தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ. பி. ஆர். எல். எப். (சுரேஷ் அணி) புளொட், ரெலோ ஆகிய ஐந்து தமிழ்க் கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் புதிவு செய்யும் விடயத்தில் மீண்டும் அக்கட்சிக ளுக்கிடையில் பாரிய உட்கட்சிப் புசல்களும், வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளன.
கடந்த வாரம் லண்டன் சென்றிருந்த தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் கூட்டமைப்பை ஒருபோதும் பதிவு செய்யமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். அதேபோன்று வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று பிரதான கட்சிகளான புளொட், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எப்.
ஆகிய கட்சிகளை ஆயுதம் தாங்கிப் போராடிய வன்முறையாளர்களைக் கொண்ட கட்சிகள் எனக் கூறியிருந்தார். இவ்விரு விடயங்களும் அக் கூட்டமைப்பினுள் பாரிய உட்கட்சிப் பூசல்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது. தமிழ்க் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்ய வேண்டுமென தமிழரசுக் கட்சி தவிர்ந்த நான்கு கட்சிகளும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால் இது கூட்டமைப்பின் பிரதான கட்சியாகக் கூறப்படும் தமிழரசுக் கட்சியினால் தட்டிக் கழிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூட்டமைப்பு தனது கட்சியை ஓரங்கட்டுவதாகக் கூறி வி. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்கனவே அக்கூட்டமைப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ள நிலையில் இப்போது ஏனைய மூன்று கட்சிகளும் கூட்டமைப்பிலிருந்து விலகி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் இணைத்து பிறிதொரு கூட்டமைப்பாக இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்க் கூட்டமைப்பின் இன்றைய நிலை குறித்து அக்கட்சிக்கு வாக்களித்த மக்கள் தமது கவலையைத் தெரிவித்து வருகின்றனர். அக் கூட்டமைப்பிற்குள் இருக்கும் சிலரே இப்பிரிவினைக்குக் காரணம் எனவும் மக்களால் குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக தமிழரசுக் கட்சிக்குள் புதிதாக வந்த சிலரே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளை ஓரங்கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பாவித்து வருவதாகவும் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.