10/02/2014

| |

அஹிம்சையை உலகுக்கு அறிமுகப்படுத்தி உண்மையே கடவுளென வாழ்ந்த பெருமகன்

மகாத்மா காந்தியின் ஜெயந்தி தினம் இன்று அனுஷ்டிப்பு
காந்தி வம்சத்தினர் மோத் பணியா என்ற உட் பிரிவுக்குள் அடங்குவர். பணியா என்றால் தந்திரமும் சாமர்த்தியமும் கொண்டவர்கள் என்பது வழக்காக இருந்த காலம். காந்தியின் தாத்தா உத்தம்சந்த் போர்ப்பந்தா சமஸ்தானத்தில் பிரதம மந்திரி பதவியை வகித்து பின்னாளில் துறந்திருக்கின்றார்.
இவருக்கு முதல் மூன்று மனைவிகளும் மரணமடைய நான்காவதாக மணந்துகொண்ட மனைவிக்கு நான்காவது மகன் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி. 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் திகதி போர்பந்தரில் அவர் பிறந்தார். இதே ஆண்டுதான் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. இதே ஒரு தினத்தில் தான் கால்மார்க்ஸ் மூலதனம் என்ற தமது புத்தகத்தை பிரசுரம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய நிலவரப்படி அன்று காந்தியின் வீடு செல்வ செழிப்பானதாகவே அமைந்திருக்கின்றது. காந்தி அரிச்சந்திரனின் ரசிகர். சத்திய சோதனையுடன் கூடிய அஹிம்சைப் போராளி ஆகும். ஆங்கிலேயர்களை அஹிம்சை போராட்டத்தின் மூலம் வெற்றிகொண்டவர். காந்தியை நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களே மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்க இப் பெயர் பின்னாளில் இவருக்கு பெரும் பெருமை சேர்த்தது எனலாம். ஆங்கி லேயர் காலத்தில் அடிமைகள் போல் நடத்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர் கடவுளின் குழந் தைகள் (ஹஜன்).
இவரது எதிர்காலம் மக்களின் விடுதலையை நோக்கி இருந்ததை அன்று யாரும் உணர்ந்திருக்கவில்லை. கடின உழைப்பு, எளிய வாழ்வு, நடைப்பயிற்சி, தியானம் என்பவற்றில் காந்தி மிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அத்துடன் நகைச்சுவையாக பேசும் வல்லமையையும் பெற்றிருந்தார். 1931 இல் லண்டன் சென்று ஆறாம் ஜோர்ஜ் மன்னரைச் சந்தித்து விட்டு பக்கிங்ஹாம் அரண்மனையை விட்டு வெளியில் வந்தபோது பத்திரிகையாளர்கள் இவரை சூழ அதில் ஒரு பத்திரிகையாளர் இவ்வளவு குறைவான ஆடையுடன் காட்சி தரும் உங்களுக்கு குளிரவில்லையா என கேட்க அதற்கு ‘எனது ஆடையையும் சேர்த்து மன்னர் உடுத்திருக் கின்றார். எனக்கு இதுபோதுமான’ என்று நகைச்சுவையாக தெரி வித்தாராம்.
காந்தியடிகள் போராட்டத்தின்போது சொன்ன மொழிகளில் செய் அல்லது செத்துமடி, கொள்கை இல்லா அரசியல் தேவையில்லை. கொள்கை இல்லாத அரசியல், வேலை செய்யாமல் வரும் செல்வம், மனச்சாட்சிக்கு விரோதமான இன்பம், நியாயம் இல்லாத வணிகம், மனிதம் இல்லாத அறிவியல் தியாகம் இல்லாத அறிவியல், வழிபாடு பண்பு இல்லாத அறிவு இவை காந்தியின் சமூகப் பண்புகள் எனலாம். மேலும் காந்தி தான் எழுதிய கடிதங்களை நன்றாக தூய்மையாக மடித்தபின்பே தபாலில் இடுவார்.
நாம் இன்று எழுதிக் கொண்டிருக்கும் நாட்குறிப்பு காந்தி பின்பற்றியதென சொல்ல முடியும். காந்தி நாட்குறிப்பு எழுதுவதில் மிகுந்த பற்றுக்கொண்டவர். இது வாழ்வின் வெற்றி க்கு வித்திடும் எனக் கருதி இருக்கின்றார். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் காந்தி வந்ததாக உள்ள வசனம் யாரையும் உடலளவில் காயப்படுத்தக் கூடாது என்பதாகும். அவர்களை (வெள்ளையரை) நாங்கள் எதிர்க்கவில்லை. அவர்கள் எங்கள் மீது திணிக்கும் அதிகாரத்தைத் தான் எதிர்க்கின்றோம் என மக்கள் முன் எடுத்துச் சொன்னார். காந்தியடிகள் தான் தவறு செய்தால் மெளன விரதம் ஏற்பதும், பிறர் தவறு செய்தால் அவர்கள் அதை உணர வைப்பதற்காகவே உண்ணா விரதம் பூண்டு இருந்துள்ளார்.
விடுதலைப் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் உண்மையே கடவுள் எனக் கொண்டிருந்தார். காந்தியடிகள் ஒருபோதும் சென்றிருக்காத அமெரிக்க தேசம் தான் காந்தியின் உருவத்தை தபால் தலையாக வெளியிட்டது. இது 1961 ஜனவரி 26 இல் இடம்பெற்றிக்கின்றது. மாட்டின் லூதர்கிங் தலாய்லாமா, ஆங்சான் சூகி, நெல்சல் மண்டேலா, அடால் போ பெரேஸ் எக்ஸ்கியுவெவ் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு காந்தி அடிகளின் அஹிம்சை வழியை பின்பற்றி இருந்ததே என சொல்லப்பட்டிருக்கின்றது.
மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அதைக்கொண்டாட மறுத்தவர்களில் ஒருவர் காந்தி. மற்றவர் தந்தை பெரியார். காந்தி பிறந்த போர்பந்தரில் சபர்மதி ஆச்சிரமத்தின் நினைவான இந்திய அரசு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் அக்காலத்தில் விடப்பட்டது. இறுதியாக, கனவில் இருந்து நிஜத்துக்கு இருளில் இருந்து வெளிச்சத்திற்கு மரணத்திலிருந்து அமரத்துவதற்கு என காந்தி நினைவு மண்டபத்தில் எழுதி வைக்கப்பட்டு உள்ளதை இன்றும் காணமுடியும். மேலும் காந்தியடிகள் 1906 இல் தனது முதலாவது சத்தியாக்கிரகத்தை வெள்ளையர்கள் ஆக்கிய பதிவுச் சட்டத்தை எதிர்த்து நடாத்தி இந்தியாவில் 1924 ஆம் ஆண்டு ஏற்பட்ட இந்து, முஸ்லிம் கலவரத்தின்போது 21 நாட்கள் உண்ணா நோன்பிருந்து அமைதியை நிலைநாட்டினார்.
இன்று உலக நாடுகளின் சுதந்திர போராட்டங்களைப் பார்க்கையில் பிணக் குவியல்களும், இரத்த ஆறுகளும் ஓடிய வரலாற்றுப் பதிவுகளே உள்ளன. இதற்கு முற்றிலுமாக இந்தியா அஹிம்சை மூலம் பெற்ற சுதந்திரம் நிலையானதாகவே உள்ளது. மனிதருள் மாணிக்கமான காந்தியை 1948 ஜனவரி 30ம் திகதி பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மேடைக்கு அருகில் விநாயக நாதுராம் கோட்ஸே சுட்டான். அன்று ஒரு வெள்ளிக்கிழமை ஹரேராம் ஹரேராம் என்று உச்சரித்தபடி ஞானமே வடிவான காந்தியின் உயிரை காலன்கொண்டு சென்றுவிட்டான். ஆனால் இன்றும் அவரது புகழும் அஹிம்சையும் சத்தியவாக்கும் நிலைத்திருந்து எம்மையும் ஏன் உலகையும் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றது.