மைத்திரிபால சிறிசேனா பொன்சேகா போல் விழுந்து நொருங்கப் போகின்றார் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவர் 100 நாட்களில் நிறைவேற்று ஜனதிபதி ஆட்சி முறையை ஒழித்தல் போன்ற பல்வேறு நடைமுறைக்கப் பொருந்தாத பொய்யான பிரசாரங்களை பேசி வருகின்றார். இவற்றை நம்பாமல் எமக்குள்ள பிரச்சினைகளை எமது சிறார்களுக்கு இட்டுச் செல்லாது உரிமைகளைப் பெற சிறந்த சிந்தனை மாற்றத்தோடு தீர்க்க தரிசனமிக்க ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்களித்து தமிழர்களாகிய எமக்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க முற்படுவோம் என்றார்.
| |
தமிழ் மக்களுக்கு எந்த வாக்குறுதியும் வழங்காத மைத்திரியின் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
| |
ஹொஸ்னி முபாரக் விடுதலை - காணொளி
| |
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தினை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பு நிரூபித்துள்ளது
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஜதிஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர் செவ்வேள்,பொருளாளர் தேவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.மகிந்த சிந்தனையின் கீழான கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கீடுசெய்த பத்து இலட்சம் ரூபா செலவில் இந்த பல்தேவைக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக ஒன்றுகூடுவதற்கான மண்டபம் இல்லாமையினால் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவந்தனர்.இந்த பல்நோக்கு மண்டபம் அமைக்கப்பட்டதன் மூலம் அந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன.அத்துடன் இங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டத்தினையும் மாகாணசபை உறுப்பினர் ஆரம்பத்துவைத்ததுடன் மரநடுகை திட்டத்தினையும் ஆரம்பித்துவைத்தார்
11/29/2014
| |
ஜனாதிபதியால் வெபர் மைதானம் 16ஆம் திகதிதிறக்கப்படும்
| |
தேர்தல் விஞ்ஞாபனம் டிசம்பர்10இல் வெளிவரும்
| |
எஸ்.பொவின் இறுதி ஊர்வலம் நேரடியாக பார்வையிடலாம்
| |
யாழ்.கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மக்கள் மேம்பாட்டுப்பணியில் ஒரு வீதத்தையேனும் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளமுடியவில்லை
11/27/2014
| |
15 ஏக்கர் காணியை இலவசமாக பகிர்ந்தளித்த புலம்பெயர் ஆஸி.தமிழர்
| |
தமிழிலக்கியத்தின் வாழ்நாள் ஊழியன் எங்கள் எஸ்.போவை இனி எப்போ காண்போம்?
11/26/2014
| |
பின்கதவு வழியாக பிரதமர் பதவியை பெற ரணில் முயற்சிக்கிறார்'
இதனால், தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பலநோக்கு மண்டபத்தை திங்கட்கிழமை (24) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
'நூறு நாட்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கமுடியாது. ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமையப்போவதில்லை.
தமிழர் ஒருவர் ஜனாதிபதியாவது எட்டாக்கனியாகும். நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச்செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் நாடாளுமன்றத்தில் அவசியமாகும். அதை எதிரணியால் செய்யமுடியாது.
சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். இவற்றை இல்லாமல் செய்யாமல், நிறைவேற்று அதிகாரத்தை நூறு நாட்களில் இல்லாமல் செய்யமுடியாது.
தற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழ்நிலை, சிங்களத் தலைவர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியாகும்' எனவும் கூறினார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பி.பிரசாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராசா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
| |
கிழக்கு மாகாணசபையில் அ.இ.ம.கா. உறுப்பினர்கள் தனித்து இயங்க தீர்மானம்
அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் உயர்பீடக் கூட்டம் கொழும்பில் திங்கட்கிழமை (24) இரவு நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணசபையில் உறுப்பினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, எம்.எஸ்.சுபைர், சிப்லி பாறூக் ஆகியோர் உள்ளனர்.
இதில் முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில், கிழக்கு மாகாணசபையில் இக்குழு தனித்து இயங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபையில் கொண்டுவரப்படும் பிரேரணைகள் மற்றும் வேலைத்திட்டங்களை பொறுத்து, தமது கட்சியைச் சேர்ந்த மூன்று மாகாணசபை உறுப்பினர்களும் அவ்வப்போது முடிவெடுத்து, அதற்கேற்ப செயற்படுவதற்கு மேற்படி கூட்டத்தில் அவர்களுக்கு அங்கிகாரமளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த மேற்படி மூன்று உறுப்பினர்களும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். அத்துடன், கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளராக எம்.எஸ்.சுபைர் மற்றும் உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சிப்லி பாறூக் ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
11/24/2014
| |
அனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரிவினரும் இணைந்து நடத்தும் படகுச் சேவை
கிரான் தெற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பேருளாவெளி, கோராவெளி, புலாக்காடு, முறுத்தாணை, குலாவாடி போன்ற கிராம அலுவலகர் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் தரைவழி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இந்தப் பாலத்தின் மேலாக வெள்ளநீர் செல்கின்றமையால், படகுச் சேவையை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (23) கிரான் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப்பிரிவும் கிரான் இராணுவப் பிரிவினரும் நடத்துகின்றனர்.
இதேவேளை, சந்தனமடு ஆற்று நீர்மட்டம் உயர்வடைந்தமையால், சித்தாண்டியை அண்மித்த வயல்வெளி பிரதேசத்தில்; முற்றாக வெள்ளநீர் நிரம்பிக் காணப்படுகிறது.
| |
பொது வேட்பாளர் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைப்பு
வருவதற்கான ஓர் காய் மாத்திரமே. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை காட்டிக் கொடுத்து, எமது கட்சியிலுள்ள
எந்தவொரு நபரும் எதிர்வரும் காலத்தில், அவர்களின் பக்கம் செல்ல மாட்டார்கள் என்பதனை
அமைச்சரவையிலுள்ள அமைச்சர் என்ற ரீதியில் நான் உறுதியாக கூறிக் கொள்கின்றேன்.”
“கட்சி தொடர்பில் இதுவரை ஓர் வேலைத்திட்டம் கிடையாது. ஜனாதிபதித் தேர்தல் என்பது
இலகுவான ஓர் விடயமல்ல. ஜனாதிபதி தேர்தலுக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு
முன்பிருந்தே தயாராக வேண்டும். ஆனால் தேர்தல் ஒன்றுக்கு தயாராவதற்கு
சுமார் 46 நாட்கள் மாத்திரமே அவர்களுக்கு இருக்கின்றது. இது இலகுவான விடயமல்ல.”
உரையாடியதை எங்களால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. பொது வேட்பாளர் என்பது இந்த
நாட்டுக்ேக புரியாத புதிராக காணப்பட்டது. தூதுவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாகவே
இந்த பொது வேட்பாளர் தெரிவு செய்யப்படுகின்றார் என்பதனை நாங்கள் அறிந்திருந்தோம். 40
பேர் வருவதாக கூறினார்கள். முதலில் 20 பேரின், பெயரை வெளிப்படுத்துவதாக கூறினார்கள்.
அதிகாலையிலிருந்து தொலைபேசியூடாக அழைப்புக்களை மேற்கொண்டார்கள். யாரும் வரவில்லை.
மிக சிரமத்திற்கு மத்தியில் 6 பேரை தமது கட்சியுடன் இணைத்துக் கொண்டார்கள். அவ்வாறு
சென்ற 6 பேரில் இருவர், மீண்டும் இந்த பக்கம் வந்து அமர்ந்துக் கொண்டால், ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றும் கிடையாது. அந்த பக்கம் சென்றவர்கள் தற்போது கவலையடைந்துள்ளனர்.”
| |
இந்து பயங்கரவாதிகளுடன் கைகோர்க்கும் விக்கி
11/23/2014
| |
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி சந்தாப்பணத்தில் கூலித்தொழிலாளிக்கு வீடு
11/22/2014
| |
பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்திற்கு எதிராகமனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
11/21/2014
| |
ஜனவரி மாதம் 8 ம் திகதி ஜனாதிபதி தேர்தல் - தேர்தல்கள் செயலகம் அறிவிப்பு
11/20/2014
| |
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி மஹிந்த!
அதன்படி, 4 வருட பதவிகாலம் முடிந்துள்ளதால் தேர்தல் ஒன்றை கோருவதோடு போட்டியிடவும் தயார் என தெரிவித்தும் தேர்தலுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தேர்தல்கள் ஆணையாளரிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.
ஜனாதிபதியால் கைச்சாத்திடப்பட்ட பிரகடனம் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| |
வருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி செய்யும் பாரிய இலக்கு
வருடாந்தம் ஒரு இலட்சம் மெற்றிக்தொன் உப்பை உற்பத்தி செய்யும் பாரிய இலக்கு
செயலாளர், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி
அபிவிருத்தி அமைச்சு