* மீண்டுவரும் செலவாக 13,650 மில்லியன் ரூபா, மூலதன செலவாக 1876 மில்லியன் ரூபா இவ்வருடம் ஒதுக்கீடு
* ஒதுக்கிய நிதிகளை பயன்படுத்தாது திண்டாட்டம்: மாகாணசபையுடன் தொடர்பற்ற 150 தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றம்
மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராஜh குற்றச்சாட்டு
மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராஜh குற்றச்சாட்டு
கடந்த ஒரு வருடகாலத்தில் வட மாகாண சபையில் மாகாண சபையுடன் தொடர்பற்ற சுமார் 150 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ள்ளதாக குறிப்பிட்ட அவர் தமக்கு ஒதுக்கும் பணத்தை பயன்படுத்தாமல் அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராஜா ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் அவர் தெரி வித்ததாவது,
இந்த வருடத்தில் வட மாகாண சபைக்கு மீண்டுவரும் செலவினமாக 13,650 மில்லியனும் மூலதன செலவாக 1876 மில்லியனும் ஒதுக்கப்பட்டது. இவற்றில் 25 வீதமே செலவிடப்பட்டிருக்கிறது.
நாட்டிலுள்ள ஏனைய 7 மாகாண சபைகள் கடந்த 25 வருடங்களாக இயங்கி வருகின்றன. மக்கள் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் வட மாகாண சபைக்கே கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர மத்திய அரசாங்கமும் வட மாகாண சபைக்கு பெருமளவு நிதியை செலவிடுகிறது. வடக்கில் 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரிய விகிதாசாரம் காணப்படுகிறது. ஏனைய மாகாணங்களில் 19.1 என்ற அடிப்படையே காணப்படுகிறது.
வட மாகாண சபைக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து ஆராய திறைசேரி செயலாளர் வடக்கிற்கு சென்ற போது முதலமைச்சரும் ஏனைய அமைச்சர்களும் அந்த கூட்டத்தை பகிஷ்கரித்தனர். ஆனால், அரசாங்கம் வடக்கிற்கு எதுவும் வழங்கு வதில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த ஒரு வருடத்தில் ஒதுக்கிய பணத்தை கூட முழுமையாக பயன்படுத்தாமல் தமது இயலாமையை மறைப்பதற்காக அரசின் மீது த.தே.கூ. பழிசுமத்துகிறது. ஆனால் எந்தப் பிரச்சினையுமின்றி அரசாங்க செலவில் புத்தம் புது வாகனங்களை மட்டும் முதலமைச்சரும், அமைச்சர்களும் வாங்கியுள்ளனர். இதனை மட்டும் கேட்டு வாங்கத் தெரிந்த த.தே.கூ. ஏனைய மக்கள் நல விடயங்கள் குறித்து வாய் திறக்காதுள்ளது.
இந்த ஒரு வருட பதவிக்காலத்தில் த.தே.கூ என்ன செய்தது என்பது குறித்து விவாதிக்க வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன். இதற்கு முன்னரும் இவ்வாறு முதலமைச்சருக்கும் மாகாண அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்தாலும் யாரும் அதற்கு தயாராக இல்லை.
ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் முக்கிய கூட்டங்களை ஏதாவது காரணம் கூறி பங்குபற்றாமல் தவிர்க்கும் இவர்கள் மக்களை உணர்ச்சி பூர்வமாக பேசி ஏமாற்றி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 ஆயிரம் காணி உறுதிகள் வழங்கப்பட்டதையும் கூட த.தே.கூட விமர்சிக்கிறது. நீதிமன்றம் கூட செல்லத் தயாராகியுள்ளது. ஆனால் வடக்கில் காணி பகிர்வதற்கு வடக்கு காணி ஆணையாளர் அதில் கையொப்பமிட்டி ருக்கிறார்.
கீழ்த்தரமான ஊடக விளம்பரத்திற்காக த.தே.கூ. வட மாகாண சபையை பயன்படுத்துகின்றது. வட மாகாண சபையில் கடந்த ஒரு வருடத்தில் ஜெனீவா மற்றும் மாகாண சபைக்கு அதிகாரமில்லாத விடயங்கள் பற்றிய தீர்மானங்களே நிறைவேற்றப்பட்டன.
இவையெல்லாம் ஊடகங்களினூடாக விளம்பரம் பெறவே செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இயங்கும் பெரும்பாலான ஊடகங்கள் அவர்களுக்கு சார்பாகவே இயங்குகின்றன. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கோரும் இவர்கள் இருக்கும் அதிகாரத்தை கூட பயன்படுத்தாதுள்ளனர்.
13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாண சபை தொடர்பான 37 விடயங்களில் சாலை பொலிஸ் அதிகாரங்கள் தவிர 35 விடயங்கள் இருக்கின்றன. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதை நாமும் வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் வட மாகாண சபைக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை கூட பயன்படுத்தாமல் அரசை குறை கூறுகிறது.
இராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேற்றுவதாக த.தே.கூ. கூறினாலும் மாகாண சபைக்கு அந்த அதிகாரம் கிடையாது. இது அரசியல் லாபம் பெற மக்களுக்கு அளித்த வாக்குறுதி மட்டுமே இராணுவத்தின் பிடியிலிருந்து 126 சதுர கிலோ மீற்றர் காணியில் 55 சதுர கிலோ மீற்றரே எஞ்சியுள்ளது.
இராணுவத்திடமிருந்த வீடுகளில் 647 வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. அவற்றையும் மீள வழங்க வேண்டும் என்று நாமும் கோரி வருகின்றோம். த.தே.கூ. அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.