யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகின்றன. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதன் முதல் அங்கமாக பளையில் இருந்து யாழ்தேவி இன்று யாழ்ப் பாணத்துக்கு பயணம் செய்கிறது.
பளையிலிருந்து யாழ்ப்பாணம்வரை ரயிலில் பயணிக்கும் ஜனாதிபதி, கொடிகாமம் மற்றும் நாவற்குழியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையங்களையும் திறந்துவைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து ரயிலில் பயணிக்கும் அவர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தைச் சென்றடைந்து புனரமைக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார்.
இன்று முற்பகல் 9.30 மணிக்கு பளையிலிருந்து ரயிலில் புறப்படும் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் 10.30 மணிக்கு யாழ் ரயில் நிலையத்தைச் சென்றடையவுள்ளனர்.
கொழும்புக்கும் பளைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டிருக்கும் யாழ் தேவி ரயில் சேவை இன்று முதல் யாழ்ப் பாணம்வரை சேவையைத் தொடர்கிறது. பயணிகளின் வசதி கருதி கொழும்பு புறக்கோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மட்டுப்படுத் தப்பட்டிருந்த ரயில் சேவை கல்கிஸ்சை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கல்கிஸ்சையிலிருந்து தினமும் நகரங்களுக்கிடையிலான இரண்டு கடுகதி ரயில் சேவைகள் (இண்டர்சிட்டி) ஆரம்பமாகவிருக்கும் அதேநேரம், யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கும் இரண்டு ரயில்கள் கல்கிஸ்சையை வந்தடையும். இதனைவிட புறக்கோட்டையிலிருந்து மேலும் இரண்டு ரயில் சேவைகள் யாழ்ப்பாணத்துக்கு தினமும் இடம்பெறும்.
சுமார் 25 வருடங்களின் பின்னர் யாழ்தேவி ரயில் சேவை யாழ்ப்பாணத்துக்கு ஆரம்பிக்கப்பட்டிருப்பதானது வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேலும் பலப்படுத்தியிருப்பதுடன், யாழ் குடாநாட்டின் பொருளாதாரத்துக்கு மேலுமொரு உந்துசக்தியாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அபிவிருத்திக்குழுக் கூட்டம்
ரயில் சேவையை ஆரம்பித்துவைக்கும் ஜனாதிபதி, முற்பகல் 11 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கும், அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கும் தலைமைதாங்கவுள்ளார்.
பிற்பகல் 2.15 மணிக்கு 2 ஆயிரம் அரசாங்க பொது ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 4.30 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரிக்குச் சென்று அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மஹிந்தோதய ஆய்வுகூடத்தையும், அதனைத் தொடர்ந்து யாழ் இந்து மகளிர் கல்லூரியிலுள்ள மஹிந்தோதய ஆய்வுகூடத்தையும் ஜனாதிபதி தனது கரங்களால் திறந்துவைக்கின்றார்.
தீவகத்துக்கு விஜயம்
நாளை யாழ் தீவகப் பகுதிகளுக்குச் செல்லும் ஜனாதிபதி, நாகவிகாரையிலும், நயினை நாகபூஷனி அம்மன் ஆலயத்திலும் விசேட வழிபாடுகளில் ஈடுபடுகிறார். முற்பகல் 10 மணிக்கு நெடுந்தீவு செயலகக் கட்டடத் தொகுதியையும், நெடுந்தீவு மகாவித்தியாலய மஹிந்தோதய ஆய்வுகூடத்தையும் திறந்துவைக்கின்றார்.
அங்கிருந்து வேலணை செல்லும் ஜனாதிபதி, வேலணை பிரதேச செயலகக் கட்டடத்தொகுதியையும், பிற்பகல் ஊர்காவல்துறை அன்ரனிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய ஆய்வுகூடத்தையும் திறந்துவைக்கவுள்ளார். இது மட்டுமன்றி காரைநகர் மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மேலும் இரண்டு பாடசாலைகளில் மஹிந்தோதய ஆய்வுகூடங்களையும் அவர் திறந்துவைக்கின்றார்.
கிளிநொச்சியில் அபிவிருத்தித் திட்டங்கள்
முன்னதாக நேற்றையதினம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2000 பேருக்கு நஷ்ட ஈடுவழங்கிவைத்தார். இந்நிகழ்வு இரணைமடு நெலும்பிளாசாவில் நடைபெற்றது.
கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்ற மற்றுமொரு நிகழ்வில் 20,000 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களையும், தங்க நகைகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
இதுதவிர வட்டக்கச்சி மகாவித்தியாலயம் மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி ஆகிய வற்றில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்தோதய ஆய்வு கூடங்களையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.
அக்கராயன் பிரதேச வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் புதிய கட்டடம் ஆகியவற்றையும் ஜனாதிபதி நேற்றுத் திறந்துவைத்தார். இந்த நிகழ்வுகளில் அமைச் சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன், சந்திரசிறி கஜதீர, பீலிக்ஸ் பெரேரா, பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், ஏ.எச்.எம்.அஸ்வர் எம்பி, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.